இது தொடக்கம் தான்- கமல் பரபரப்பு பேட்டி
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின்நிறுவனத்தலைவர் கமல்ஹாசன் முன்னிலையில், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தோஷ் பாபு தன்னை கட்சியில் இணைந்து கொண்டார். அதிரடியாக முன்னாள் ஐ.ஏ.எஸ் சந்தோஷ் பாபுவிற்கு தலைமை கழக பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
சந்தோஷ் பாபுகிருஷ்ணகிரி, சிவகங்கை மாவட்டத்தில் கலெக்டராக பணியாற்றி உள்ளார்.பதவிக்காலம் முடிய இன்னும் 8 ஆண்டுகள் இருந்தும் பாரத் நெட் டெண்டர் விவகாரத்தில் விருப்ப ஒய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில், கமல்ஹாசன் பேசும் போது, இனியும் இதுபோன்ற நல்லவர்கள் கட்சியில் இணைவார்கள், நான் ஏற்கனவே சொன்னது போல இது தொடக்கம் தான் என்று தெரிவித்தார்.
FULL VIDEO HERE:
கருத்துரையிடுக