'கேமரா எரர்' படத்தின் விமர்சனம்!

'கேமரா எரர்' படத்தின் விமர்சனம்! 




இசை - ஷ்ரவன் கலை

ஒளிப்பதிவு - பாலாஜி எஸ்.பி.

தயாரிப்பு - துபாய் மிஸ்ரா

விஸ்டர் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியிருக்கும்  படம் தான்  'கேமரா எரர்.'

சுதிர், பிரபாகரன், ஹரிணி, சிம்ரன் உள்ளிட்ட புதுமுகங்கள் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார் அகரன். உண்மைச் சம்பவங்களை படமாக எடுக்க படக்குழுவினர் ஒரு மலை கிராமத்திற்கு செல்கின்றனர். தினமும் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

ஆனால் ஒவ்வொரு நாளும் படக்குழுவினரின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. சந்தேகத்துடன் கவனிக்கையில் அங்கே இறந்துபோனவர்களின் ஆவிகள் இவர்களுடன் கலந்துவிடுகின்றனர்.

இப்படி பிரச்னைகளில் சிக்கித் தவிக்கும் படக்குழுவினர் ஆவிகளிடமிருந்து தப்பித்தார்களா? படப்பிடிப்பை முடித்தார்களா? என்று பரபரப்பாக சொல்லுவதே கதைக்களம்.

படப்பிடிப்பில் இயக்குநர் காட்சியை விளக்கிவிட்டு ஆக்க்ஷன் என்றதும் அக்காட்சியில் நடிப்பவர்களே யோசித்து வைத்த வசனத்தை சொல்லி நடிக்க வேண்டும். இப்படித்தான் படத்தின் அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளது. ஒரு புதிய முயற்சியை எடுத்துள்ளார்  இயக்குநர் அகரன். 

ஆனால் படத்தில் வரும் ஆபாச காட்சிகள் பார்க்க சலிக்க வைக்கிறது. சினிமா கதாநாயகிகள் என்றாலே அவர்கள் படுக்கை அறைக்கு சென்று தான் நடிக்க வருகிறார்கள் என்பதை இப்படத்தில் வெட்ட வெளிச்சமாக காட்டுவது முகம் சுளிக்க வைக்கிறது. இந்த படத்தை குடும்பமாக நிச்சயம் பார்க்க முடியாது....  

மொத்தத்தில் இந்த 'கேமரா எரர்' ஆபாச கிளு..கிளு....  


லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.