MARGAN MOVIE REVIEW

மார்கன் விமர்சனம் 



Casting : Vijay antony, Ajai Deeshan, Mahanadhi Shankar, Samuthrakani, Ramachandran, Brigida, Deepshika, Archana, Kanimozhi

Directed By : Leo John Paul

Music By : Vijay Antony

Produced By : Vijay Antony Film Corporation - Fatima Vijay Antony


சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்:


சென்னையில் ஒரு இளம்பெண் ஊசியால் குத்தப்பட்டு மரணம் அடைகிறார். உடல் முழுவதும் கருப்பாகி வித்தியாசமான முறையில் இறக்கும் அந்த பெண்ணின் கொலை பற்றி காவல்துறையினர் தீவிரமாக விசாரிக்க ஆரம்பிக்கின்றனர். இதே போன்று ஒரு வழக்கை மும்பையில் விஜய் ஆண்டனி  விசாரிக்கிறார். சென்னையில் இதே சம்பவம் அரங்கேறிய நிலையில் அதை பார்த்து சென்னைக்கு வந்து தனது முழு விசாரணையை தொடங்குகிறார் விஜய் ஆண்டனி. அந்த கொலையாளி யார்? என்பதை விசாரிக்கும் விஜய் ஆண்டனிக்கு அதிர்ச்சி அளிக்கும் பல விஷயங்கள் தெரிய வருகிறது. அது என்ன? யார் அந்த கொலையாளி? ஏன் செய்தார்? என்பதே கதை.....


விஜய் ஆண்டனி நடிப்பு எதார்த்தம் கலந்த ஆக்க்ஷன். இன்ஸ்பெக்டராக பிரிகிடா சகா தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை செய்துள்ளார். சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், ராமச்சந்திரன், தீப்ஷிகா, அர்ச்சனா, கனிமொழி என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் நடிகர்கள் திரைக்கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறார்கள். 


எஸ்.யுவாவின் கேமரா கிரைம் திரில்லர் பாணிக்கு ஏற்ப பணித்திருக்கிறது. கதை விறுவிறுப்புக்கு குறையில்லாமல் செல்கிறது. தண்ணீர் அடியில் சென்று குற்றவாளிகளை அடையாளம் காட்டும் காட்சிகள் புதிதாக இருக்கிறது.


ஊசி காட்சியில் சில மாற்றங்களை வைத்திருக்கலாம்..... சில காட்சிகள் குழப்பமாக அமைகிறது....


மொத்தத்தில் இந்த 'மார்கன்' சிறந்த திரில்லர் கலவை.....    


RATING: 3.5/5


MARGAN MOVIE REVIEW | MARGAN MOVIE | VIJAY ANTONY MOVIE | MARGAN CREW | MARGAN STORY | MARGAN SONGS | MARGAN VIMARSANAM | MARGAN | TAMIL LIVE NEWS

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.