மனித மூளையில் சிப் பொருத்தும் தொழில்நுட்பம்!

மனித மூளையில் சிப் பொருத்தும் தொழில்நுட்பம்!


அதிநவீன மின்சார கார்களை தயாரிக்கும் டெஸ்லா, செயற்கைக்கோள்களை இலக்கிற்கு அனுப்பி விட்டு பூமிக்கு திரும்பும் ராக்கெட்டுகளை தயாரிக்கும் ஸ்பேஸ் எக்ஸ் போன்ற புதுமையான நிறுவனங்களுக்கு சொந்தக்காரரான எலான் மஸ்க்கின் மற்றொரு நிறுவனம் நியூராலிங்க். 

மனிதனின் மூளையில் சிப் ஒன்றைப் பொருத்தி அதன் மூலம் மனிதனையும் இயந்திரங்களையும் இணைக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடிப்பதே நியூராலிங்கின் நோக்கம்.


பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர், விரல்களை கொண்டு ஸ்மார்ட்ஃபோனை இயக்குபவரை விட வேகமாக ஸ்மார்ட்ஃபோனை இயக்க வைக்க நியூராலிங்கின் முதல் தயாரிப்பு உதவும் என ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட பரபரவென பற்றிக் கொண்டது அறிவியல் உலகம்.

அப்படி என்ன தயாரிப்பு அது? என்று ஆவலோடு கேட்போருக்கு நியூராலிங்க் நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் விடை இருக்கிறது. பேஜர் என்ற குரங்கு ஒன்று வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருக்கிறது. இந்த நியூராலிங்க் நிறுவனம் தயாரித்த சிப் பொருத்தப்பட்டுள்ளது.

வீடியோ கேமில் வரும் பந்தை ஆரஞ்சு நிறப் பெட்டிக்குள் ஒவ்வொரு முறை சேர்க்கும்போதும் குரங்கிற்கு ஒரு குழாய் மூலம் வாழைப்பழக் கூழ் கொடுக்கப்படுகிறது. அதனை சுவைத்துக் கொண்டே குரங்கு ஜாய்ஸ்டிக்கை அசைத்து விளையாட்டை தொடர்கிறது. ஜாய்ஸ்டிக் மூலம் பந்தை சரியாக ஆரஞ்சுப் பெட்டியில் சேர்க்கும் போது குரங்கின் மூளையில் உருவாகும் அலைகள், சிப் மூலமாக கணிணிக்கு கடத்தப்படுகின்றன.

ஜாய் ஸ்டிக்கை அசைக்க குரங்கின் மூளை இட்ட கட்டளையை ஒரு கணிணி ப்ரோகிராமாக மாற்றி சிப்பில் பதிய வைக்கின்றனர் விஞ்ஞானிகள். இப்போது ஜாய் ஸ்டிக்கை அசைக்க வேண்டும் என்று குரங்கு நினைத்தவுடன் ஜாய் ஸ்டிக் இல்லாமலே வீடியோ கேம் விளையாட்டு வேகமாக நடக்கிறது.

குரங்கின் மூளை இட்ட கட்டளை வயர்லெஸ் தொடர்பு மூலமாக நேரடியாக கணிணிக்கு கடத்தப்படுவதால் விளையாட்டு விறுவிறுப்பாக நடக்கிறது. சரி இதனால் மனித குலத்திற்கு என்ன நன்மை என்று கேட்டால், எலான் மஸ்க் சொன்ன அதே விளக்கம் தான் பதில். 

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒருவரின் மூளையில் இந்த சிப்பை பொருத்தி விட்டால் அவர் நினைத்தவுடன் ஸ்மார்ட்ஃபோன் இயங்கத் தொடங்கும். இதேபோல செயற்கை கைகள் பொருத்தப்பட்ட ஒருவரின் மூளையுடன் அவரது கையை இணைத்து விட்டால் மூளை சொல்லும் கட்டளைக்கு ஏற்ப கை தானாக இயங்கும்.

இவையெல்லாம் தாண்டி மனித நினைவுகளை காப்பி எடுத்து வைத்துக் கொண்டு முன்னும் பின்னும் ஓட்டிப் பார்க்கவும் முடியும் என்றெல்லாம் சொல்லி ஆச்சரியப்படுத்துகிறார்கள் நியூராலிங்க் குழுவினர். 

கண்ணுக்குத் தெரியாத ஒற்றை சிப்பின் மூலம் மனித வாழ்க்கை ஆளப்படும் காலம் விரைவில் வரலாம் என முன்னோட்டம் காட்டியிருக்கிறது நியூராலிங்கின் புதிய தயாரிப்பு.




கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.