கலர்ஸ் கிச்சன்: இந்த வார சுவையான ரெசிபிகள்!

கலர்ஸ் கிச்சன்: இந்த வார சுவையான ரெசிபிகள்!


சுவையான உணவுகளை சமைத்து வழங்குவதோடு குறைவில்லாத கேளிக்கையையும் சேர்த்துத் தரும் நிகழ்வான கலர்ஸ் கிச்சனின் இந்த வார இறுதி நாட்களில் ஒளிபரப்பாகும் எபிசோடுகளில் செஃப் தாமு மற்றும் செஃப் ஸ்ரேயா அட்கா உடன் பிரபல ஆளுமைகளான ஜானகி மற்றும் விசித்ராவும் உற்சாகத்துடன் களமிறங்குகின்றனர். 

கலர்ஸ் தமிழ் அலைவரிசையில் டிசம்பர் 5 சனிக்கிழமை மற்றும் டிசம்பர் 6 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 12:00 மணிக்கு கலர்ஸ் கிச்சன் என்ற இந்த நிகழ்வை நீங்கள் தவறாமல் கண்டு ரசிப்பதற்கான மூன்று சுவையான காரணங்கள் இதோ.

 சமையற்கலை: 

உணவு பிரியர்கள் மத்தியில் மிகப்பெரிய பிரபல்யத்தை கொண்டிருப்பவரும் சமையற்கலை விற்பன்னருமான செஃப் தாமு, பாரம்பரியமான, கடந்தகால நினைவலைகளை பார்ப்பவர்களிடம் மீண்டும் உருவாக்க அவருக்கே உரிய தனித்துவ பாணியில் மகிழ்விக்க வருகிறார். உறைப்பு உருண்டை மற்றும் இடியாப்பம் முட்டை கொத்து என்ற இரு சுவையான பதார்த்தங்களை இந்த வாரம் இந்நிகழ்வில் ஒளிபரப்பாகும் தாமு தர்பார் பிரிவில் அவர் சமைத்து வழங்குகிறார்.

 

பிரபலங்கள்: 

விஐபி வீட்டு சமையல் மற்றும் கில்லாடி குக் என்ற பிரிவுகளின் ஒரு பகுதியாக தங்களது சமையற்கலை திறன்களை இன்னும் பட்டை தீட்டும் வகையில் மக்கள் மனம் கவர்ந்த ஆளுமைகளான ஜானகி மற்றும் விசித்ரா இந்த எபிசோடுகளில் பங்கேற்கின்றனர். சமையற்திறன் மட்டுமன்றி பொழுதுபோக்குக்கும், கேளிக்கைக்கும் குறைவில்லாத இந்த நிகழ்ச்சியில் தங்களது அன்புக்குரியவர்களோடு சேர்ந்து இந்த பிரபலங்கள், மட்டன் சிந்தாமணி, ஃப்ரூட் பானிபூரி, ஆட்டுல்ரச்சி டிபன் குழம்பு மற்றும் தேங்காய் ரசம் என்ற வேறுபட்ட சுவைகளிலான பதார்த்தங்களை சமைப்பதை மகிழ்ச்சியோடு கண்டு ரசிக்கலாம்.

 

கையாள முடியாத அளவிற்கு அற்புத சுவை:

 உணவின் மீதான அன்போடு ஒப்பிடுகையில் அதைவிட பெரிய அளவில் அன்போ, பாசமோ இருக்க முடியாது என்ற வார்த்தைகள் சரியாகவே சொல்லப்பட்டு விட்டன. ஜோடியாக வழங்குவதற்கு பொருத்தமான ரெசிபிகளை சுவைபட வழங்குபவர் என புகழ்பெற்றிருக்கும் செஃப் ஸ்ரேயா அட்கா, இந்த வார எபிசோடின் ஒரு பகுதியான சுட சுட சமையல் பிரிவின் ஒரு பகுதியாக பிரட் ஊத்தப்பம் மற்றும் ப்ரூட் ஃபிரைடு ரைஸ் ஆகியவற்றை எப்படி சமைப்பது என்பதை ரசித்து பயனடையலாம். அதே வேளையில் இந்த பதார்த்தங்களுக்காக சேர்க்கப்படும் உட்பொருட்கள் அடங்கியுள்ள ஊட்டச்சத்து அளவுகளை சமையலுக்கான தனது நிபுணத்துவ ஆலோசனைகளோடு சேர்த்து செஃப் ஸ்ரேயா வழங்குவது இந்நிகழ்ச்சிக்கு கூடுதல் வலு சேர்க்கிறது.

 

பார்வையாளர்களின் மனதில் வலுவான இடம் பெற்றிருக்கும் தொகுப்பாளினி RJ ஶ்ரீ ரஞ்சனி,  தொகுத்து வழங்கும் கலர்ஸ் கிச்சன் நிகழ்ச்சியின்  இந்த வார எபிசோடுகள் உங்கள் சுவை நரம்புகளுக்கு சிறப்பான தீனியை வழங்கும் என்பதில் ஐயமில்லை. 


கலர்ஸ் தமிழ் அலைவரிசையில் டிசம்பர் 5 மற்றும் 6 ம் தேதிகளில் மதியம் 12:00 மணிக்கு உங்கள் சமையலறையை தேடி வருகிற கலர்ஸ் கிச்சன் ஒளிபரப்பை காணத்தவறாதீர்கள்.லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.