ANDHAGAN MOVIE REVIEW

ANDHAGAN MOVIE REVIEW: அந்தகன் படம் எப்படி இருக்கு?!


 


பிரசாந்த், சிம்ரன், பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிப்பில் தியாகராஜன் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் அந்தகன். இந்தியில் அந்தாதூன் என்ற பெயரில் இந்த கதை வரவேற்பு பெற்றது. 

சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்: 

பெரிய பியானோ கலைஞன் ஆக விரும்பும் கிருஷ்ணா, பியானோ பயிற்சியில் மிகத் தீவிரமாக இறங்குகிறார். இசையில் முழு கவனத்தை செலுத்தவும், பிறரின் அனுதாபம் பெறவும் பார்வையற்றவர்போல் நடிக்கிறார். 

இந்த பார்வையற்ற கிருஷ்ணாவின் முன்னிலையில் ஒரு கொலை அரங்கேறுகிறது. கொலையாளிகள் இவர் பார்வையற்றவர் என்பதால் இவரை விட்டுவிடுகின்றனர். உண்மை தெரிந்த, கொலைக்கு சாட்சியான கிருஷ்ணா என்ன செய்தார்? சந்தேகம்கொள்ள ஆரம்பிக்கும் கொலையாளிகள் இவரை என்ன செய்தார்கள் என்பதே கதை...... 

பிரசாந்த் கண்தெரியாதவர்களைப் போன்ற கமெர்ஷியல் நடிப்பையும், கொலையாளிகளிடம் பயத்தைக் காட்டிக்கொள்ளாமல் நடிப்பதும், அவர்களிடமிருந்து தப்பித்தவுடன் அவரின் பயந்த நடிப்பும் சிறப்பு. 

சிம்ரன், பிரியா ஆனந்த், யோகிபாபு, ஊர்வசி,  சமுத்திரக்கனி, வனிதா விஜய்குமார் ஆகியோர் தனது நடிப்பை வழங்கி கவனம் பெறுகின்றனர். இறுதியில் வரும் ‘என் காதல்’ பாடல் ஓகே. திரைக்கதையின் அடர்த்தியைக் கூட்டும் ரவி யாதவ் ஒளிப்பதிவும், சதீஷ் சூர்யாவின் படத்தொகுப்பும் படத்துக்கு பலம். 

இசையில் கூடுதல் கவனம் தேவை... கதையில் விறுவிறுப்பை மேலும்  கூட்டியிருக்கலாம்.... கிளைமேக்ஸ் காட்சியை இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கலாம்.... 

மொத்தத்தில் இந்த 'அந்தகன்' இசை குருடன்....

RATING: 3.2/5


அந்தகன் விமர்சனம் ANDHAGAN MOVIE ANDHAGAN PUBLIC REVIEW

லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.