ஸ்ரீகாந்த் நடிக்கும் ‘தி பெட்’ படத்தின் பர்ஸ்ட்லுக்கை வெளியிடும் ஆர்யா!
ஸ்ரீநிதி புரொடக்சன்ஸ் சார்பில் வி.விஜயகுமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பெட்’ (The Bed). வெத்துவேட்டு படத்தை இயக்கிய இயக்குநர் எஸ்.மணிபாரதி இந்தப்படத்தை இயக்கியுள்ளார். ஸ்ரீகாந்த் நாயகனாக நடிக்கும் இந்தப்படத்தில் நாயகியாக சிருஷ்டி டாங்கே நடித்துள்ளார்.
மேலும் ஜான் விஜய், பிளாக் பாண்டி, விஜய் டிவி பப்பு, தேவிபிரியா, மலையாள நடிகை திவ்யா, ரிஷா, டிக்டாக் திருச்சி சாதனா, விக்ரம் ஆனந்த், பிரவீண் குமார், சுண்ணாம்பு செந்தில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இது சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகியுள்ள ஒரு வீக் எண்ட் மூவி. ஸ்ரீகாந்தும் அவரது நண்பர்களும் ஊட்டிக்கு ஒன்றாக பிக்னிக் செல்லும்போது நடக்கும் ஒரு கொலையும் அதைத்தொடர்ந்து அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும் தான் படத்தின் கதை.
ஊட்டியை சுற்றி உள்ள வனப்பகுதியில் நடைபெற்ற படப்பிடிப்பில் பல நாட்கள் குறைந்த ஆடை அணிந்து கடுங்குளிரில் நடுங்கியபடியே அர்ப்பணிப்பு உணர்வுடன் சிருஷ்டி டாங்கே நடித்திருக்கிறார்
இயக்குனர் மணிபாரதி கூறும் போது:
“வழக்கமாக ஹீரோ, ஹீரோயின் அல்லது வில்லன்கள் தங்களது பார்வையில் படத்தின் கதையை விவரிப்பது போன்று பல படங்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்தப்படத்தில் ஊட்டி காட்டேஜ் ஒன்றில் உள்ள ஒரு படுக்கை (Bed) தனது பார்வையில் தன்னை தேடிவந்த மனிதர்களின் வாழ்க்கையை விவரிப்பது போல இதன் கதையை உருவாக்கியுள்ளோம். அதற்கு பொருத்தமாக இருக்கவேண்டும் என்பதற்காகவே ‘தி பெட்’ என தலைப்பு வைத்துள்ளோம்” என கூறுகிறார்.
இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ஆர்யா வரும் ஜன-3ஆம் தேதி வெளியிடுகிறார்.
நடிகர்கள்:
ஸ்ரீகாந்த், சிருஷ்டி டாங்கே, ஜான் விஜய், பிளாக் பாண்டி, விஜய் டிவி பப்பு, தேவிபிரியா, மலையாள நடிகை திவ்யா, ரிஷா, டிக்டாக் திருச்சி சாதனா, விக்ரம் ஆனந்த், பிரவீண் குமார், சுண்ணாம்பு செந்தில்
தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்:
இயக்குநர் ; எஸ்.மணிபாரதி
ஒளிப்பதிவு ; கே.கோகுல்
படத்தொகுப்பு ஜே.பி (கொடி, பட்டாஸ் படங்களில் பணியாற்றியவர்)
இசை ; தாஜ்நூர்
பாடல்கள் ; யுகபாரதி
கலை ; பழனிவேல்
நடனம் ; தீனா
சண்டை பயிற்சி ; ஆக்ஷன் பிரகாஷ்
ஸ்டில்ஸ் ; ராஜ் பிரபு
நிர்வாக தயாரிப்பாளர் ; A.V. பழனிச்சாமி
தயாரிப்பாளர் ; வி விஜயகுமார்
தயாரிப்பு நிறுவனம் ; ஸ்ரீநிதி புரொடக்சன்ஸ்
மக்கள் தொடர்பு ; A ஜான்
கருத்துரையிடுக