ரெட் லேபிள் விமர்சனம்
ரெவ்ஜென் ஃபிலிம் பேக்டரி நிறுவனத்தின் சார்பில் லெனின் தயாரிப்பில், பொன். பார்த்திபன் எழுத, திரைக்கதை எழுதி, இயக்கியிருப்பவர் கே.ஆர். வினோத். சதீஷ் மெய்யப்பன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கைலாஷ் மேனன் இசையமைத்துள்ளார். லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு செய்துள்ளார். இவர்களுடன் முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குநர் ஆர். வி. உதயகுமார் நடித்துள்ளார். மேலும் லெனின், அஸ்மின், முனிஷ்காந்த், அனுமோகன் தருண், கெவின், கார்மேகம் சசி, அனுஷா ஆகியோரும் நடித்துள்ளனர்.
சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்:
கல்லூரித் தேர்தலில் நேர்மைக்கும், ஊழலுக்கு பெயர் பெற்ற எம்.எல்.ஏ சண்முகராஜனின் (ஆர்.வி.உதயகுமார்) மகன் பாண்டியன், அந்த தேர்தலில் தலைவனாக வெற்றி பெற அவனை எதிர்த்து யாரும் போட்டி போட கூடாது என்று கல்லூரியில் தனது கைகூலிகளுடன் சேர்ந்து ரவுடித்தனம் செய்கிறான்.
அவனை எதிர்த்து மாணவர்கள் மத்தியில் நல்ல பெயர் பெற்ற மாணவனை பேராசிரியர் ஒருவர் ரோஹித்தை தேர்தலில் போட்டியிட சொல்கிறார். மேலும் அந்த பேராசிரியரின் அறிவுத்தளின்படி ரோஹித், கல்லூரித் தேர்தல்களில் நேர்மைக்கும் ஊழலுக்கு எதிரான ஆக்ரோஷமான நிலைப்பாட்டிற்கும் பெயர் பெற்ற முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் கதிரின் உதவியை (லெனின்) நாடி, அவரைத் தேடிச் செல்கிறான்.
மறுபக்கம் கடந்தகாலத்தில் கல்லூரியில் நடைபெற்ற போராட்டங்களில் கதிர் ஏற்படுத்திய பிரச்சனைகளுக்காக அவர் மீது நீண்டகாலப் பகை கொண்ட ஒரு உள்ளூர் போலீஸ் அதிகாரி, கதிரை பழிவாங்க சரியான தருணத்திற்காகக் காத்திருக்கிறார்.
முதலில் வர மறுக்கும் கதிர் பின் அவர்களுக்கு துணையாக இருந்து கல்லூரியில் நடக்கும் ரவுடித்தனத்தை அடக்கி தேர்தலை நடத்த உதவி செய்கிறார். இந்நிலையில், அதே கல்லூரியில் படிக்கும் எம்.எல்.ஏ சண்முகராஜனின் மகளும், பாண்டியனின் சகோதரியுமான பவித்ராவை (அஸ்மின் யாசர்) தனது தம்பியை எதிர்த்து சகமாணவன் ரோஹித்துக்கு ஆதரவாக வாக்குகளை சேகரிக்கிறான். மேலும் பவித்ரா கதிரை காதலிக்கிறார்.
இந்த காதல் விவகாரம் எம்.எல்.ஏ சண்முகராஜன் மற்றும் அவரது மகன் பாண்டியனுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்துகிறது. அதே நேரத்தில் கதிரின் உதவியுடன் தேர்தலில் ரோஹித் வெற்றி பெறுகிறார். தேர்தலில் தோல்வி அடைந்த அவமானத்தில் இருக்கும் பாண்டியன் கதிரை பழிவாங்க துடிக்கிறார். மறுபக்கம் எம்.எல்.ஏ சண்முகராஜன் தனது மகளுக்கு திருமண ஏற்பாடுகளை செய்கிறார். இந்நிலையில் கல்லூரியில் நடைபெறும் ஒரு கல்லூரி நிகழ்ச்சியின் போது பவித்ராவுக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை (கார்மேகம்) அங்கு கொல்லப்படுகிறார். அதை தொடர்ந்து அடுத்து என்ன ஆனது? கொலையை செய்தது யார்? என்பதே மீதி கதை.....
கல்லூரி நாள்களின் முரட்டுத்தனம், நிகழ்காலத்தின் மன உளைச்சல், அதைத் தாண்டிய புத்திசாலித்தனம் என கதிர் கதாபாத்திரத்தை நம்பிக்கையுடன் கதிர் கதாபாத்திரத்தைச் சுமந்து கவர்ந்துவிடுகிறார் லெனின். முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் கதிர் கதாபாத்திரத்தில் லெனின், ஆக்ஷன். காதல், கோபம், புத்திசலித்தனம் என அனைத்தையும் நேர்த்தியான நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
பவித்ரா கதாபாத்திரத்தில் அஸ்மின் யாசர், பவித்ராவின் தந்தையாக ஆர்.வி. உதயகுமார், அவரது உதவியாளராக அனுமோகன், பொன் பார்த்திபன், தருண், கெவின், கார்மேகம் சசி, அனுஷா ஆகியோருடன் சேர்ந்து கௌரவ வேடத்தில் முனிஷ்காந்த் மற்றும் சசிகுமார் உட்பட அனைவரும் துணை வேடங்களில் திரைக்கதை நகர்வுக்கு உதவியுள்ளனர். உடல்மொழிக்கெல்லாம் வேலையே இல்லை என்று சொல்லும்விதமாக வசனங்கள் வழியாகவே வில்லத்தனம் காட்டி நடித்திருக்கிறார் ஆர்.வி.உதயகுமார். ஆனால்
ஒரு கல்லூரியில் சிசிடிவி கேமரா கூட இருக்காதா? என்ற கேள்வி எழுகிறது..... காமெடியில் கூடுதல் கவனம் தேவை...
மொத்தத்தில் இந்த 'ரெட் லேபிள்' விறுவிறுப்பு.....
RATING: 3.8/5

கருத்துரையிடுக