தங்கம் விலை சரிவு!

தங்கம் விலை சரிவு! 

தங்கம் விலை கடந்த இருதினங்களாக சரிந்து வருகிறது. இன்று (ஆக.,11) ஒரேநாளில் சவரன் ரூ.984ம், இருதினங்களில் ரூ.1,144யும் குறைந்துள்ளது.

கொரோனா தாக்கத்தால் உலக பொருளாதாரம் மந்த நிலையில் உள்ள நிலையில் பிற தொழில்களில் முதலீடு செய்ய பலரும் தயங்கி, தங்கத்தில் அதிக முதலீடு செய்ய தொடங்கினர். இதன் காரணமாக தங்கம் -. வெள்ளி விலை வரலாறு காணாத விலை ஏற்றத்தை சந்தித்து வந்தது. 

சில தினங்களுக்கு முன் சவரன் ரூ.43 ஆயிரத்தை கடந்த நிலையில் கடந்த இரு தினங்களாக சற்று ஆறுதல் தரும் விதமாக தங்கம் விலை குறைந்து வருகிறது. இன்று ஒரேநாளில் சவரன் ரூ.984 குறைந்ததோடு, இருதினங்களில் சவரன் ரூ.1,144 குறைந்துள்ளது.


சென்னை தங்கம் - வெள்ளி சந்தையில் இன்று(ஆக.,11) மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.123 குறைந்து ரூ.5,242க்கும், சவரன் ரூ.984 குறைந்து ரூ.41,936க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.55,080க்கும் விற்பனையாகிறது.


அதேசமயம் வெள்ளியின் விலை காலையில் உயர்ந்த நிலையில் மாலையில் சரிந்தது. ஒருகிராம் சில்லரை வெள்ளி 60 காசுகள் குறைந்து ரூ.82.80க்கு விற்பனையாகிறது.

லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.