Latest Post

'அகிலன்' படம் எப்படி இருக்கு?!



ஜெயம் ரவியை வைத்து 'பூலோகம்' படத்தை இயக்கியிருந்த என்.கல்யாண கிருஷ்ணன், மீண்டும் அவருடன் இணைந்துள்ள திரைப்படம் தான் 'அகிலன்'.

ப்ரியா பவானிசங்கர், தன்யா ரவிச்சந்திரன், தருண் அரோரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு: விவேக் ஆனந்த், இசை: சாம் சி.எஸ். இயக்குநர் என்.கல்யாண கிருஷ்ணன், இந்த படத்தில் துறைமுகம் மற்றும் அதை சுற்றி நிகழும் சம்பவங்களை திரைப்படமாக வடிவமைத்துள்ளார். 

சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்: 

தடைசெய்யப்பட்ட பொருள்களைச் சட்டவிரோதமாகக் கப்பல் கன்டெய்னர்களில் மறைத்து, சென்னை துறைமுகத்திலிருந்து உலக நாடுகளுக்குக் கடத்தும் தாதாவான ஹரீஷ் பேரடிக்கு, அடியாளாகவும், துறைமுகத்தின் கிரேன் ஆபரேட்டராகவும் பணியாற்றி வருகிறார் அகிலனான ஜெயம் ரவி. இந்தச் சட்டவிரோத கடத்தலின் சர்வதேச தாதாவாக இருக்கும் கபூரை எப்படியாவது சந்திக்க வேண்டும் என்பதோடு, ஹரீஷ் பேரடியை அழித்து இந்தியப் பெருங்கடலின் தனி ராஜாவாக மாற வேண்டும் என்பதே ஜெயம் ரவியின் குறிக்கோள்.  ஜெயம் ரவி கபூர் கொடுத்த அசைன்மென்ட்டை வெற்றிகரமாக முடித்தாரா? இல்லையா? ஜெயம் ரவி இந்த கடத்தல் செயல்களில் ஈடுபடுவதற்கான காரணம் என்ன? அவர் எப்படி கிங் ஆஃப் இந்தியன் ஓஷன் ஆக மாறுகிறார்? என்பதே அகிலன் படத்தின் மீதி கதை... 



விவேக் ஆனந்த் சந்தோஷத்தின் ஒளிப்பதிவில் ஹார்பர் களமும் கடலும் திரையில் புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது. சுற்றி வளைக்காமல் முதல் காட்சியில் இருந்தே கதையின் நோக்கமும் தீவிரமும் தொடங்குவதால், அதற்கேற்ற இசையை பின்னணியில் பல இடங்களில் தீவிரமாக கொடுத்திருக்கிறார் சாம் சி.எஸ். பாடல்களும் கதையோட்டத்தில் அமைந்திருப்பதால் அதிலும் இசையில் அதிரடி காட்டி இருக்கிறார். பிரியா பவானிசங்கர், தான்யா ராஜேந்திரன் என இரு கதாநாயகிகளும் பேருக்கு மட்டும்தான். இவர்கள் தவிர, மதுசூதன் ராவ், சாய் தமிழ், மைம் கோபி எனப் பலரும் வந்து போகிறார்கள்.

மொத்தத்தில் இந்த  'அகிலன்' இசையின் பலம்.... 


Irumban Movie Review: ஜூனியர் எம்.ஜி.ஆர் நடித்த 'இரும்பன்' 




'லெமூரியா மூவிஸ்' தயாரிப்பில், ஜூனியர் எம்.ஜி.ஆர், யோகிபாபு, ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நடிப்பில், கீரா இயக்கத்தில் வெளியாகி உள்ள படம் தான் 'இரும்பன்'. 

