'லவ் டுடே' இளைஞர்களுக்கு குளு....குளு....
இயக்கம்: பிரதீப் ரங்கநாதன்சினிமா வகை:Drama, Romanceகால அளவு:2 Hrs 34 Min
விமர்சனத்தை பார்ப்போம் வாங்க.....
பிரதீப், இவனாவின் காதல், இவனாவின் அப்பாவான சத்யராஜுக்குத் தெரிய வருகிறது. இக்காதலை மறுக்கவோ, ஏற்கவோ செய்யாத சத்யராஜ், இருவரும் தங்களின் மொபைலை ஒருவருக்கொருவர் மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற விவகாரமானதொரு கண்டிஷனை முன்வைக்கிறார்.
24 மணி நேரத்திற்குப் பின்னும் அவர்களின் காதல் தொடர்ந்தால், அவரே அவர்களுக்குக் கல்யாணம் செய்து வைப்பதாகவும் உறுதியளிக்கிறார். இந்த கண்டிஷனைக் கடந்து இந்த ஜோடியின் காதல் கைகூடியதா, இருவரின் மொபைல்களிலும் ஒளிந்திருக்கும் ரகசியங்கள் என்னென்ன? அதனால் உண்டாகும் சிக்கல்கள் என்னென்ன? என்பதை இந்தக் காலத்துக் காதல் கதையாகச் சொல்லியிருக்கிறது 'லவ் டுடே'.
ரகளையான காட்சியமைப்புகளுடன் தொய்வில்லாத திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர் பிரதீப். பெரும்பாலான காட்சிகளும், வசனங்களும், 2k மற்றும் 90ஸ் கிட்ஸ் இளைஞர்களின் வாழ்வின் பிரதிபலிப்பாக, அவர்கள் காதலை அணுகும் விதத்தின் பிரதிபலிப்பாக அமைந்திருப்பது சிறப்பு.
இப்படத்தை பிரதீப்பே எழுதியிருப்பதால், 'உத்தமன் பிரதீப்' என்ற ஹீரோ கதாபாத்திரத்தின் உடல்மொழியை, தனக்கு ஏற்றதுபோலவே உருவாக்கியிருக்கிறார். இவானா தன் பங்கிற்கு, பிரதீப்போடு மல்யுத்தம் செய்கிறார்.
காதல் சண்டையிலும் சரி, நடிப்பிலும் சரி! பிரதீப்பின் அம்மாவாக ராதிகாவும், நிகிதாவின் அப்பாவாக சத்யராஜும் கச்சிதமான தேர்வு. தன் முந்தைய படத்தைப் போலவே, இப்படத்திலும் யோகி பாபுவுக்கு ஒரு நல்ல கதாபாத்திரத்தை பிரதீப் வழங்கியிருக்கிறார்.
பிரதீப்பின் அக்காவாக நடித்திருக்கும் ரவீனா ரவி, நண்பர்களாக வரும் ஃபைனலி பாரத், ஆதித்யா கதிர் என அத்தனை துணை கதாபாத்திரங்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேடங்களைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.
நேரடி ஆபாச வசனங்களை படத்தில் தவிர்த்திருந்தால் குடும்பமாக அமர்ந்து பார்த்திருக்க முடியும்...... இருந்தாலும் பரவாயில்லை
மொத்தத்தில் இந்த 'லவ் டுடே' இளைஞர்களுக்கு குளு....குளு....டுடே....
கருத்துரையிடுக