777 Charlie Review : ‘777 சார்லி' படத்தின் விமர்சனம்

777 Charlie Review : ‘777  சார்லி' படத்தின் விமர்சனம் 




நடிகர்கள்:

- ரக்‌ஷித் ஷெட்டி: தர்மா 

- சங்கீதா சிருங்கேரி: தேவிகா ஆராத்யா

- ராஜ் B ஷெட்டி: டாக்டர் அஷ்வின் குமார்

- பாபி சிம்ஹா: வம்ஷி சிங்

- தன்ராஜ் S: விக்கி

- ஷர்வரி: அத்ரிகா 

- கோபால கிருஷ்ண தேஷ்பாண்டே: கிருபாகர் 

- சல்மான் அகமது: மஞ்சு 

- டேனிஷ் சையத்: கர்ஷன் ராய்

- அபிஜித் மகேஷ்: கால்நடை உதவியாளர்


தயாரிப்பு: G S குப்தா மற்றும் ரக்‌ஷித் ஷெட்டி 

எழுத்து இயக்கம்: கிரண்ராஜ் K

வழங்குபவர்: கார்த்திக் சுப்பராஜ்

தயாரிப்பு: கார்த்திகேயன் சந்தானம்

இணை தயாரிப்பு: கல் ராமன்,

S.சோமசேகர், கல்யாண் சுப்ரமணியன்

இணைத் தயாரிப்பாளர் : பவன் நரேந்திரன்

மார்க்கெட்டிங் : செந்தில் முருகன்

இசை மற்றும் பின்னணி இசை: நோபின் பால் 

ஒளிப்பதிவு: அரவிந்த் S காஷ்யப்

எடிட்டர்: பிரதீக் ஷெட்டி

பயிற்சியாளர்: பிரமோத்  B C

வசனங்கள்: K N விஜயகுமார்

பாடல் வரிகள்: மோகன் ராஜா, மதுர கவி, முத்தமிழ், சாயீஷ் பொய் பனாண்டிகர், அலெக்சிஸ் டிசோசா

மக்கள் தொடர்பு: நிகில் முருகன்  

விமர்சனத்தை பார்ப்போமா?! 

கன்னட சினிமாவின் முன்னணி நடிகரான ரக்‌ஷித் ஷெட்டி நடிப்பில் இயக்குநர் கிரண்ராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம்  ‘777  சார்லி. கன்னட மொழியில் உருவாகியிருக்கும் இந்தத்திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.

கே.ஜி.எஃப்பிற்கு பிறகு மீண்டும் கன்னட சினிமாவில் இருந்து ஒரு தரம் மிகுந்த படைப்பாக  ‘777  சார்லி’ உருவாகியிருக்கிறது. இப்படத்தின் தமிழ் பதிப்பின் வெளியீட்டு உரிமையை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது ஸ்டோன்பெஞ்ச் நிறுவனம் மூலம் கைப்பற்றி இருக்கிறார். 

சிறுவயதிலேயே குடும்பத்தை இழந்த தர்மா (ரக்‌ஷித் ஷெட்டி) வாழ்கை மீது எந்த பிடிப்பும் இல்லாமல், தான்தோன்றித்தனமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார். அவரது வாழ்வில், சார்லி என்ற பெண் நாய் நுழைகிறது.

ஆரம்பத்தில் வலுக்கட்டாயத்தின் பேரால் நாயை வளர்த்து வந்த தர்மாவிற்கு, சார்லியின் அப்பழுக்கில்லா அன்பு மாற்றத்தை கொண்டுவர, தர்மாவின் எல்லாமுமாக மாறிவிடுகிறாள் சார்லி. ஒரு கட்டத்தில் சார்லிக்கு கேன்சர் இருப்பது தர்மாவிற்கு தெரிய வர, இந்த கேன்சரில் இருந்து சார்லியை தர்மா காப்பாற்றினாரா இல்லையா? அவரது வாழ்கை என்ன ஆனது என்பது மீதிக்கதை.  




தமிழில் நாயை மையப்படுத்தி சில படங்கள் வந்திருந்தாலும் அவற்றில் நாய்கள் பெரும்பாலும் நகைச்சுவைக்காகவும், சாகச காட்சிகளுக்காகவுமே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இவையெல்லாம் மீறி நாய்களுக்கான உண்மை தன்மை சார்ந்த காட்சிகள் அவற்றில் இடம் பெற்றிருந்தாலும், அவையெல்லாம் மிக சொற்ப நிமிடங்களிலேயே முடிந்துவிடும். அந்த வரிசையில் சற்று மடை மாறி கதை சொல்லியிருக்கிறது. ‘777 சார்லி’

படத்தின் பாதிமுதுகெலும்பு  ரக்‌ஷித் ஷெட்டி என்றால் மீதி முதுகெலும்பு சார்லிதான். ஆரம்பத்தில் தனது சுட்டித்தனத்தாலும், சேட்டைகளாலும் நம்மை சிரிக்கவைக்கும் சார்லி, தனது நுணுக்கமான அன்பை வெளிப்படுத்தும் காட்சிகளில் நம் கண்களை குளமாக்கிவிடுகிறாள்.குறிப்பாக கிளைமேக்ஸ் காட்சிகளில் அவர் வெளிப்படுத்தும் அலட்டல் இல்லாத நடிப்பு ஆச்சரியப்படவைக்கிறது. நீளத்தை மட்டும் கொஞ்சம் நறுக்கியிருந்தால் சார்லி இன்னும் கொண்டாடப்பட்டிருக்கும்.

மொத்தத்தில் இந்த ‘777  சார்லி' நன்றியுள்ள பாச போராட்டம்.... 

 

லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.