Natchathiram Nagargiradhu Movie Review- 'நட்சத்திரம் நகர்கிறது' படம் எப்படி இருக்கிறது பார்ப்போமா?!

Natchathiram Nagargiradhu Movie Review-  'நட்சத்திரம் நகர்கிறது' படம் எப்படி இருக்கிறது பார்ப்போமா?! 



இனியனும் ரெனேவும் காதலர்கள். ஏதோவொரு பிரச்னை காரணமாக இருவரும் பிரிய நேர்கிறது. பிரிவின் துயருடன் சாலையில் நடந்து செல்லும் ரெனே வால் நட்சத்திரம் ஒன்றைக் காண்கிறார். துயரத்தைக் கடந்து ஒரு மகிழ்ச்சி அவளிடம் வெளிப்படுகிறது.

வெவ்வேறு மனநிலை கொண்ட மனிதர்கள் பாண்டிச்சேரியில் இருக்கும் ஒரு அரங்கில் கூடுகிறார்கள். அங்கு காதல் பற்றிய நாடகம் ஒன்றை உருவாக்கத் திட்டமிடுகிறார்கள். காதல் குறித்து இனியன், ரெனே, அர்ஜுன், சில்வியா, ரோஷினி, மெடிலின் எல்லோருக்கும் ஒரு பார்வை இருக்கிறது. எல்லோரின் பார்வையும் இணைந்து ஒரு நாடகமாக உருவெடுக்கிறது. நாடகம் அரங்கேறியதா? காதல் குறித்த அவர்களின் பார்வை என்ன ஆனது? என்பது படத்தின் மீதி கதை.....

'Love is political' என்ற வசனத்திற்கேற்ப மனிதர்களுக்கிடையேயான இயற்கையான காதல் உணர்வை போலி கவுரவம் எப்படி அறுத்து பலியிடத் துடிக்கிறது என்பதை விவரிக்கிறது ப.ரஞ்சித்தின் இந்த படம். 



கிஷோர்குமாரின் ஒளிப்பதிவு காதல் காட்சிகளில் வண்ணங்களைக் கூட்டுகிறது. நாடகம், பாடல்கள், க்ளைமாக்ஸ் என அவரது கேமரா நட்சத்திரமாக பிரகாசிக்கிறது. தென்மாவின் இசை கதையோடு ஒட்டி பயணிப்பது பலம். 'ரங்கராட்டினம்', 'காதலர்' பாடல்கள் கவனம் பெறுகிறது. கலை இயக்கம் வெகுவாக ரசிக்க வைக்கிறது. படத்தின் ஒட்டுமொத்த டோனையும் மாற்றுவதில் கலை இயக்குநர் ஜெயரகுவின் பங்கு முக்கியமானது. 

மொத்தத்தில் இந்த 'நட்சத்திரம் நகர்கிறது'  கதையின் மின்னும் ஒளி.....

   

லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.