"யூத்" விமர்சனம்
கென் கருணாஸ் இயக்கி, ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் தான் "யூத்" ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்க, சுராஜ், தேவதர்ஷினி, அனிஷ்மா அனில்குமார், மீனாட்சி ஆகியோர் நடித்துள்ளனர்.
சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்!
பள்ளி மாணவனான கென் படிப்பில் துளி நாட்டமும் இல்லாமல் பாஸ் ஆகக்கூடிய அளவிற்கே படித்து வருகிறார். அவரின் அம்மாவான தேவதர்ஷினி மகனைச் செல்லமாக வளர்ப்பதுடன் அவர் என்ன செய்தாலும் ஆதரவு கொடுக்கும் அம்மாவாக இருக்கிறார். இதற்கு நேர் எதிரான அப்பாவாக சுராஜ் வெஞ்சரமூடு. மகனைக் கண்டாலே ஆகாது என்கிற அளவிற்கு மட்டம் தட்டிக்கொண்டு இருப்பவர். காரணம், கென்னின் சேட்டைகள்! அழகான பள்ளிகால வாழ்க்கையில் கென்னுக்கு இருக்கும் ஒரே ஆசை, பள்ளியிலிருந்து திருமணம் வரை காதலைக் கொண்டு செல்ல வேண்டுமென்பதுதான். அப்படியே, ஒரு காதல் அமைகிறது. தன் நண்பர்களுடன் ஜாலியாக இருப்பதும் காதலில் மிதப்பதுமாக இருக்கிறார். அச்சூழலில் சில திருப்பங்கள் நிகழ்கின்றன. பள்ளியில் மோசமான பெயர் கிடைக்க இறுதியில் கென் என்னவானார்? என்பதே மீதி கதை....
ஹீரோவாக அறிமுகமாகியுள்ள கென் கருணாஸ் துள்ளலான நடிப்பில் பக்காவான யங் கமர்ஷியல் ஹீரோவாக திரையில் தெரிகிறார். நடனம், நகைச்சுவை, எமோஷ்னல், ஆக்ஷன் என அனைத்திலும் பட்டையை கிளப்புகிறார்.
படத்தில் மிடில் க்ளாஸ் மக்களை தொடும் வகையில் வைத்திருந்த எமோஷ்னல் காட்சிகள், படிப்பு எவ்வளவு முக்கியம் என சொன்ன காட்சி, காதல் என்றால் எதிர்பார்ப்பு இல்லாமல் வருவது எதிர்பார்ப்புடன் வருவது அல்ல என சொன்னது போன்ற பல காட்சிகள் சிறப்பாக இருந்தது.
அதே போல், படத்தில் எங்கு தொய்வு வந்தாலும், அங்கு தனது பின்னணி இசையாலும், பாடல்களாலும் என்டர்டைன் செய்கிறார் இசையமைப்பாளர் ஜி.வி.
கதை நம்மை பள்ளி வாழ்க்கையை நினைவுப்படுத்தும். ஆனால்
கதையை இன்னும் கொஞ்சம் புதுவிதமாக எடுத்திருக்கலாம்.... காமெடியில் கூடுதல் கவனம் தேவை....
மொத்தத்தில் இந்த "யூத்" கலாட்டா கலந்த வலி.
RATING : 4/5

கருத்துரையிடுக