ஆரோமலே விமர்சனம்
மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் சாரங் தியாகு இயக்கத்தில் நடிகர்கள் ஹர்ஷத் கான், ஷிவாத்மிகா ராஜசேகர், மேகா ஆகாஷ், வி.டி.வி கணேஷ், துளசி, சந்தான பாரதி, சிபி ஜெயக்குமார், நம்ரிதா எம்.வி, சந்தியா வின்ஃப்ரெட் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் 'ஆரோமலே'
சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்:
கிஷன் தாஸ் மற்றும் ஹர்ஷத் கான் சிறுவயதிலிருந்தே நண்பர்களாக உள்ளனர். கிசன் தாஷிற்கு பள்ளி பருவத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை பார்த்த பிறகு அவருக்குள் காதல் மலர்கிறது. அதன் பிறகு பள்ளி மற்றும் கல்லூரிகளில் காதல் செய்கிறார், ஆனால் அது தோல்வியில் முடிவடைகிறது. பிறகு அவரது தந்தையின் கட்டாயத்தின் பேரில் ஒரு பிரபல மேட்ரிமோனி நிறுவனத்தில் வேலைக்கு சேர்கிறார். அங்கு அவருக்கு மேலாளராக வரும் ஷிவாத்மிகாவை பார்த்தவுடன் பிடித்துப் போகிறது. ஆனால் அவருக்கு காதல் என்றாலே பிடிக்காது. பிறகு காதல் ஆனதா? மோதல் ஆனதா? என்பதே கதை... (TAMIL LIVE NEWS)
கிஷனின் பள்ளிக் காலம் தொட்டு அவரது நண்பராக இருக்கும் ஹர்ஷத் கானின் அசால்ட்டான காமெடியும், நடிப்பும் படத்தைத் தொய்வில்லாமல் கொண்டு செல்கிறது. இயக்குனர் சாரங் தியாகு காமெடி மற்றும் காதல் நிறைந்த ஒரு கதையில் ஒரு சின்ன மெசேஜையும் சொல்ல முயற்சி செய்துள்ளார் அதில் கிட்டத்தட்ட வெற்றியும் பெற்றுள்ளார் என்று சொல்லலாம்.
மூன்று பருவ நிலைகளில் வரும் கிஷன் கதையோடு பொருந்தி இருக்கிறார் என்றே சொல்லலாம். கதாநாயகி ஷிவாத்மிகா ராஜசேகர் ஆரம்பக் காட்சிகளில் சற்று தடுமாறினாலும் போகப்போக அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் வாழ்ந்துள்ளார். கிஷனின் அம்மாவாக வரும் துளசியும், அப்பா முத்துராமனும் அதிகமாகக் கவர்கிறார்கள். கதைக்களம் கொஞ்சம் புதிதாக இருக்கிறது. ஆனால்
இரண்டாம் பாதி கதை மெதுவாக செல்கிறது.... அடுத்து என்ன நடக்க போகிறது என்பதை கணிக்க முடிகிறது....
மொத்தத்தில் இந்த 'ஆரோமலே' காதல் நினைவு....
RATING: 3.2/5

கருத்துரையிடுக