"யுத்த சத்தம்" திரைப்படத்தை ஒளிபரப்பும் கலர்ஸ் தமிழ்!
வயாகாம்18-ன் தமிழ் பொழுதுபோக்கு சேனலான கலர்ஸ் தமிழ், வரும் வெள்ளிக்கிழமை, டிசம்பர் 2 அன்று இரவு 9:30 மணிக்கு யுத்த சத்தம் திரைப்படத்தின் உலகத் தொலைக்காட்சி பிரீமியரை ஒளிபரப்ப தயாராக இருக்கிறது. பிரபல நடிகர்கள் ஆர். பார்த்திபன் மற்றும் கௌதம் கார்த்திக் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இத்திரைப்படம் திகிலூட்டும் விதத்தில் நடத்தப்பட்ட ஒரு கொலை சம்பவத்தின் மர்ம முடிச்சுகளை அவிழ்த்து, கொலையாளியை கண்டறிவதற்காக முற்படும் ஒரு காவல்துறை அதிகாரி மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த ஒரு துப்பறியும் நிபுணரின் ஒருங்கிணைந்த முயற்சிகளையும், அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களையும் இசையின் மர்மச் சுவையோடு திரைக்கதை சித்தரிக்கிறது.
திடுக்கிட வைக்கும் மர்மக்கொலையின் புதிரையும், எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த அடுக்கடுக்கான சம்பவங்களையும் டிசம்பர் 2 வெள்ளியன்று இரவு 9:30 மணிக்கு கலர்ஸ் தமிழில் காணத் தயாராகுங்கள்.
எழிலின் திறன்மிக்க இயக்கத்தின் வெளிவந்த இத்திரைப்படத்தில் நடிகை சாய்பிரியா தேவா, நடிகர் ரோபோ சங்கர், நடிகர் வையாபுரி மற்றும் நடிகர் மனோபாலா ஆகியோரும் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டி. இமான் அவர்களின் பின்னணி இசை இதன் திகிலை மேலும் உயர்த்தி சிறப்பான மர்மத் திரைப்படமாக உயர்த்துவதில் வெற்றி கண்டிருக்கிறது.
தொடர்ச்சியான துயர சம்பவங்களை மையமாகக் கொண்டு படைக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படம், ஒரு தனிப்பட்ட சோக நிகழ்வை எதிர்கொண்டதற்குப் பிறகு காவல்துறை அதிகாரியான கதிர்வேலன் (நடிகர் ஆர். பார்த்திபன்) பணிக்கு மீண்டும் திரும்புவதிலிருந்து தொடங்குகிறது. அடையாளம் தெரியாத நபர்களால் எண்ணற்ற முறைகள் கத்தியால் ஒரு பெண் குத்தப்படும் கொடூர சம்பவமான வழக்கை அவர் கையாள வேண்டியிருக்கிறது. நகுலன் என்ற இளைஞனின் பெண் நண்பியாகவும் கொலையுண்ட இந்த பெண் இருக்கிறாள். ஒரு உளவியலாளராகவும், துப்பறியும் நிபுணராகவும் இருக்கும் நகுலன் (கௌதம் கார்த்திக்), கொலையாளிகளை கண்டுபிடிக்க முயற்சிக்கின்றபோது காவல்துறை அதிகாரி கதிர்வேலனின் பாதையில் குறுக்கிட வேண்டியிருக்கிறது. கொலைக்கு காரணம் என்று கதிர்வேலன், நகுலனை சந்தேகிக்க தொடங்குகிறான். தான் குற்றமற்றவர் என்று வலியுறுத்தும் நகுலன், ராகவியின் கொலைக்கு காரணமான குற்றவாளியை நீதியின் முன் கொண்டுவந்து நிறுத்த சபதம் ஏற்கிறார். கொலையாளி யார் மற்றும் என்னென்ன மர்மங்களை அவிழ்க்க வேண்டியிருக்கிறது என்பது கதையின் எஞ்சிய பகுதியாக விரிகிறது.
யுத்த சத்தம் திரைப்படத்தின் உலகத்தொலைக்காட்சி பிரீமியர் பற்றி இயக்குனர் எழில் பேசுகையில், “இசை எப்படி ஒரு ஆற்றல்மிக்க மருந்தாக செயல்பட முடியும் என்று காட்டுகின்ற ஒரு தனித்துவமான கருத்தாக்கத்தை மக்கள் முன் வைப்பதே இத்திரைப்படத்தின் பின்னணி நோக்கமாகும். இக்கருத்தைச் சுற்றி இத்திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. பிரபல மர்மக் கதை எழுத்தாளர் ராஜேஷ் குமார் இதே பெயரில் எழுதிய புத்தகத்தின் தழுவலான இத்திரைப்படத்தில், நாவலின் விறுவிறுப்பு சற்றும் குறையாமல் இருக்கும் வகையில் நாங்கள் திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறோம். நடிகர்கள் பார்த்திபனும், கௌதம் கார்த்திக்கும் இத்திரைப்படத்தில் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர். மற்ற துணை நடிகர்களின் பங்களிப்பும் முக்கியமானது. கலர்ஸ் தமிழ் சேனலில் இதன் உலகத் தொலைக்காட்சி பிரீமியர், ஒளிபரப்பாகும் நிலையில் தனித்துவமான கருத்தாக்கம் கொண்ட இத்திரைப்படம் மிகப்பெரிய எண்ணிக்கையில் உலகளவில் ரசிகர்களை சென்றடையும் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். குடும்பத்தினர் அனைவரும் ஒன்றுகூடி இத்திரைப்படத்தை கண்டு ரசிப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.” என்று கூறினார்.
இதுபற்றி நடிகர் பார்த்திபன் கூறியதாவது: “இத்திரைப்படத்தில், அதுவும் குறிப்பாக கௌதம் கார்த்திக் அவர்களுடன் நடித்தது ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது. திரைப்படத்தின் கருப்பொருள் மிக வித்தியாசமானதாக, சிறப்பானதாக உண்மையிலேயே இருந்தது. வழக்கமான கதைகளிலிருந்து மாறுபட்டதை தேர்வு செய்யும் எனது விருப்பத்திற்கு ஏற்றவாறு இத்திரைக்கதையும் அமைந்திருந்தது. ஆகவே, யுத்த சத்தம் திரைப்படம் எனது மனதிற்கு நெருக்கமானதாக இருக்கும். உலகளவில் தொலைக்காட்சி பிரீமியராக கலர்ஸ் தமிழில் இத்திரைப்படம் ஒளிபரப்பாவதால் இந்த திரில்லர் திரைப்படத்தை மிக அதிக எண்ணிக்கையிலான மக்கள் பார்த்து வித்தியாசமான அனுபவத்தைப் பெறுவார்கள் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.”
கலர் தமிழ் சேனலில் டிசம்பர் 2 இரவு 9:30 மணிக்கு யுத்த சத்தம் திரைப்படத்தின் உலகத் தொலைக்காட்சி பிரீமியரை தவறாமல் கண்டு ரசிக்க எதிர்பார்ப்புடன் காத்திருங்கள்.
அனைத்து முன்னணி கேபிள் வலையமைப்புகளிலும் மற்றும் சன் டைரக்ட் (CHN NO 128), டாடா ஸ்கை (CHN NO 1515), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO 553) ஆகிய அனைத்து டிடீஹெச் தளங்களிலும் கலர்ஸ் தமிழ் அலைவரிசை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசிக்கலாம்.
கருத்துரையிடுக