Rajasthani tamil seva awards 2026

5 பேருக்கு ‘ராஜஸ்தானி-தமிழ் சேவா’ விருதுகள்: நீதிபதி மகாதேவன் வழங்கினார்!



சென்னை: 

தமிழகத்தின் சமூக, கலாச்சாரம் மற்றும் கட்டமைப்பு வளர்ச்சிக்கு தங்களது தன்னலமற்ற சேவையால் சிறந்த பங்களிப்பை வழங்கிய தனிநபர்கள், நிறுவனங்களை கவுரவித்து ‘ராஜஸ்தானி - தமிழ் சேவா’ விருதுகளை ராஜஸ்தானி அசோசியேஷன் தமிழ்நாடு வழங்கி வருகிறது.

இந்த ஆண்டுக்கான விருதுக்கு தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் சுதாசேஷய்யன், மேற்கு மாம்பலம் பொது சுகாதார மையத் தலைவர் சுவாமி நாதன் ஐசன்ஹோவர், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தலைமை ஓதுவார் பி.சற்குருநாதன், பயிர் அறக்கட்டளை தலைவர் வி.ஆராயி, வழக்கறிஞர் கே.ஆர்.ராஜா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். விருதாளர்களை ‘துக்ளக்’ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி, ‘இந்து’ என்.ரவி, பரதநாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம், அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, பகவான் மகாவீர் அறக்கட்டளை நிறுவனர் சுகல்சந்த் ஜெயின் ஆகியோர் அடங்கிய நடுவர் குழு தேர்வு செய்திருந்தது.

இந்நிலையில், விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. உச்ச நீதிமன்றநீதிபதி ஆர்.மகாதேவன் தலைமை வகித்து, விருதாளர்களுக்கு ‘ராஜஸ்தானி - தமிழ் சேவா’விருதுகள், ரூ.2 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: எப்படி வேண்டுமானாலும் பயணிக்கக்கூடியது வாழ்க்கை. இதில் நமக்கு தேவையான அனைத்து விதமான வசதிகளையும் தேடிக் கொள்ளலாம். பதவி, பணம், கவுரவத்தால் நம்மை உயர்த்திக் கொள்ளலாம்.ஆனால், அனைத்தும் ஒருநேரம் நம்மைவிட்டு விலகிச் செல்லும்.

அவை அனைத்தும் விலகிய பின்னால், நம் நிலைமை இதுதான் என்பதை இன்றே உணர்ந்து பாருங்கள் என்று, தங்களது செயல்கள், வார்த்தைகள், பேச்சுகள், வாழ்க்கை முறை மூலம் நமக்கு எடுத்துக்கூறி, இந்த மண், மொழி, நாட்டை தங்களது பணிகளால் சிறப்பித்துள்ளனர் இந்த விருதாளர்கள். இவர்களை கவுரவிப்பதன் மூலமாக, இப்படிப்பட்ட பணிகள் சிறக்க வேண்டும் எனும் செய்தியை ராஜஸ்தானி அசோசியேஷன் பதிவு செய்துள்ளது என்று அவர் பேசினார். ‘இந்து’ என்.ரவி பேசும்போது, “ராஜஸ்தானி மக்கள் கல்வி, மருத்துவ சேவை மூலம் தமிழக வளர்ச்சிக்கும் தொண்டாற்றி வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சேவா விருதுகள் என்பது, தமிழகத்தின் சமூக கட்டமைப்பில் ராஜஸ்தான் சமூகத்தின் ஒருங்கிணைப்பை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய மைல்கல் ஆகும்” என்றார்.



ராஜஸ்தானி அசோசியேஷன் தமிழ்நாட்டின் தலைவர் நரேந்திர ஸ்ரீஸ்ரீமால் கூறுகையில், "தகுதியுள்ள நபர்களை அங்கீகரிப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். வரும் ஆண்டுகளில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள மக்களைக் கவுரவிக்கும் வகையில் இந்த ஆண்டு விருதுகளை எங்கள் சங்கம் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும்," என்றார்.

ராஜஸ்தானி-தமிழ் சேவா விருதுகளின் ஒருங்கிணைப்பாளர் அனில் கிச்சா கூறுகையில், "விருதாளர்களைத் தேர்ந்தெடுக்கும் முறை நாங்கள் பின்பற்றிய மிகச்சிறந்த செயல்முறைகளில் ஒன்றாகும். மாநிலம் முழுவதிலும் உள்ள பொதுமக்களிடமிருந்தும் நிறுவனங்களிலிருந்தும் பரிந்துரைகளை வரவேற்பதில் தொடங்கி, பெறப்பட்ட 200-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை ஒரு தெரிவுக்குழு (Shortlisting Committee) ஆய்வு செய்தது. அதனைத் தொடர்ந்து, எஸ். குருமூர்த்தி (ஆசிரியர், துக்ளக் வார இதழ்) தலைமையிலான 5 பேர் கொண்ட நடுவர் குழு, 8 வெவ்வேறு பிரிவுகளில் இருந்து இறுதி 5 விருதாளர்களைத் தேர்வு செய்தது. நடுவர் குழுவின் முடிவில் எங்கள் சங்கம் எந்தத் தலையீடும் செய்யவில்லை," என்று தெரிவித்தார்.

விழாவில் ராஜஸ்தானி அசோசியேஷன் தமிழ்நாடு பொதுச் செயலாளர் தினேஷ் போத்தாரி, தமிழ் சேவா விருதுகள் குழுத் தலைவர் அஜித் சோர்டியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

லேபிள்கள்:
This is the most recent post.
பழைய இடுகைகள்

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.