கொரோனா பாதிப்பு கிடு கிடு உயர்வு!

கொரோனா பாதிப்பு கிடு கிடு உயர்வு! 


தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாளை முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளது. அப்போதும் வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை என்றால் இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்த நேரிடும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 5 ஆயிரத்து 441 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 9 லட்சத்து 20 ஆயிரத்து 827 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 33 ஆயிரத்து 659 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிப்பில் இருந்து இன்று ஒரேநாளில் 1,890 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், மாநிலத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 74 ஆயிரத்து 305 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், கொரோனாவால் மாநிலத்தில் இன்று 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 863 ஆக அதிகரித்துள்ளது.  

லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.