Vendhu Thanindhathu Kaadu: 'வெந்து தணிந்தது காடு' திரை விமர்சனம்
கதையோட நாயகன் முத்துவீரனா சிலம்பரசன் , ஒரு அப்பாவி இளைஞராகவும் , கோவரக்கார இளைஞராகவும் நடிப்புல வித்தியாசம் காட்டி தன்னோட எதார்த்தமான நடிப்பால நம்மளை மிரள வைக்கிறாரு.ஆக்ஷன்,ரொமான்ஸ்,செண்டிமெண்ட்ன்னு பல இடங்கள்ல சிங்கிள் ஷாட்ல அசத்தி பட்டையை கிளப்பியிருக்காரு.....
சரி விமர்சனத்தை பார்ப்போம் வாங்க.....
வெந்து தணிந்தது காடு படத்தின் ஹீரோவான முத்துவீரனுக்கு(சிம்பு) வாழ்க்கையில் கஷ்டங்களை பார்த்து பழகிவிட்டது. அவரின் வாழ்க்கை மிகவும் கரடுமுரடானது. அம்மா லட்சுமி(ராதிகா), சகோதரி கோமதியை நல்லபடியாக வைத்துக் கொள்ள நிழல் உலகிற்கு செல்லவும் தயாராக இருக்கிறார் முத்துவீரன்.
நிழல் உலகில் இருக்கும் ஆபத்து குறித்து அங்கு செல்வதற்கு முன்பே தெரிந்து கொள்கிறார். தன் உறவினர் ஒருவரின் மரணத்தால் அவருக்கு நிழல் உலகின் ஆபத்துகள் தெரிய வருகிறது. நல்ல வாழ்க்கை கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் தமிழகத்தில் இருந்து மும்பைக்கு சென்று தாதா கார்ஜிக்கு சொந்தமான பரோட்டா கடையில் வேலைக்கு சேர்கிறார் முத்துவீரன். கார்ஜி மற்றும் குட்டி கிருஷ்ணன் நாயருக்கு(சித்திக்) இடையேயான மோதலில் சிக்கிக் கொள்கிறார் முத்துவீரன்.
இதற்கிடையே முத்துவீரனுக்கு பாவை (சித்தி இத்னானி) மீது காதல் ஏற்படுகிறது. காதலுக்கு பிறகாவது நிழல் உலக ஆபத்தில் இருந்து வெளியே வருவாரா? வந்தாரா? என்பது படத்தின் மீதி கதை.....
இயக்குனர் கெளதம் மேனன் இந்த முறை வித்தியாசமான ஒரு ஸ்கிரிப்ட் தன்னோட பாணியை விட்டு வெளிய வந்து எடுத்துருக்காரு.
சித்தி இத்னானி வழக்கமான தமிழ் சினிமா ஹீரோயினா வர்றாங்க , ரெண்டு பாட்டு,ஒரு கடத்தல் சீன்-ன்னு வழக்கமான Template-ல நடிச்சுட்டு போயிருக்காங்க.ராதிகா சரத்குமார்,அப்புக்குட்டி,நீரஜ் மாதவ் இன்னும் பல நடிகர்கள் நடிச்சிருக்காங்க.
கிளைமாக்ஸ்ல வைக்குற பார்ட் 2-வுக்கான லீட் பாக்குறதுக்கு ஸ்டைலாக இருந்தாலும், இந்த படத்துல லவ் போர்ஷன் வர்றது சேர்த்துருக்கணுமான்னு ஒரு கேள்வியை எழுப்புது......
மொத்தத்தில் இந்த 'வெந்து தணிந்தது காடு' ரசிகர்களின் ஆர்வத்தை தணிக்கும்.....
கருத்துரையிடுக