'ஆற்றல்' திரைப்பட விமர்சனம்

'ஆற்றல்' திரைப்பட விமர்சனம் 




ஓட்டுனர் இன்றி தானே இயங்கும் கார் ஒன்றை உருவாக்கும் முயற்சில் இருக்கிறார் விதார்த். இதற்காக அவருக்கு பத்து லட்சம் ரூபாய் பணம் தேவைப்படுகிறது. விதார்த்தின் தந்தை சார்லி, மகனுக்காக பைனான்ஸியரிடம் பணம் கடன் வாங்கி வருகிறார். 

ஆனால் பணத்தை மகனிடம் கொடுப்பதற்கு முன்பே அவர் கொலை செய்யப்படுகிறார். பணமும் கொள்ளை போகிறது. இதே சமயம் நகரில் ஆங்காங்கே முகமூடி கொள்ளை சம்பவங்கள் தொடர் கதையாகி வருகின்றன. கொள்ளையடித்துவிட்டு கொலை செய்வது இந்த கொள்ளை கும்பலின் வாடிக்கை.

ஒரு நாள் கண்ணெதிரே நடுரோட்டில் முதியவர் ஒருவரைக் கொன்று அவரிடமிருந்து முகமூடி கும்பல் பணத்தை கொள்ளையடிப்பதைப் பார்க்கிறார் விதார்த். கொள்ளையர்களைத் துரத்திச் சென்று பணத்தை மீட்டு, கொலையுண்ட முதியவரின் குடும்பத்தில் ஒப்படைக்கிறார். கொள்ளை கும்பல் குறித்து போலீசில் புகார் செய்யப் போகும் விதார்த்தை காவலர்கள் அலட்சியப்படுத்துகிறார்கள். 

வேறு வழியின்றி கொள்ளையர்களைப் பிடிக்க தானே களத்தில் இறங்குகிறார் விதார்த். கொள்ளையர்களை பிடிக்க அவரால் முடிந்ததா? அவரது தானியங்கி கார் கனவு என்னவானது? என்பதை எல்லாம் சுவைபட விவரிக்கும் படம்தான் ஆற்றல். 

சண்டைக்காட்சிகளில் ஆக்ரோஷம் காட்டி அமர்க்களப்படுத்தியிருக்கும் விதார்த், இறந்த போன அப்பாவை தன் மடியில் போட்டுக்கொண்டு கதறி அழும் காட்சியில் நெஞ்சைத் தொடும் வகையில் சிறப்பாக நடித்திருக்கிறார். 

காதல் காட்சிகளுக்கு மட்டுமே பயன்பட்டிருக்கும் நாயகி ஷிரிதா ராவுக்கு படத்தில் பெரிதாக வேலை இல்லை என்றாலும் கொடுக்கப்பட்ட வேடத்தை குறையின்றி செய்திருக்கிறார். விதார்த்துக்கு அடுதபடியாக மனதில் நிற்பவர்கள் அப்பா வேடம் ஏற்ற நகைச்சுவை நடிகர் சார்லியும், வில்லன் வேடத்தில் வெளுத்து கட்டியிருக்கும் வம்சி கிருஷ்ணாவும்தான். அஸ்வின் ஹேமந்த் இசையில் உருவான பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை என்றாலும் பின்னணி இசை கவனிக்க வைக்கிறது. 

கொள்ளையர்கள் 'ஈ' வடிவ ரோபோ ஒன்றி்ல் கேமராவை பொருத்தி கொள்ளையடிக்கப்போகும் வீட்டை வேவு பார்ப்பது புதுமையாக இருக்கிறது. பத்து லட்சம் ரூபாயை வைத்துக்கொண்டு தனி மனிதனாக தானியங்கி கார் ஒன்றை விதார்த் உருவாக்குகிறார் என்பது நம்பும்படி இல்லையே… இரவுக் காட்சிகளை மிகச் சிறப்பாக பதிவு செய்திருக்கிறது கொளஞ்சி குமாரின் கேமரா.

மொத்தத்தில் இந்த 'ஆற்றல்' கனவில் மிதக்கும்.....

லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.