ஆஃபீஸாக நரிக்குறவரான நாயகன் ஜுனியர் எம்.ஜி.ஆரிடம் ஜெயின் குடும்பத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா தத்தா நட்பாக பழகுகிறார். ஐஸ்வர்யா தத்தா மீது ஜுனியர் எம்.ஜி.ஆருக்கு காதல் மலர்கிறது. ஆனால் ஐஸ்வர்யா தத்தா துறவி ஆவதென முடிவு செய்து ஜெயின் மடத்தில் சேர்ந்துவிடுகிறார். ஐஸ்வர்யா தத்தா துறவி ஆவதை விரும்பாத ஜுனியர் எம்.ஜி.ஆர் அவரை துறவி மடத்தில் இருந்து கடத்த திட்டமிட, அதன் பிறகு என்ன நடந்தது என்பதையும், அவரது காதல் கைகூடியதா? இல்லையா? என்பது தான் மீதி கதை....

வலது தோள் பட்டையில் எம்.ஜி.ஆர் படத்தை பச்சை குத்திக் கொண்டு, லுங்கியைத் தொடை தெரிய தூக்கிக் கட்டிக் கொண்டு குறவராக நடித்துள்ளார். ஆஸ்பித்திரியாக சென்ட்ராயனும், பிளேடாக யோகிபாபுவும் நடித்துள்ளனர்.  படகினை, ஓர் அழகான தீவிற்குக் கொண்டு சென்றுவிடுகிறது புயல். அருவி சூழ் இயற்கை வளம் மிக்க அத்தனை அழகான தீவிற்குப் பணத்தைக் கொட்டிக் கொடுத்தால் கூட சுற்றலா செல்லமுடியாது. 

அதை உணர்ந்து மாலை மாற்றிக் கொள்கின்றனர் ஆஃபீஸும் மஹிமாவும். இவர்களைக் கொன்றே ஆகவேண்டுமென, அவரது ஓங்குதாங்கான சரீரம் ஸ்டன்ட் காட்சிகளின் நம்பகத்தன்மைக்கு உதவுகிறது. ஆனால் மற்ற காட்சிகளில், இது அவரது முதற்படம் என்பதை முகபாவனைகளாலும் உடற்மொழியாலும் நிரூபித்தவண்ணமே உள்ளார். 

ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்கள் இனிமையாகவும், துள்ளல் ரகமாகவும் இருக்கிறது. ”நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடி...” பாடலின் ரீமிக்ஸ் திரையரங்கையே ஆட்டம் போட வைப்பது உறுதி. பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. எழுதி இயக்கியிருக்கும் கீரா, நரிக்குறவர்கள் பற்றிய படமாக எடுக்க முயற்சித்தி பிறகு நாயகன் ஜுனியர் எம்.ஜி.ஆருக்கான படமாக இயக்கியிருக்கிறார். முழுக்க முழுக்க கமர்ஷியலான படமாக கொடுக்க முடிவு செய்திருப்பவர் சில இடங்களில் சிறுசிறு அரசியல் பேசினாலும் அவை கவனம் பெறாமல் போகிறது.

மொத்தத்தில் இந்த 'இரும்பன்' உடலின் பலம்..... 


காற்றோட்டம் இல்லாத குகைக்குள் 22 நாட்கள் ஜித்தன் ரமேஷ்!




நேனி எண்டர்டைன்மெண்ட்ஸ் சார்பில் டாக்டர் அமர் இராமச்சந்திரன் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ரூட் நம்பர் 17’. 14 சர்வதேச விருதுகளை வென்ற தாய்நிலம் என்கிற படத்தை இயக்கிய இயக்குநர் அபிலாஷ் ஜி தேவன் இந்த படத்தை இயக்கியுள்ளார். 

இந்தப்படத்தில் கதாநாயகனாக ஜித்தன் ரமேஷ் நடிக்க கதாநாயகியாக அஞ்சு பாண்டியா என்பவர் நடித்துள்ளார். ஹரிஷ் பெராடி வில்லனாக நடிக்க, அருவி மதன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் அமர் இராமச்சந்திரன், நிஹால், அகில் பிரபாகர், ஜெனிபர், பிந்து, காசி விசுவநாதன் மற்றும் எவர்க்ரீன் அற்புதாநந்தம் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். பிரபல மலையாள இசையமைப்பாளர் அவுசேபச்சன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

நடிகர் ஜித்தன் ரமேஷ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு இன்னும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் சென்றடைந்துள்ளார். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு வெளியாகும் அவரது முதல் படம் இது என்பதால் பல ரிஸ்க்கான சாகச காட்சிகளில் கூட டூப் போடாமல் நடித்துள்ளார் ஜித்தன் ரமேஷ்.

