"கிடா" திரைவிமர்சனம்
ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைத்தன்யா தயாரிக்க, அறிமுக இயக்குநர் ரா.வெங்கட் உருவாக்கத்தில், பூ ராமு, காளி வெங்கட், மாஸ்டர் தீபன், பாண்டியம்மா, லோகி, கமலி, உள்ளிட்டோர் நடித்துள்ள படம் தான் "கிடா".
சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்!
விவசாயி பூஇராம், தீபாவளிப் பண்டிகைக்கு தன் பேரனுக்காகப் புத்தாடை வாங்க ஆசைப்படுகிறார். வறுமை அதற்கு வாய்ப்பளிக்கவில்லை. எனவே, வீட்டில் இருக்கும் ஆட்டை விற்று அந்தப்பணத்தில் புத்தாடை வாங்க நினைக்கிறார்.
இந்நிலையில் அது சாமிக்கு நேர்ந்து விட்ட கிடா என்று கூறி ஒருவரும் வாங்க மறுக்கின்றனர். மற்றொருபுறம், கோழி மற்றும் ஆடு கறி வெட்டிக் கொடுக்கும் கூலி வேலை செய்து வருகிறார் காளி வெங்கட். இவருக்கு திருமண வயதில் ஒரு மகன் இருக்கிறார். பல வருடங்களாக வேலை பார்த்த இடத்தில் தகராறு ஏற்பட, சொந்தமாக தீபாவளி தினத்தில் கறி வெட்டி தொழிலை தொடங்குவதாக சவால் விடுக்கிறார் காளி வெங்கட்.
அதற்காக, கிடாவை தேடி அலைகிறார். பலரும், காளி வெங்கட்டை நம்பி கிடாவை கொடுக்க மறுக்கிறார்கள். கடைசியாக, பூராமின் கிடாவை வாங்குவதாக கூறிவிடுகிறார். இதனால், தீபாவளிக்கு தனது பேரனுக்கு துணி எடுத்துக் கொடுத்துவிடலாம் என்று பூ ராமும், கேலி பேசிய ஊர் முன்னாள் கிடா’வை வெட்டி தனது தொழிலை தொடங்கி விடலாம் என்றும் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் கிடா திருடு போய்விடுகிறது.
பிறகு என்ன நடந்தது என்பதே கதை......
லட்சுமி, பாண்டி, ஜோதி, ராஜா, கருப்பு, ஆனந்த்,ஜெய், தேவா, சங்கிலி ஆகிய படத்தில் நடித்திருக்கும் மற்ற நடிகர்களும் பொறுப்புணர்ந்து நடித்திருக்கிறார்கள். தீசனின் இசை அற்புதம். ஜெயப்பிரகாஷின் ஒளிப்பதிவு தத்ரூபம். ஆட்டின் கண் அசைவு, ஆடு திருடர்களை பிடிக்கச் செல்லும் போது எடுக்கப்பட்ட காட்சி எதார்த்தம் என அனைத்தும் சிறப்பு தான்.
மொத்தத்தில் இந்த கிடா தீபாவளிக்கு விருந்து தான்......
RATING: 4/5
கருத்துரையிடுக