'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' விமர்சனம்
தனுஷ் இயக்கத்தில் R சரத்குமார், சரண்யா பொன்வண்ணன், 'ஆடுகளம்’ நரேன், உதய் மகேஷ், ஶ்ரீதேவி, பவிஷ் நாராயண், அனிகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ், பிரியா P வாரியர், வெங்கடேஷ் மேனன், ரம்யா ரங்கநாதன், மற்றும் பலர் நடித்துள்ள படம் தான் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்'
சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்:
படம் காதல் தோல்வி பாடலில் தொடங்குகிறது. காதல் தோல்வியை கடந்து செல்ல முடியாமல் தவிக்கும் இளைஞன், பிரபு (பவிஷ்). இவனுக்கு கால் கட்டு போட வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கின்றனர் இவனது பெற்றோர் (சரண்யா-ஆடுகளம் நரேன்). இதற்காக அவன் பார்க்கும் பிரீத்தி (பிரியா வாரியர்) கடைசியில் அவனது பள்ளி தோழியாக இருக்கிறார்.
இருவரும் பேசி பழக டைம் கேட்கின்றனர். திடீரென பிரபுவிற்கு அவனது முன்னாள் காதலியான நிலாவின் திருமண அழைப்பிதழ் வருகிறது. இதனால் தனது காதல் குறித்தும், காதல் தோல்வி குறித்தும் கதை சொல்ல ஆரம்பிக்கிறார் ஹீரோ. பணக்கார பெண் நிலா-நடுத்தர குடும்பத்தை சேர்ந்த சமையல் கலை பயிலும் பிரபு, இருவரும் காதலிக்கின்றனர்.
இவர்களுக்கு இடையில் நிலாவின் பணக்கார அப்பா சரத்குமார் வில்லனாக வர, அங்கிருந்து இவர்களுக்கு பிரச்சனை ஆரம்பிக்கிறது. நிலாவின் நலனுக்காக பிரபு அவளை விட்டு பிரிய, இருவருக்கும் பிரேக்-அப் ஆகிறது. இந்த கதையை கேட்கும் பிரீத்தி, திருமணத்திற்கு செல்லுமாறு பிரபுவிடம் சொல்கிறார். நிலாவுடன் வந்தால், அவளுடன் வாழ்க்கை, தனியாக வந்தால் பிரீத்தியுடன் வாழ்க்கை என்ற முடிவுடன் திருமணத்திற்கு செல்கிறான் ஹீரோ. பிறகு என்ன நடந்தது? என்பதே கதை....
ஹீரோ, ஹீரோயினை தாண்டி அனைவரையும் கவர்ந்த ஒரு கதாபாத்திரம் என்றால், அது மேத்யூ தாமஸ் நடித்த ராஜேஷ் கதாபாத்திரம்தான். சரத்குமார், சரண்யா பொன்வண்ணன், ஆடுகளம் நரேனின் அனுபவ நடிப்பு படத்திற்கு பலம். ஜி.வி. பிரகாஷின் பின்னணி இசை ஓகே. பிரியங்கா மோகன் நடனம் சிறப்பு. பவிஷ், ரப்பியா கத்தூண், வெங்கடேஷ் மேனன், ரம்யா ரங்கநாதன் ஆகியோர் அறிமுகப் படத்திலேயே தங்களால் முடிந்த அளவுக்கு பெஸ்ட்-ஐ கொடுத்துள்ளனர். ஒளிப்பதிவு, பாடல்கள், கலை இயக்கம் என அனைத்தும் சரியாக உள்ளது.
செண்டிமெண்ட் காட்சிகள் மனதை பாதிக்கவில்லை.... கதையை இன்னும் கொஞ்சம் தெளிவாக சொல்லியிருக்கலாம்.
மொத்தத்தில் இந்த 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' கலகலப்பு
RATING 4/5
கருத்துரையிடுக