ஏழைகளுக்கு நிவாரணம்

திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் ஸ்பார்ட்டன்ஸ் ரோட்டரி சங்கம் மற்றும் லைப் கேர் டெவலப்மெண்ட் டிரஸ்ட் இணைந்து  ஐந்து வெவ்வேறு கிராமங்களில் ஐம்பெரும் விழாக்களை நடத்தி சாதனை ஒவ்வொரு கிராமத்திலும்  5 நிகழ்வுகள் நடத்தி  மொத்தம் 25 நிகழ்வுகளை ஒரே நாளில் செய்துள்ளது.

இந்த ஐந்து கிராமங்களும் இருளர் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவ்விழாவின் சிறப்பம்சமாக Literacy மாதத்தை முன்னிட்டு இருளர் பகுதி குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கி அவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை குறித்து லிட்ரெஸி சேர்மன் கேட்டர் பில்லர் நிறுவனத்தின் மேனேஜர் திருமதி.லக்ஷ்மி அவர்கள் வழங்கினார்.

பின்பு ஊட்டச்சத்து வாரத்தை முன்னிட்டு அங்குள்ள குழந்தைகளுக்கு சத்தான உணவுகளை வழங்கி அவர்களுக்கு அதன் முக்கியத்துவத்தையும் உணர்த்தப்பட்டது.

மேலும் அவர்களது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் கபசுரக் குடிநீர், ஆர்சனிக் ஆல்பம் மாத்திரைகள் மற்றும் முக கவசம் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியவர்களுக்கு கொரோனா நிவாரணமாக 5 கிலோ அரிசியும் காய்கறிகளும் வழங்கப்பட்டது.
இறுதியாக ரோட்டரி பசுமைக் காடுகள் திட்டத்தின் கீழ் மரங்கள் நடப்பட்டன.


இந்த நிகழ்வில் சங்கத்தைச் சார்ந்த தலைவர்  அனுகிரகா கார்த்திக், துணைத்தலைவர் சாரா  செல்லக்குமார், செயலாளர் முகமது மூசா, பொருளாளர் நிரஞ்சன் செல்வகுமார், சங்கப்பணி ரிஷிகுமார், ஆகியோர் கலந்து கொண்டனர் மேலும் உறுப்பினர்கள் , கிஷோர், பிரதீப், நிரஞ்சன், கலையரசன் ,ரோஜர்,காமேஷ், வருங்கால தலைவர் கரண்ட் கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை லைப்கேர் டெவலப்மெண்ட் அறக்கட்டளையை சேர்ந்த திருமதி.தெய்வானை அவர்கள் சிறப்பாக செய்திருந்தார்

இந்த நிகழ்வில் ஒவ்வொரு கிராமத்திற்கு செல்லும் போதும் அந்தந்த கிராம தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் சிறப்பாக வரவேற்றனர் 

வலசைவெட்டிக்காடு கிராமத்தில் திரு.சுரேஷ் மற்றும் நயப்பாக்கத்தை சேர்ந்த திரு.சிவக்குமார் மகிழ்ச்சி அறக்கட்டளை தலைவர் திரு.அசோகன் அவர்களும்,  இலுப்பூர் கிராமத்திற்கு  திருமதி.சுதாலட்சுமி அவர்களும், 
பாக்குப்பேட்டை & சத்திரம் கிராமத்திற்கு திரு.சதீஷ் அவர்களும்,
மேல்நலாத்தூர் கிராமத்திற்கு திரு.ராஜேஸ்பாபு அவர்களும் தலைமை தாங்கினர். 

இந்த நிகழ்வின் மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊர் பொது மக்களும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களும் பயன் பெற்றனர்.




லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.