பொய்ப் பிரச்சாரம் செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க திருவிதாங்கூர் தேவசம் போர்டு முடிவு!

பொய்ப் பிரச்சாரம் செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க திருவிதாங்கூர் தேவசம் போர்டு முடிவு!


சபரிமலை ஐயப்பன் கோயிலில்  வினியோகிக்கப்படும் அரவணை பாயசத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்கள் தவறானவை என்றும், உண்மைக்குப் புறம்பானது என்றும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. 

சபரிமலை தேவஸ்தானத்தின் முக்கிய பிரசாதமான அரவணை பாயசம் மற்றும் அதன் தயாரிப்பு முறை குறித்து சமீப நாட்களாக சில இணையதளங்கள் மற்றும் சில ஊடகங்களில் பரவி வரும் பொய் பிரச்சாரம் திருவிதாங்கூர் தேவசம் போர்டின் கவனத்திற்கு வந்துள்ள நிலையில் இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற கேவலமான மற்றும் அவதூறான செயல்களில் ஈடுபடுவோர் மீது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு ஆணையாளர் தெரிவித்துள்ளார். சட்ட நடவடிக்கைகளின் முழுப்பொறுப்பும் இது போன்ற பொய்ப் பிரச்சாரங்களில் ஈடுபடுபவர்களுக்கு  மட்டுமே இருக்கும் என தேவசம் போர்டு ஆணையாளர் தெரிவித்துள்ளார். 

சபரிமலை தேவஸ்தானத்தின் அரவணை பிரசாதத்திற்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்யும் சில இணையதளங்கள் மற்றும் சில ஊடகங்கள் மீது வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி சபரிமலை செயல் அலுவலர் சன்னிதானம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.