கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுக்கும் கலர்ஸ் தமிழின் ‘டான்ஸ் வெர்சஸ் டான்ஸ் சீசன் 2’
தமிழகத்தில் வேகமாக வளர்ந்து வரும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி, இந்த வார இறுதியில் டான்ஸ் வெர்சஸ் டான்ஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பல்வேறு திருப்பங்களை உங்களுக்காக வழங்கவிருக்கிறது. இந்த வார நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் வித்தியாசமான உடைகளை அணிந்து உங்களை மகிழ்விக்க இருக்கிறார்கள்.
பவர்டு பை நிப்பான் பெயிண்ட் வெதர்பாண்டு புரோ, வரும் 27 மற்றும் 28, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சியில் உங்களுக்குப் பிடித்த அணிகள் போட்டியிடுவதை பார்த்து ரசியுங்கள்.
இந்த நிகழ்ச்சியின் ஒவ்வொரு போட்டியிலும் பங்கேற்பாளர்கள் இடையே கடுமையான போட்டி நிலவும். இதில் 6அணிகள் அதாவது 12 போட்டியாளர்கள் நேரடியாக மோத உள்ளனர். ஒவ்வொரு அணியும் தங்களுக்கு பிடித்தமான தனித்துவமான ஆடைகளுடன் வித்தியாசமான தோற்றத்தில் நடனமாட உள்ளது. இதில் தொடக்கமாக அய்ஷு-அல்ஹேனா பாரம்பரிய உடையுடனும், அவர்களுக்கு போட்டியாக சாண்டி நந்திகா நவநாகரீக ஆடைகளுடன் களம் இறங்க உள்ளனர். இதில் நடிகர் ஷாம் அணியும், நடன இயக்குனர் ஸ்ரீதர் அணியும் நேருக்கு நேர் மோத உள்ளன. அதனைத் தொடர்ந்து ராய்சன்-மெர்சினா மற்றும் நாவல்-அலிஷாவும் அவர்களைத் தொடர்ந்து அபிராமி அணியை சேர்ந்த அபிராஜ்-அஞ்சனா மற்றும் ஸ்ரீதர் அணியை சேர்ந்த காவ்யா-மகாலட்சுமி ஆகியோரும் களம் இறங்குகிறார்கள். இவர்களுடன் வித்தியாசமான மையக் கருவுடன் ஜூட்-ரக்ஷனாவும், கபாலி ரஜினி மற்றும் பாட்ஷா ரஜினி போல இனியாவின் அணியை சேர்ந்த பிருத்வி-தியான் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் தோன்றி பார்வையாளர்களை மகிழ்விக்க இருக்கிறார்கள். இவை அனைத்தும் ரசிகர்களின் காட்சிக்கு விருந்தாக அமைய உள்ளன.
மேலும் இந்த வார இறுதியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் புகழ்பெற்ற பேச்சாளர் ஞானசம்பந்தம், கபாலி படத்தில் நடிகர் ரஜினி நடந்து வந்து பேசும் ஒரு வசனத்தை அதேபோல் பேசி நடித்துக் காட்ட இருக்கிறார். நடிகை குஷ்பூ மற்றும் பிரபல நடன இயக்குனர் பிருந்தாவை நடுவர்களாக கொண்டிருக்கும் உங்கள் மனம் கவர்ந்த டான்ஸ் Vs டான்ஸ் சீசன் 2 – ல் இதுபோன்ற ஏராளமான வித்தியாசமான நடனங்களுடன் இந்த வாரம் மிகவும் மறக்க முடியாத வாரமாக இருக்கும். இந்த வாரம் எந்த அணி வெற்றி பெறப் போகிறது திறமைமிக்க அவர்களின் நடிப்பில் யார் பிரகாசிக்க போகிறார்கள் என்பதை பார்க்க வரும் நவம்பர் 27 மற்றும் 28, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்யுங்கள்; நிகழ்ச்சியை பார்த்து உற்சாகம் அடையுங்கள்.
அனைத்து முன்னணி கேபிள் வலையமைப்புகளிலும் மற்றும் சன் டைரக்ட் (CHN NO 128), டாடா ஸ்கை (CHN NO 1515), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO 553) ஆகிய அனைத்து டிடீஹெச் தளங்களிலும் கலர்ஸ் தமிழ் அலைவரிசை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசிக்கலாம். பார்வையாளர்கள் அவர்களது வசதிக்கேற்ப எந்த நேரத்திலும் இந்நிகழ்ச்சியை காண VOOT – ஐ டியூன் செய்யலாம்.
கருத்துரையிடுக