அந்தவகையில் இந்த படத்தில் பூமிக்கு அடியில் 5500 சதுர அடியில் மிகப் பிரமாண்டமான குகை செட் ஒன்றை தென்காசிக்கு அருகில் உள்ள காட்டிற்குள் அமைத்து படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். ஜித்தன் ரமேஷ் உள்ளிட்ட பல நடிகர் நடிகைகள் நடித்த பெரும்பாலான காட்சிகள் இந்த குகை செட்டில் தான் படமாக்கப்பட்டுள்ளன. 

குகைக்குள் காற்று தாரளமாக வருவதற்கான வழி இல்லை என்றாலும் மின்விசிறியை பயன்படுத்தினால் படமாக்கப்படும் காட்சிகளின் எதார்த்தத்தை பாதிக்கும் என்பதால் அதை தவிர்த்து விட்டு 35 டிகிரி செல்சியஸ் அனல் பறக்கும் வெப்பத்தில் 22 நாட்களாக தினமும் கிட்டத்தட்ட 14 மணி நேரத்திற்கு மேல் அந்த வெப்பத்தைத் தாங்கிக் கொண்டு நடித்திருக்கிறார் ஜித்தன் ரமேஷ்.

சில சமயங்களில் வெப்பத்தை தாங்கமுடியாமல் தண்ணீரை தன்மேல் இறைத்து சிறிதளவு வெப்பத்தை தணித்துக்கொண்டு அதன்பின்னரும் ஓய்வு கூட எடுக்காமல் தொடர்ந்து நடித்துள்ளார் ஜித்தன் ரமேஷ். 

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படமும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.


தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்:


தயாரிப்பு ; அமர் இராமச்சந்திரன்

இயக்கம் ; அபிலாஷ் ஜி தேவன் 

இசை ; அவுசேபச்சன்

ஒளிப்பதிவு ; பிரசாந்த் பிரணவம்

படத்தொகுப்பு ; அகிலேஷ் மோகன்

சவுண்ட் கிராபிக்ஸ் ; காந்தாரா டீம்

சவுண்ட் டிசைன் ; ராஜாகிருஷ்ணன் (காந்தாரா டீம் )

ஆக்சன் காட்சிகள் ; ஜாக்கி ஜான்சன் 

லொகேஷன் ; சரவணன் சொக்கம்பட்டி 

ஆர்ட்டிஸ்ட் கண்ட்ரோல் ; சித்ரா

ஒப்பனை ; ரஷீத் அஹமது (தேசிய விருது) 

மக்கள் தொடர்பு ; A.ஜான்

Dr. Agarwals Eye Hospital organises Human Chain & Walkathon to create awareness on Glaucoma disease!



Chennai: 

Dr. Agarwals Eye Hospital, Chennai today organized a Human chain to raise awareness on Glaucoma disease and treatment as a part of World Glaucoma Week (March 12-18, 2023). More than 150 members belonging to different age groups comprising staff of Dr. Agarwals Eye Hospital and the general public held placards participated in the walkathon and human chain which created a public awareness about the importance of Glaucoma disease and treatment. Mr. Hitler, Assistant Commissioner of Police – Traffic, South Chennai was the chief guest for this awareness event.

Dr. Srinivasa Rao, Regional Head - Clinical Services, Dr Agarwals Eye Hospital said, “ India can easily be the world’s capital of glaucoma, a group of eye disorders that leads to irreversible blindness. In India 12 million are affected and 1.2 million are blind due to glaucoma. Prevalence of primary angle closure disease in south India is 1.58%. Prevalence of primary open angle glaucoma (POAG) in rural south India population 1.62% and 98.5% were not aware of the disease, in urban population the prevalence was 3.51% higher and more than 90% were not aware of the disease.”

