'வனம்' திரைப்படத்தின் விமர்சனம்

'வனம்' திரைப்படத்தின் விமர்சனம் 


புதிதாகத் தொடங்கப்படும் நுண்கலைக் கல்லூரி ஒன்றின் விடுதியில் பெயிண்டிங் வேலை செய்துகொண்டிருக்கும் ஒருவர் அங்குள்ள ஒரு அறையில் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார். இதன் பிறகு கல்லூரி தொடங்கப்பட்டதும் அங்கு முதலாம் ஆண்டு மாணவராகச் சேர்கிறார் மகிழ் (வெற்றி). அந்தக் கல்லூரியைப் பற்றிய ஆவணப்படம் ஒன்றை இயக்க அங்கு வருகிறார் ஜாஸ்மின் (ஸ்மிருதி வெங்கட்).

இந்தச் சூழலில் அந்த பெயிண்டர் இறந்த அதே அறையைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறந்து போகின்றனர். இதனைத் தொடர்ந்து அந்த மரணங்களுக்குப் பின்னால் இருக்கும் மர்மங்களை ஆராயத் தொடங்கும் வெற்றி மற்றும் ஸ்மிருதி வெங்கட் இருவருக்கும் அந்தக் கல்லூரி தொடங்கப்பட்டதன் பின்புலம் தெரியவருகிறது.

1960-களில் அந்த ஊரில் ஜமீன்தார் வேல ராமமூர்த்தி, அவர் பெண்களுக்குச் செய்யும் சித்ரவதை, காட்டில் வாழும் பழங்குடி மக்களின் தலைவியாக வரும் அனுசித்தாரா உள்ளிட்ட தகவல்களைப் பற்றித் தெரிந்து கொள்கின்றனர். அந்த மர்ம மரணங்களை அவர்களால் தடுக்க முடிந்ததா? என்பதே ‘வனம்’ படத்தின் கதை.

வெற்றி நடுத்தர குடும்பத்து இளைஞராக வருகிறார். கண்களாலேயே நமக்குத் திகிலூட்டுகிறார். 8 தோட்டாக்கள், ஜீவி படங்களைப் போலவே இதிலும் ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான கதாபாத்திரம். கதையின் சீரியஸ் தன்மைக்கு ஏற்றபடி உடல்மொழியும், வசன உச்சரிப்பும் பொருத்தமாக இருக்கிறது. நாயகி ஸ்மிருதி வெங்கட் வந்த பிறகு படம் இன்னும் வேகமாக நகர்கிறது.

புலமையான புத்தகத்தை வாசிக்கும் நிமிடங்கள் சுவாரஸ்யமாக இருக்கிறது. ஜமீனாக வேல ராமமூர்த்தியின் மிரட்டலான நடிப்பும், வனத்திற்குள் வாழும் பளியர்களின் பரிதாப வாழ்க்கையும் நெஞ்சில் பதிகிறது. வனப்பெண் மல்லியாக அனுசித்தாரா மேக்கப் முகம் உறுத்தல். அழகம் பெருமாளின் சஸ்பென்ஸ் கதாபாத்திரமும், அந்த மாயக்கண்ணாடியும் படத்திற்கு பிளஸாக அமைந்திருக்கிறது. 

வனத்தை மையமாக வைத்து திகில், பேண்டஸி, பீரியட் என படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஸ்ரீ கண்டன். இடைவேளைக்குப் பிறகு படத்தில் பல இடங்களில் டுவிஸ்ட் ஓரளவிற்கு ரசிக்க வைக்கிறது. வனத்தை காப்பாற்ற வேண்டும் என்கிற ஒரு காரணத்திற்காக தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் காட்சி உருக்கம். இயக்குநர் ஸ்ரீ கண்டன் ஆனந்த், மாதவா, ஐசக் பசில் ஆகியோர் திரைக்கதைக்காக உழைத்திருப்பது தெரிகிறது. ரான் ஈத்தன் பின்னணி இசையும், விக்ரம் மோகனின் ஒளிப்பதிவும் படத்தில் ஒன்ற வைக்கிறது. 

வனம்... திகில் கலந்த செய்தி
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.