பிரசாந்த் மருத்துவமனை சார்பில் இளம் இதயங்களை பாதுகாக்கும் பிரச்சாரம்!

பிரசாந்த் மருத்துவமனை சார்பில் இளம் இதயங்களை பாதுகாக்கும் பிரச்சாரம்! 


சென்னை: 

இளம் இதயங்களைச் பாதுகாக்கும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள பிரசாந்த் பன்னோக்கு மருத்துவமனை லயோலா கல்லூரியின் விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் துறையுடன் இணைந்து ‘இதயத் திரைப்பட விழாவை’ நடத்தியது. இதில் பங்கேற்ற சிறந்த குறும்படங்களுக்கான விருதை இன்று பிரசாந்த் மருத்துவமனை அறிவித்தது. இந்த விருதை இன்று லயோலா கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் 3 மாணவர்களுக்கு புகழ்பெற்ற திரைப்படஇயக்குனர் வெற்றிமாறன் வழங்கினார். முதல் 3 இடங்களைப் பிடித்த குறும்படங்களுக்கு விருதுடன் முறையே 1 லட்சரூபாய், 50 ஆயிரம் ரூபாய் மற்றும் 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. ‘சேவ் யங் ஹார்ட்ஸ்’ பிரச்சாரம் குறித்த இதழையும் இயக்குனர் வெற்றிமாறன் வெளியிட்டார். 

இந்தநிகழ்ச்சியில், ஆரோக்கியமான இதயத்தை பராமரிப்பதில் வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையின் முக்கியத்துவத்தை பிரசாந்த் மருத்துவமனையின் இதய நோய் நிபுணர்கள் குழு எடுத்துக் கூறியது: 

‘டோபமைன் டெவில்ஸ்’ என்னும் குறும்படம் முதல் பரிசை தட்டிச் சென்றது.இளைஞர்களிடையே இதய ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதில் இதைதயாரித்தவர்களின் அற்புதமான மற்றும் ஆக்கப்பூர்வமான முயற்சிக்காக இந்த விருது வழங்கப்பட்டது. இதே போன்று ‘விழித்துக்கொள்’ மற்றும் ‘லைப்ஸ்டைல்’ ஆகிய குறும்படங்கள் முறையே இரண்டு மற்றும்மூன்றாம் பரிசைப்பெற்றன. 

இது குறித்து பிரசாந்த் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் பிரசாந்த்கிருஷ்ணா கூறுகையில்: 

சமீபகாலமாக திடீர் மாரடைப்பால் பாதிக்கப்படும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மிகுந்த கவலைஅளிக்கிறது. இளைஞர்கள் இடையே இதய பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும்விதமாக சமூக பொறுப்புள்ள மருத்துவமனை என்பதன் அடிப்படையில் வாழ்க்கை முறை மற்றும் உணவு முறைகளை மாற்றுவதன் முக்கியத்துவத்தை அவர்களிடம் கொண்டு செல்லும் விதமாக இது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை நாங்கள்கடந்த ஆண்டு துவக்கி அதை சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம். இன்று இந்த பிரச்சாரம் பல இளைஞர்களை சென்றடைந்து இருப்பது குறித்து நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். இது எங்கள் நீண்ட பயணத்தின் முதல் படி மட்டுமே. இதய பாதுகாப்பு தொடர்பாக சிறந்த குறும்படங்களை தயாரித்த மாணவர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதோடு, இந்த பணியில் எங்களுக்கு ஆதரவு அளித்த லயோலா கல்லூரிக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். 




இது குறித்து தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் கூறுகையில்: 

இன்று நான் பார்த்த படங்கள் அனைத்தும் மிகவும் அற்புதமானவை. அவை உண்மையிலேயே இளைஞர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.இன்றைய காலக்கட்டத்தில் இதய ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகவும் முக்கியமானது, குறிப்பாக இளைஞர்களிடையே பிரசாந்த் மருத்துவமனை மற்றும் லயோலா கல்லூரி இணைந்து இந்த முயற்சியை மேற்கொண்டு இருப்பது குறித்துநான் மிகுந்த மகிழ்ச்சிஅடைகிறேன்.வெற்றி பெற்றவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.

லயோலா கல்லூரியின் விஷுவல் கம்யூனிகேஷன் துறையின் ஒருங்கிணைப்பாளர் பி. நித்யா பேசுகையில்: 

இளைஞர்களிடையே இதய ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த பிரசாந்த் மருத்துவமனையுடன் இணைந்து செயல்படுவது குறித்துமிகவும் பெருமையாக இருக்கிறது என்றார். 

உலக இதய தினத்தையொட்டி இளம் இதயங்களை பாதுகாக்கும் பிரச்சாரத்தை கடந்த செப்டம்பர் மாதம் 10–ந்தேதி தமிழக சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்தார். இளைஞர்களிடையே ஆரோக்கியமான இதயத்தை பராமரிக்க வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.