He added that there are no known measures to prevent glaucoma. The only way to prevent blindness from glaucoma, which shows no symptoms in the early stage, is early diagnosis and treatment that could halt the progression of this silent thief of sight.

Dr. Sugepriya K, Consultant Ophthalmologist, Dr Agarwals Eye Hospital said “Glaucoma can strike one at any age. However, those who are over 40 years, and who have a family history of glaucoma, and diabetics, and people with high refractive errors and those who take steroid containing eye drops, pills, inhalers, and skin creams are considered at risk populations. They should screen for glaucoma, every year”.

Dr. Agarwals Eye Hospital, through its network of hospitals, is creating awareness among the public that clinical examination is the only way to catch glaucoma and early detection and treatment will prevent vision loss. And with prompt attention from the patients and with contribution from the primary care physicians and prompt referrals to the ophthalmologist, glaucoma can be controlled and kept in check.


"சப்தம்” திரைப்படத்தில்  நடிகை லைலா ஒப்பந்தம்!




ஈரம் படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப்பிறகு இயக்குநர் அறிவழகன், நடிகர் ஆதி வெற்றிக்கூட்டணியில் உருவாகும் “சப்தம்” படத்தின் ஒவ்வொரு தகவல்களும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் அடுத்த அதிரடியாக படத்தின் முக்கியமான பாத்திரத்தில் நடிக்க, நடிகை லைலா  ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்தில் இப்படத்தில் நாயகியாக, நடிகை லக்‌ஷ்மி மேனன்  இணைந்தார். இந்நிலையில் அடுத்ததாக தற்போது, முக்கியமான பாத்திரத்தில் நடிக்க, நடிகை லைலா இணைந்திருப்பது ரசிகர்களிடம் பேராவலை தூண்டியுள்ளது. லைலாவின் கதாப்பாத்திரம் ரசிகர்கள் எதிர்பார்க்காத வகையில் ஆச்சர்யம் தரும் வகையிலும், மிக அழுத்தமான பாத்திரமாகவும் இருக்குமென படக்குழு தெரிவித்துள்ளது. 

காமெடி ஹாரர் படங்களுக்கிடையில் ஒரு இனிமையான மாற்றமாக இதயத்தை அதிரவைக்கும் ஹாரர் திரில்லராக இப்படம் உருவாகிறது. Aalpha Frames  இயக்குநர் அறிவழகன் மற்றும் 7G Films சிவா இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். ஈரம் படத்தில் இந்த வெற்றிக்கூட்டணிக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். 

நடிகை லைலா இப்படத்தில் இணைந்தது குறித்தான அறிவிப்பு  போஸ்டர் இணைய ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

ITC’s Sunfeast Supermilk felicitates young achievers with SUPERKIDS Award 2023  




Chennai: 

