"தக்ஸ்" விமர்சனம்
பிரபல நடன இயக்குனர் பிருந்தா இயக்கியிருக்கும் இரண்டாவது படம் தக்ஸ். முதல் படத்தை காதல் படமாக இயக்கியவர் இம்முறை ஒரு ஆக்ஷன் படத்துடன் வந்து இருக்கிறார். ஜெயிலில் இருந்து தப்பிக்க நினைக்கும் குற்றவாளிகளின் கதையாக தக்ஸ் படம் உருவாகியுள்ளது.
ஹிர்து ஹாரூன் தனது காதலிக்கு தொல்லை கொடுத்த ஒருவனை கொலை செய்துவிட்டு சிறைக்கு செல்கிறார். எப்படியாவது சிறையில் இருந்து தப்பித்துவிட்டு காதலியுடன் வெளிநாடு செல்ல வேண்டும் என்பது இவரின் திட்டம். இதற்கு சிறையில் இருக்கும் சக கைதிகளின் உதவியை நாடுகிறார். சிறையில் இருக்கும் பாபி சிம்ஹா, முனீஷ்காந்த் உள்ளிட்ட கைதிகள் சம்மதிக்கின்றனர். இறுதியில் எல்லோரும் சிறையில் இருந்து தப்பித்தார்களா? இல்லையா? என்பதே மீதி கதை....
படத்தின் ஆகச்சிறந்த பலம் அதன் மேக்கிங். சிறைச்சாலையின் அந்த நான்கு அறைகளுக்குள்ளாக அங்கிருக்கும் லைட்டிங்குகளை பயன்படுத்தி காட்சிகளை ரம்மியமாக்கியிருக்கிறது பிரியேஷ் குருசாமியின் லென்ஸ். பரபரப்பு பசிக்கு தேவைப்படும் தீனியை ஃபுல் மீல்ஸ் ஆக கொடுத்து பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார் சாம்.சி.எஸ். உண்மையில் த்ரில்லர் ஜானர்கள் சாமுக்கான குலாம்ஜாமுன்கள் என்பதில் ஐயமில்லை. அதேபோல பிரவீன் ஆண்டனியின் கட்ஸ்கள் கச்சிதம். குறிப்பாக இறுதிக் காட்சி ஈர்ப்பு.
மொத்தத்தில் இந்த தக்ஸ் சிறைக்குள் காதல்.....
கருத்துரையிடுக