FRIDAY MOVIE REVIEW

 ஃப்ரைடே விமர்சனம் 



அனிஷ் மசிலாமணி தயாரிப்பில் ஹரி வெங்கடேஷ் இயக்கத்தில் மைம் கோபி, KPY தீனா, சித்ரா சேனன், சித்து குமரேசன் ஆகியோர் நடிப்பில் நாளை வெளியாகவுள்ள படம் தான் 'ஃப்ரைடே'  

சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்:

மைம்கோபி ஒரு அரசியல் வாதி மற்றும் அதிகார பலம் கொண்ட ரவுடி. தனக்கு எதிரான ஒருவரை போட்டுத்தள்ளி எம்.எல்.ஏ சீட் வாங்கவேண்டும் என்பது அவர் டார்கெட். KPY தீனாவிற்கு தன் அம்மாவின் மரணத்திற்கு காரணமானவர்களை கொல்ல வேண்டும் என்பது இலக்கு. அனிஷ் மாசிலாமணிக்கு தன் தம்பியை கரை சேர்க்க வேண்டும் என்பது டார்கெட். அவரின் தம்பிக்கு அண்ணன் போல் சம்பவக்காரன் ஆகவேண்டும் என்பது குறிக்கோள். இவற்றை சுற்றி எண்ணலாம் நடந்தது? என்பதே கதை....

KPY தீனாவிற்கு இது முக்கியமான படம். தரமான கேரக்டரை உள்வாங்கி தரமாக நடித்துள்ளார். நாயகி சித்து குமரேசன் தேர்ந்த நடிப்பால் கவர்கிறார். ராமச்சந்திர துரைராஜ், கலையரசன், சித்ராசேனன் உள்பட எல்லோரும் கவனிக்க வைக்கிறார்கள். ரவுடியின் பிள்ளை போலீஸ், போலீஸின் பிள்ளை ரவுடி என்பது உள்பட திரைக்கதை ரைட்டிங்கில் நிறைய ட்விஸ்ட் வைத்து எழுதியுள்ளார் இயக்குநர் ஹரி வெங்கடேஷ்.

ஹீரோ அனிஷ் மாசிலாமணி, மைம் கோபி குழுவில் செயல்படும் அடியாளாகவும், தன் தம்பியை நல்ல பாதையில் நடத்த வேண்டும் என்பதையே குறிக்கோளாகக் கொண்டவராகவும் படத்தில் தோன்றுகிறார். தம்பி, அண்ணனைப் போல ரவுடியாக வேண்டும் என்ற எண்ணம் கொண்டு வாழ்வதால், அவர்களின் கதைகளும் மற்ற கதாபாத்திரங்களின் நோக்கங்களும் ஒரே பாதையில் சந்திக்கும் விதமாக கதை அமைக்கப்பட்டுள்ளது.

கதையை இன்னும்  கொஞ்சம் தெளிவாக சொல்லியிருக்கலாம்... சில லாஜிக் மீறல்கள் உள்ளன.....

மொத்தத்தில் இந்த ஃப்ரைடே பாசத்தின் அதிரடி..... 

RATING 2.9/5



This is the most recent post.
பழைய இடுகைகள்

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.