Tamil Nadu has always been a melting pot of diverse talent. Several eminent personalities from the state gained global recognition with their extraordinary talent and willpower. Celebrating this strength in talent, ITC Sunfeast Supermilk ‘SUPERKIDS Award 2023’, is an endeavor to celebrate, encourage and support exceptional young achievers from across the state.   The first edition of ITC Sunfeast Supermilk ‘SUPERKIDS Award 2023’ was held at a glittering event at ITC Grand Chola. Mrs. Sneha Prasanna, the Brand Endorser, and Mr. Ali Harris Shere, Chief Operating Officer, Biscuits & Cakes Cluster, Foods Division, ITC Ltd., presented the trophies to the prodigies for their exceptional achievements in the respective fields.  The ‘SUPERKIDS 2023’ recognized prodigies from various fields who have made both the state & the country proud with their  accomplishments. Gukesh D, best known as one of the youngest grandmasters in history, earned the Grand master title at the age of 12. In March last year, Gukesh became only the sixth Indian to break the 2700 Elo-rating mark, and the youngest Grandmaster from the country to do so. He recently defeated World Champion Magnus Carlsen. Lydian Nadhaswaram, a stellar musician who can play more than 20 instruments, represented India amongst 185 countries around the globe & won the CBS’ The World’s Best talent competition.   Vinisha Umashankar, an artist, a TEDx speaker, an innovator, and an environmentalist, is well-known for her innovation, the Solar Ironing Cart. She spoke at the UN Climate Change Conference COP26 in Glasgow.  Prasiddhi Singh, a social entrepreneur and environmental activist, is the founder of the Prasiddhi Forest Foundation. At a tender age of 10, she is a Prime Minister National Child Awardee. Dr. Prisha K, youngest yoga teacher known for her inspirational work in teaching yoga to visually impaired individuals, holds many ‘world’s first’ titles  including youngest yoga teacher for blind certified by NCPCR central government, youngest most world record holder with 70 world records, youngest most honorary doctorate holder from USA and India, youngest author on yoga therapy, etc.   

Speaking on the occasion, Mr. Ali Harris Shere, Chief Operating Officer, Biscuits & Cakes Cluster, Foods Division, ITC Ltd. said:

“It is important for children to be exposed to various fields while growing up and then basis their affinity, be encouraged to follow their pursuits. We believe that a strong foundation helps children learn, grow and excel.  With this first edition of ITC Sunfeast Supermilk ‘SUPERKIDS Award', we embark on a journey to partner with children in their pursuit of excellence. The endeavor is to encourage children to dream big and pursue it with passion. Sunfeast Supermilk firmly believes in nurturing their potential. We hope our initiative also inspires other children to hone their skills and pursue their dreams.” 




Speaking on the occasion, versatile actor and Brand Endorser, Sneha said:

“It gives me immense pleasure to be associated with ITC and Sunfeast. I strongly believe that it is very important to nurture and believe in one’s strengths. Accomplishments big or small need to be recognised and celebrated. ITC Sunfeast Supermilk’s ‘SUPERKIDS Award’ is a brilliant platform to recognise achievers for their talent and effort. It also serves as a platform to inspire and encourage many young talents to explore and hone their skills.”    During the event, the prodigies were given a platform to share their journey of achievement. They spoke about the challenges they faced and what it took to pursue their dreams with dedication and passion. The awardees highlighted the importance of hard work, perseverance and a growth mindset in achieving success. The Superkids also emphasized on the constant support they received from their parents, highlighting the strength of upbringing that built their confidence and gave them a strong foundation.  The SUPERKIDS trophy awarded to the child prodigies is a symbol of recognition of their exceptional talent and dedication. Sunfeast Supermilk hopes to inspire more young achievers to pursue their dreams and achieve greatness. 

15 வருடங்களுக்குப் பிறகு ஊர்வசி - கலாரஞ்சனி சகோதரிகள் இணைந்து நடித்துள்ள 'யோசி'




J&A Prime Productions தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'யோசி'. இந்த படத்தை ஸ்டீபன் எம்.ஜோசப் இயக்கியுள்ளார். அபய் சங்கர் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக ரேவதி வெங்கட் நடித்துள்ளார். பிரபல நடிகைகள் ஊர்வசி, கலாரஞ்சனி ஆகியோருடன் அர்ச்சனா கௌதம், சாம் ஜீவன், ஏ.எல்.சரண், பார்கவ் சூர்யா, மயூரன், அச்சு மாளவிகா, கிருஷ்ணா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு ராபின் ராஜசேகர், கே.குமார், வி.அருண், ஏ.எஸ்.விஜய் என நான்கு இசையமைப்பாளர்கள் இசை அமைத்துள்ளனர். பின்னணி இசையை இத்தாலியை சேர்ந்த பிரான்செஸ்கோ ட்ரெஸ்கா என்பவர் அமைத்துள்ளார். பாடல்களை ரட்சகன் மற்றும் இசையமைப்பாளர் வி.அருண் இருவரும் எழுதியுள்ளனர். படத்தின் ஒளிப்பதிவை ஆறுமுகம் கவனிக்கிறார். படத்தொகுப்பை ரோஷன் பிரதீப்.ஜி மற்றும் ரதீஷ் மோகனன் ஆகியோர் மேற்கொள்கின்றனர். 

