'ஃபால்' இணைய தொடர் இப்போது டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில்!

 'ஃபால்' இணைய தொடர்  இப்போது டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில்!



சென்னை: 

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ‘ஃபால்’ இணைய தொடரினை  வெளியிட்டுள்ளது. இத்தொடரில் நடிகை அஞ்சலி முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார். 

இத்தொடர் வெளியாவதற்கு முன்னதாக, டிசம்பர் 8ஆம் தேதி வியாழன் அன்று, இந்தத் தொடரின் முதல் அத்தியாயத்தின் சிறப்புக் காட்சி ஊடகங்களுக்காக திரையிடப்பட்டது.

'ஃபால்' இணைய தொடரின் சிறப்பு திரையிடலுக்கு ஊடகவியலாளர்களை வரவேற்றுப் பேசிய ஹாட்ஸ்டார் தமிழ் - தலைமை நிர்வாகி கிருஷ்ணன் குட்டி கூறியதாவது.., 

"'ஃபால்' தொடரை உருவாக்கியதற்காக நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம், இதில் பணியாற்றிய அனைத்து நடிகர்கள் மற்றும் குழுவினருக்கும் நன்றி. ரசிகர்கள் விரும்பும் சிறந்த தமிழ் கதைகளை அனைவருக்கும் சேரும்படி தயாரிக்க வேண்டுமென்பதே எங்கள் நோக்கம்.  நாங்கள் இத்தொடரை 7 மொழிகளில் வெளியிடுகிறோம். 

திரையுலகில் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளரும், இந்தத் தொடரின் இயக்குநருமான சித்தார்த் ராமசாமி கூறியதாவது:

“நான் இயக்குநராக அறிமுகமாகும் தொடர் ‘ஃபால்’. நான் ஒளிப்பதிவாளராக 30 படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளேன். இத்தொடர் சிறப்பாக வர காரணமான தயாரிப்பாளர்களுக்கும், டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் கிருஷ்ணன் குட்டி ஆகியோருக்கும் எனது  நன்றிகள்.

"ஒரு நல்ல கதை இருக்கும் போது இயக்குனரின் பணி மிகவும் எளிதாகிவிடுகிறது. கதை நன்றாக வந்தால் 50 சதவிகிதம் போரில் வென்றது போல் இருக்கும். நல்ல கலைஞர்கள் இருந்தால் இருபத்தைந்து சதவிகிதம் வெற்றி கிடைக்கும். அது இந்தத் தொடரில் முழுமையாக கிடைத்தது. இத்தொடரில் பணியாற்றிய அருமையான நடிகர்கள் அனைவருக்கும் நன்றியும் பாராட்டும் தெரிவித்து கொள்கிறேன். அவர்கள்  தான் இந்த தொடரின் தூண்கள்.  அவர்களின் பங்களிப்பு இல்லாமல், இந்தத் தொடர் முழுமையாகியிருக்காது."

"அடுத்ததாக எனது தொழில்நுட்பக் குழு. இந்த தொடரில் நான் இயக்குனராகவும், ஒளிப்பதிவாளராகவும் இரண்டு பாத்திரங்களை செய்துள்ளேன். நான் கேட்பதை எனது குழுவினர் புரிந்து கொண்டு அதற்கேற்ப பணியாற்றியதால், என்னால் இதை உருவாக்க முடிந்தது. இந்த தொடர் சிறப்பாக வந்துள்ளது. உங்கள் அனைவருக்கும்  பிடிக்கும் என்று நம்புகிறேன்."


இந்த விழாவில் பேசிய இசையமைப்பாளர் அஜீஷ் கூறியதாவது:

 "கடவுள் என் மேல் கருணை காட்டியுள்ளார். இந்த வருடத்தில் இது என்னுடைய நான்காவது ரிலீஸ். இந்தத் தொடரில் நடித்த அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். இது ஒரு உணர்வுப்பூர்வமான  திரில்லர் தொடராகும். எனவே, பின்னணி இசையில் பணியாற்றுவதற்கு நிறைய இடங்கள்  இருந்தது. உங்கள் அனைவருக்கும் இந்தத் தொடர் பிடிக்கும் என்று நம்புகிறேன். நன்றி”

இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள  நடிகை பூர்ணிமா பாக்யராஜ் கூறியதாவது:

"ஃபால்’ எனது இரண்டாவது வெப் சீரிஸ். அஞ்சலியின் எல்லா படங்களிலும், அவருடைய நடிப்பை நான் ரசித்துள்ளேன். அவர் ஒரு அருமையான நடிகை. நான் இத்தொடரில் பணியாற்றுவதற்கு முன்பு எதிர்பாராதவிதமாக எனக்கு என் கையில் காயம் ஏற்பட்டு இருந்தது. அதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலையில் நான் இருந்தேன். அதனால் இந்த அற்புதமான தொடரில் பணிபுரியும் வாய்ப்பை இழக்க நேரிடும் என்று நான் கவலைப்பட்டேன். நான் இயக்குனரை அழைத்து, எனது நிலையை கூறி,  எனக்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் ஓய்வு தேவை என்று விளக்கினேன். இயக்குனர் மிகவும் அனுசரித்து, இரண்டு நாட்கள் என் பகுதிகளை ஒத்திவைக்க முன்வந்தார். இந்தத் தொடரில் நான் இவர்களுடன் வேலை செய்தது  மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது."


