தொடரும் விமர்சனம்
Rejaputhra Visual மீடியா நிறுவனம் தயாரிப்பில் மோகன்லால், பிரகாஷ் வருமா, பர்கான் பாசில், பாரதிராஜா, இளவரசு ஆகியோர் நடித்துள்ள படம் தான் 'தொடரும்'
சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்:
தேனியில் வாடகை கார் ஒட்டுனராக இருக்கும் மோகன்லால், மனைவி ஷோபனா மற்றும் மகன் மகளுடன் மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருகிறார். இவர் பழைய மாடல் அம்பாசிடர் காரை தனது இரண்டாவது மனைவி போல் பாவித்து வருகிறார். மோகன்லால் காரை மெக்கானிக் ஷாப்பில் விட்டிருந்தபோது கஞ்சா கடத்தியதாக அவரது காரைபோலீஸ் நிலையம் கொண்டு செல்கின்றனர்.
இதை அறிந்த மோகன்லால் போலீஸ் நிலையம் சென்று காரை திரும்ப பெற போகும்போது இன்ஸ்பெக்டர் பிரகாஷ் வர்மாவும் சப் இன்ஸ்பெக்டரும் இணைந்து மலைப் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்துக்கு செல்ல வேண்டும் என அழைத்து செல்கின்றனர்.
அப்போது மோகன்லாலுக்கு தெரியாமல் கார் டிக்கியில் இருந்த ஒரு சடலத்தை இன்ஸ்பெக்டர் பிரகாஷ் வர்மாவும் சப் இன்ஸ்பெக்டர் பினு பப்புவும் திடீரென மலைப்பகுதியில் வீசுகின்றனர். அந்த சடலம் யார்? பின்னணி என்ன? என்பதே கதை...
மோகன்லால் சாதாரண அம்பாசிடர் டிரைவராகவும், பொறுப்பான குடும்பத் தலைவனாகவும் நடித்து அசத்தி இருக்கிறார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆக வரும் பிரகாஷ் வருமா வில்லனாக நடித்து அசத்தி இருக்கிறார். போலீசாக பர்கான் பாசில் மற்றும் தாமஸ் மேத்யூ சிறப்பு தோற்றத்தில் வரும் பாரதிராஜா, இளவரசு ஆகியோர் நடிப்பு கதைக்கு பக்கபலமாக நடித்து இருக்கிறார்கள். ஆனால்
சில லாஜிக் மீறல்கள் இருக்கின்றன....
மொத்தத்தில் இந்த 'தொடரும்' மனதை தொடும்.
RATING: 3.1/5
கருத்துரையிடுக