Latest Post

நாளிதழ்களை PDF ஆக பகிரும் வாட்ஸ்அப் குழுக்களை நீக்க கோர்ட் உத்தரவு!


செய்தித்தாள் நிறுவனங்களின் அனுமதியின்றி இ-பேப்பர்கள், பி.டி.எப்.,களை சட்டவிரோதமாக பரப்பும் வாட்ஸ்அப் குழுக்களை முடக்க டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பல செய்தி நிறுவனங்களின் செய்தித்தாள்கள், புத்தகங்களை பி.டி.எப்.,ஆக மாற்றி வாட்ஸ்அப், டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். இதற்கென குழு அமைத்து வெவ்வெறு புத்தகங்கள், செய்தித்தாள்களை குழுவில் உள்ளோருக்கு பகிர்கின்றனர். சட்டத்திற்கு புறம்பாக பரப்படும் இந்த பி.டி.எப்.,களை பலரும் டவுன்லோட் செய்து படிக்கின்றனர்.

உண்மையில், பதிப்புரிமைச் சட்டம், 1957 மற்றும் வர்த்தக முத்திரைகள் சட்டம், 1999 ஆகியவற்றின் படி, தனிநபர்கள் இ-பேப்பர்களை அல்லது தனியாருக்குச் சொந்தமான வெளியீட்டின் எந்தப் பக்கத்தையும் பகிரக் கூடாது. மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும். அதன்படி, சமூக வலைதள குழுக்களில் செய்தித்தாள்களை பகிர்வதை எதிர்த்து பல செய்தித்தாள் அமைப்புகளும் நீதிமன்றத்தை அணுகியுள்ளன.

அந்த வகையில், ஹிந்தியில் வெளியாகும் டெய்னிக் பாஸ்கர் என்னும் செய்தித்தாள் நிறுவனம் டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதில் தங்களது செய்தித்தாளின் இ-பேப்பரை வாட்ஸ்அப் குழுக்களில் பகிர்வதாக குறிப்பிட்டு, 85 குழுக்களின் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த டில்லி உயர்நீதிமன்றம், இ-பேப்பர்களை அனுமதியின்றி சட்டவிரோதமாக பரப்பும் வாட்ஸ்ஆப் குழுக்களை நீக்க அல்லது முடக்க வேண்டும் என வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கை அடுத்தாண்டு மே 2ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

டில்லி உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு மட்டுமல்லாமல், சமூக வலைதளங்களில் பகிர்பவர்களுக்கும் சேர்த்த எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில், பதிப்புரிமை, காப்புரிமை சட்டப்படி இது சட்டப்படி குற்றம் என்பதால், பகிர்பவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை பாயலாம். என்பதால் அட்மின்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது ஏற்கனவே செய்திதாள்களை பகிர்ந்த பல டெலிகிராம் குழுக்கள்   நீக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

டாக்டர்கள், செவிலியர்களுக்கு இந்த அறிகுறியா?!  


சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரியில் கடந்த 17-ந்தேதி ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அந்த நோயாளிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பின்னர் உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து அந்த வார்டில் பணியில் இருந்த டாக்டர்கள், நர்சுகள், பயிற்சி டாக்டர்கள், நர்சிங் மாணவர்கள், ஆஸ்பத்திரி ஊழியர்கள் என கடந்த 17-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை 68 பயிற்சி டாக்டர்கள், 227 நர்சிங் மாணவிகள், 60 துப்புரவு பணியாளர்கள் உள்பட 3 ஆயிரத்து 370 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 

இதில் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது இந்த எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது.

இந்த 60 பேரில் 7 பயிற்சி டாக்டர்கள், 7 நர்சிங் மாணவர்கள், 3 நர்சுகள், 1 முதுகலை மருத்துவ படிப்பு மாணவர், 1 துப்புரவு பணியாளர்கள், அந்த கட்டிடத்தில் சிகிச்சை பெற்ற 23 நோயாளிகள் என மொத்தம் 42 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி (எஸ் ஜீன்) தென்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த 42 பேரின் சளி மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக புனே மற்றும் ஐதரபாத்தில் உள்ள ஆய்வகங்களுக்கு மரபணு பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பொதுமக்கள் ஒன்று கூட தடை!


சென்னையில் புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்கள் பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபடுவது வழக்கம். கொரோனா வைரஸ் தொற்றால் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. பாதிப்பு குறைந்ததால் தமிழக அரசு தளர்வுகளை அறிவித்தது. இதற்கிடையே, ஒமைக்ரான் வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் எச்சரிக்கையுடன் இருக்கும்படி மக்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி, வரும் 31-ம் தேதி இரவு புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் பொதுமக்கள் ஒன்றுகூடுவது தவிர்க்கப்பட வேண்டும்.  ரிசார்ட்டுகள், பண்ணை வீடு, அரங்குகள், கிளப்புகளில் வர்த்தகம் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது.

ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகள், பண்ணை வீடுகளில் கேளிக்கை நிகழ்ச்சி மற்றும் இசை நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது. மேலும், மெரினா, எலியட்ஸ், பெசன்ட்நகர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் ஒன்றுகூட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.


Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.