இந்நிகழ்ச்சியில் பேசிய நமிதா கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:

” இந்தத் தொடரில் பணியாற்ற வாய்ப்பு அளித்த யூனிட்டுக்கு நன்றி. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் என்னுடைய குடும்பம் போல் ஆதரவாக இருந்தார்கள். இந்த தொடர் அனைவரின் உழைப்பில் உருவாகியுள்ளது. உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும். 

இந்தத் தொடரில் முக்கியப் பங்கு வகிக்கும் நடிகர் ராஜ்மோகன் கூறியதாவது: 

"ஃபால் தொடர் நமக்கு ஒரு முக்கியமான செய்தியை கூறுகிறது. நாம் அனைவரும் ஒரு இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கலாம், நாம் வீழ்ந்திருக்கலாம், ஆனால் அதை எல்லாம் தாண்டி முக்கியமானது என்னவென்றால், உங்களை யார் தள்ளினார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், நீங்கள் மீண்டும் எழ வேண்டும். இதை தான் ஃபால்  தொடர் கூறவருகிறது.”

நடிகர் சந்தோஷ் பிரதாப் கூறுகையில்:

"என்னை இந்த அழகான வெப் சீரிஸில் ஒரு பகுதியாக மாற்றியதற்காக எனது இயக்குனர், தயாரிப்பாளர்கள் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆகியோருக்கு நன்றி. அனைத்து தரப்பு பார்வையாளர்களும் ரசிக்ககூடிய வெப் சீரிஸ் இது. இந்தத் தொடர் எனக்கு மிகவும் பிடித்திருந்தது."

நடிகரும் பாடகருமான எஸ்.பி.பி சரண், "நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிகராக உங்கள் முன் வருகிறேன். இதற்கு முன்பு சித்தார்த்துடன் பணியாற்றியிருக்கிறேன். அவர் எனக்கு மிகவும் நெருக்கமானவர். அவர்  எவ்வளவு சீக்கிரமாக படமெடுப்பார் என்பது எனக்கு தெரியும், அதனால் தான் இந்தத் தொடரைத் தேர்ந்தெடுத்தேன். நான் இந்த கதாபாத்திரத்திற்கு பொருந்துவேன் என்பதில் சித்தார்த் உறுதியாக இருக்கிறாரா என்பதை தெரிந்து கொள்ள, நான் அவரிடம் இதை நேரடியாகவே கேட்டேன். அவர் "நீங்கள்  இதை செய்தால் தான் நன்றாக இருக்கும்" என்றார். நான் ஒத்துக் கொண்டேன" இத்தொடர் கண்டிப்பாக உங்களை கவரும்". 


இத்தொடரில் நாயகியாக நடிக்கும் நடிகை அஞ்சலி கூறுகையில்:

"ஃபால் எனக்கு மிகவும் ஸ்பெஷலான தொடர். வழக்கத்திற்கு மாறான ஒரு கேரக்டரில் நடித்துள்ளேன். இத்தொடரில் எனது பெயர் திவ்யா. எனக்கு திரில்லர்கள் பிடிக்கும், இத்தொடர் நல்ல திரில்லர் அனுபவத்தை தரும். இந்தத் தொடரில் பல திருப்பங்கள் உள்ளன. அனைவரின் கதாபாத்திரங்களும் அனைவரையும் கவரும் வகையில் வலுவானபாத்திரமாக இருக்கும். இது ஹாட்ஸ்டாருக்கான எனது இரண்டாவது படமாகும். ஹாட்ஸ்டார் இணைந்து பணியாற்ற மிகவும் வசதியான ஒரு தளமாகும்."

இந்த “ஃபால்” தொடர் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் தொடர்,  விருது பெற்ற கனடிய மினி-சீரிஸ் 'வெர்டிஜ்' உடைய  அதிகாரப்பூர்வ தழுவல்  ஆகும்.  Armoza Formats விநியோகித்துள்ள Banijay Asia  தயாரித்துள்ளது. 

ITV company நிறுவனமான Armoza Formats  விநியோகம் செய்யப்படும் ,  ‘ஃபால்’  தொடர்  மைக்கேல் ஆலன் எழுத்தில், விருது Productions Pixcom Inc நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட  "வெர்டிஜ்"  எனும் கனடிய வெப் சீரிஸின் அதிகாரப்பூர்வ தழுவலாகும்.  

ஒரு  இளம் பெண்ணிற்கு தான் தற்கொலைக்கு முயன்ற  24 மணி நேர சம்பவங்கள் மட்டுமே ஞாபகத்தில் உள்ளது.  உண்மையில் என்ன நடந்தது என்பதை தேட ஆரம்பிக்கிறாள், தன் நண்பர்கள் உறவினர்கள் பற்றிய உண்மைகள் ஒவ்வொன்றாக வெளிவர, எது உண்மை யாரை நம்புவது எனும் குழப்பம் உண்டாகிறது.  மறந்து போன தன் நினைவுகளிலிருந்து உண்மையை கண்டுபிடிக்க முயல்கிறாள். 

‘ஃபால்’ (Fall) தொடரை இயக்குவதுடன்  ஒளிப்பதிவும் செய்துள்ளார் இயக்குநர் சித்தார்த் ராமசாமி. இத்தொடருக்கு அஜேஷ் இசையமைக்க, படத்தொகுப்பை கிஷன் C செழியன் செய்துள்ளார்.



லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.