நீட் தேர்வை எதிர்கொள்ள பயந்து தற்கொலை முடிவு எடுக்கும் மாணவன் ஒருவன்  மலைப்பகுதிக்கு சென்று அங்கிருந்து தற்கொலை செய்ய முயற்சிக்கிறான். முயற்சி தோல்வியடைய அந்த காட்டில் இருந்து தப்பி உயிர் பிழைக்க மிகப்பெரிய உயிர் போராட்டத்தில் இறங்குகிறான். அவனுக்கு என்ன ஆபத்து நேர்ந்தது, அவற்றிலிருந்து அந்த மாணவனால் தப்பிக்க முடிந்ததா என்பதை மையப்படுத்தி விறுவிறு திரில்லர் படமாக இது உருவாகியுள்ளது. 

இந்த படம் பற்றி  படத்தின் நாயகன் அபய் சங்கர் கூறும்போது, "கடந்த 40 வருடங்களுக்கு மேலாக திரையுலகில் நடிப்பில் பல சாதனைகளை செய்த நடிகை ஊர்வசியின் நெருங்கிய உறவினர் நான். கொரோனா காலகட்டத்தில் ஸ்டண்ட் இயக்குனர் ஜாக்கி ஜான்சன் மூலமாக இந்த படத்தின் இயக்குனர் ஸ்டீபன் ஜோசப்பை சந்தித்தேன்.  நடிக்கும் எண்ணம் எனக்கும் ஆரம்பத்தில் இருந்தே இருந்து இருந்து வந்தது. அதுமட்டுமல்ல ஊர்வசி, கலாரஞ்சனி, மறைந்த நடிகை கல்பனா என சகோதரிகள் மூவரும் மற்றும் அவர்கள் குடும்பத்தினரும் நம் குடும்பத்திலிருந்து இன்னொருவர் நடிப்புத்துறைக்கு வரவேண்டும் என்று எப்போதுமே என்னை ஊக்கப்படுத்தி வந்தார்கள். அதற்கேற்றபடி இறுதி நேரத்தில் கதாநாயகனாக நடிக்க இருந்தவர் இந்த படத்தில் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டபோது நானே கதாநாயகனாக மாறினேன்.

எனக்காக மட்டுமல்ல, கதைக்காகவும் இந்த படத்தில் ஊர்வசியும் அவரது சகோதரி கலாரஞ்சனியும் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் குறித்து அவர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

கதாநாயகி ரேவதி வெங்கட் மும்பையை சேர்ந்த ஒரு விளையாட்டு வீராங்கனை. இந்த படத்தின் மூலம் முதன்முறையாக சினிமாவில் அடி எடுத்து வைத்துள்ளார். அதேசமயம் நிறைய விளம்பர படங்களில் நடித்த அனுபவமும் அவருக்கு இருக்கிறது.. இந்தி பிக்பாஸ் சீசனில் இறுதி போட்டியாளராக வந்த அர்ச்சனா கெளதம் இந்த படத்தில் ஒரு நெகட்டிவ் சாயல் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

இந்த படத்தில் இடம்பெறும் நான்கு விதமான பாடல்களுக்கு நான்கு இசையமைப்பாளர்கள் இசையமைத்துள்ளனர். ஏர்டெல் சூப்பர் சிங்கர் கே.ஜே.அய்யனார் இந்த படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளார். 

இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ராமக்கல் மெட்டு மலைப்பகுதியில் நடைபெற்றது. கிட்டத்தட்ட 35 நாட்களுக்கு மேல் எந்த வசதிகளும் இல்லாத அந்த மலைப்பகுதியில் தினசரி நான்கு கிலோமீட்டருக்கு மேல் நடந்து சென்று படப்பிடிப்பை நடத்தினோம். அடர்ந்த காடு, வனவிலங்குகளின் அச்சுறுத்தல் ஆகியவற்றுக்கு இடையே படப்பிடிப்பை நடத்தி முடித்தோம். 

