JANANAYAGAN MOVIE REVIEW

ஜனநாயகன் விமர்சனம்: தொடர் அவுஸ்புல்!!  



ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜனநாயகன்’. இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், பிரகாஷ்ராஜ், பிரியாமணி, நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்: 

கைதியாக சிறையில் இருக்கிறார் தளபதி வெற்றிக் கொண்டான் (விஜய்). காவல்துறைக்கு அவர் செய்யும் உதவிக்கு கைமாறாக, மரண தருவாயில் இருக்கும் அவரது தாயை சந்திக்க ஏற்பாடு செய்கிறார் அதிகாரி ஸ்ரீகாந்த் (கௌதம் வாசுதேவ் மேனன்). அதனால் அவர் சஸ்பெண்ட் ஆகிறார். விபத்தில் ஸ்ரீகாந்த் இறந்துவிட, அவரது மகள் விஜியை தனது மகளாக எடுத்து வளர்க்கிறார் தளபதி வெற்றிக் கொண்டான். 

விஜியை ராணுவத்தில் சேர்க்க வேண்டும் என்ற அவரது தந்தையின் கனவை நனவாக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் தளபதி. இதனிடையே அரசியல்வாதிகளுடன் சேர்ந்து தன் சுயலாபத்துக்காக தமிழ்நாட்டை அழிக்க நினைக்கிறார் சர்வதேச குற்றவாளி ஜான் ஹிம்லர் (பாபி தியோல்). இப்படியான சூழலில், அவர்களின் சதித்திட்டத்தை முறியடித்து, தமிழகத்தை தளபதி வெற்றிக் கொண்டான் எப்படி மீட்டார்…? விஜி ராணுவ அதிகாரி ஆனாரா? இல்லையா? என்பது தான் படத்தின் கதை....

விஜயின் கடைசி படத்தை தன்னால் முடிந்த அளவுக்கு மாஸ் தருணங்களை நிரப்பி ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்திருக்கிறார் ஹெச்.வினோத். மகளாக குறும்புத்தனங்களுடனும், இறுதியில் ஆக்‌ஷன் காட்சிகளிலும் கவனம் ஈர்க்கிறார் மமிதா பைஜூ. பூஜா ஹெக்டேவுக்கு சொல்லிக்கொள்ளும்படி காட்சிகள் இல்லை. 

சர்வதேச வில்லனாக முரட்டுத்தனத்தில் மிரட்டுகிறார் பாபி தியோல். பிரகாஷ்ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், நரேன், ஸ்ரீநாத் தேவையான நடிப்பை வழங்குகின்றனர். தனது வழக்கமான முக பாவனைகள், உடல்மொழிகள், ரசிக்க வைக்கும் சின்ன சின்ன ரியாக்‌ஷன்களால் கவரும் விஜய், ‘ஒன் லாஸ்ட் டான்ஸ்’ என நடனத்தில் மிரட்டுகிறார். எம்ஜிஆர் புகைப்படத்துடன் விஜய்க்கு கொடுக்கும் இன்ட்ரோ, மாஸான இன்டர்வல் காட்சி, ‘நான் ஆணையிட்டால்’ பாணியில் சாட்டை சுழற்றும் காட்சி, பஞ்ச் வசனங்கள், ஆக்‌ஷன் என தெறிக்கவிடுகிறார் விஜய். 

பகவந்த் கேசரி படத்தின் மைய சரடையும், பல காட்சிகளையும் சேர்த்து தன்னுடைய கற்பனையையும், அரசியலையும் கலந்து இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார் ஹெச்.வினோத். சூப்பர் மார்க்கெட்டில், பூஜா ஹெக்டேவை சந்தித்து ஆன்டி என நக்கலடிக்கும் காட்சி, மமிதாவுக்கான ராணுவ பயிற்சி, காவல்துறை அதிகாரியின் தவறான நடத்தை, சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு எதிரான வசனம், பெண்களை மட்டுப்படுத்தும் காட்சிகள் பகவந்த் கேசரியின் ரீமேக். “பொண்ணுங்களுக்கு பயம் இருக்க கூடாது..”, “புலி மாதிரி வளர்க்கணும்..” என பெண்கள் முன்னேற்றம் குறித்து பேசுகிறது படம். 

மொத்தத்தில் இந்த 'ஜனநாயகன்' அக்கறை உள்ளவன்.... 


This is the most recent post.
பழைய இடுகைகள்

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.