முக்கியமான ஒரு காட்சியில் செங்குத்தான மலைப்பகுதியில் நான் கீழ்நோக்கி ஓடி வரும்போது திடீரென கால் தவறி சரிவில் உருண்டு மரத்தில் மோதி எனது நெஞ்சில் பலத்த அடி விழுந்தது . ஆனாலும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினேன்” என்றார். 

தமிழில் உருவாகியுள்ள இந்த படத்தை கர்நாடகா மற்றும் கேரளாவில் வெளியிடவும் வேலைகள் நடந்து வருகின்றன. ஏற்கனவே இந்த படத்தில் இருந்து பாடகர் கார்த்திக் பாடிய அன்பே அன்பே என்கிற லிரிக் பாடல் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாக இருக்கிறது. 

A V I மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து J & A பிரைம் புரொடக்ஷன்ஸ் இந்த படத்தை மார்ச் இறுதியில் வெளியிடும் திட்டத்தில் செயல்பட்டு வருகின்றனர். 


நடிகர்கள் : 

அபய் சங்கர் (ஹீரோ), ரேவதி வெங்கட் (கதாநாயகி), ஊர்வசி, கலாரஞ்சனி, அர்ச்சனா கௌதம், சாம் ஜீவன், ஏ.எல்.சரண், பார்கவ் சூர்யா, மயூரன், அச்சு மாளவிகா, கிருஷ்ணா மற்றும் பலர்


தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்

தயாரிப்பு நிறுவனம் ; j & A பிரைம் புரொடக்ஷன்ஸ்

வெளியீடு ; j & A பிரைம் புரொடக்ஷன்ஸ்  & A V I மூவி மேக்கர்ஸ்

ஸ்க்ரிப்ட் & இயக்கம் ; ஸ்டீபன் எம். ஜோசப்

இசையமைப்பாளர்கள்: ராபின் ராஜ்சேகர், கே குமார், வி. அருண், ஏ.எஸ்.விஜய்

பாடியவர்கள் : கார்த்திக், கே.ஜே. அய்யனார், ஜெகதீஷ் குமார், மோனிஷா சௌந்தரராஜன்

பாடலாசிரியர்: ராக்சகன், வி. அருண்

இசை உரிமைகள்: MRT இசை

பின்னணி இசை: பிரான்செஸ்கோ ட்ரெஸ்கா (இத்தாலி)

BGM அசோசியேட் ; ஏ.எஸ். விஜய்

ஒளிப்பதிவு : ஆறுமுகம்

அதிரடி இயக்குனர்: ஜாக்கி ஜான்சன்

இரண்டாவது யூனிட் கேமராமேன்: பெரியசாமி & ஆனந்த் கிருஷ்ணா

நடனம்: ஜெய் & டயானா 

படத்தொகுப்பு: ரோஷன் பிரதாப் ஜி - ரதீஷ் மோகனன்

ஆடை: டயானா

ஒப்பனை: கலைவாணி

PRO:  A.ஜான்

சுவரொட்டி வடிவமைப்பு: நௌஃபல் குட்டிபென்சில்

தலைப்பு வடிவமைப்பு: ரிதன் விவேக், பிரம்மன்

ஸ்டில்ஸ்: கிரீஷ் அம்பாடி

தமிழ் வானொலி பார்ட்னர் & ஆடியோ வெளியீட்டு பங்குதாரர் : சூர்யன் எஃப்எம் 93.5

பிரச்சார ஸ்பான்சர்: L&T EduTech

DI: பேவுட் ஸ்டுடியோ (ப்ரிசம் & பிக்சல்ஸ் ஸ்டுடியோ), சென்னை

கலரிஸ்ட்: ரகுராமன்

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.