அயோத்தி திரைப்படம் 7 ஏப்ரல் 2023 முதல் ZEE5 ஓடிடி தளத்தில்!
இந்தியாவின் மிகப்பெரிய ஓடிடி தளமான ZEE5 தனது அடுத்த தமிழ் வெளியீடாக, பரவலான பாராட்டுக்கள் பெற்ற ‘அயோத்தி’ படத்தின் உலக டிஜிட்டல் பிரீமியரை அறிவித்துள்ளது. Trident Arts தயாரிப்பில், அறிமுக இயக்குநர் R. மந்திர மூர்த்தி இயக்கத்தில் வெளியான இப்படத்தில் ,நடிகர் சசிகுமார், ப்ரீத்தி அஸ்ரானி, யஷ்பால் ஷர்மா மற்றும் புகழ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். உலக திரைப்பட தகவல் தளமான ஐஎம்டிபி இணையதளத்தில் 8.5 மதிப்பீட்டினை, பெற்றுள்ள அயோத்தி திரைப்படம், திரையரங்குகளில் அமோகமான வரவேற்பைப் பெற்றது. தற்போது 7 ஏப்ரல் 2023 அன்று இப்படத்தின் அதிகாரப்பூர்வ உலக டிஜிட்டல் பிரீமியரை ZEE5 அறிவித்துள்ளது.
அயோத்தியிலிருந்து ராமேஸ்வரத்திற்குச் சுற்றுலா செல்ல முடிவெடுக்கும் நான்கு பேர் கொண்ட குடும்பத்தைச் சுற்றி இப்படத்தின் கதை சுழல்கிறது. மதுரையிலிருந்து இராமேஸ்வரம் செல்லும் கார் பயணத்தின்போது, தேசபக்தர் பல்ராம் (யஷ்பால்) ஓட்டுநரிடம் தவறாக நடந்து கொள்கிறார், இருவருக்குமான வாக்குவாதத்தால் ஏற்படும் விபத்து, பல்ராமின் மனைவியின் மரணத்திற்கு வழிவகுத்து விடுகிறது. மீதிக் கதையானது, இரண்டு குழந்தைகள் தங்கள் அதீத மதவெறி பிடித்த தந்தையின் கைகளில் படும் துன்பங்களையும், டிரைவரின் நண்பர்களான இருவர் (சசிகுமார் மற்றும் புகழின் கதாபாத்திரங்கள்) தங்கள் தாயின் சடலத்தை எடுத்துச் செல்ல குழந்தைகளுக்கு உதவுவதையும் சித்தரிக்கிறது. எல்லா முரண்பாடுகளையும் மீறி அவர்களின் சொந்த ஊருக்கு எப்படிச் செல்கிறார்கள் என்பதே படம். மதங்களைத் தாண்டிய மனிதநேயம் போற்றும் காவியமாக இப்படம் அனைத்து தரப்பினராலும் பாராட்டுக்களைக் குவித்தது.
மதம், மூடநம்பிக்கைகள், ஆண்களின் பேரினவாத மனப்பான்மை மற்றும் பல சமூக பிரச்சினைகளை இந்தக்கதை வழியே அழுத்தமாக பேசுகிறது அயோத்தி திரைப்படம். மேலும், மொழி, புவியியல் மற்றும் மத அரசியல் ஆகியவை படத்தின் கதையில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இசையமைப்பாளர் NT ரகுநந்தனின் பின்னணி இசை உணர்ச்சியமான காட்சிகளை வேறொரு நிலைக்கு உயர்த்துகிறது, மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு அயோத்தி மற்றும் ராமேஸ்வரத்தின் தோற்றத்தையும் உணர்வையும் மிக அழகாகப் படம்பிடித்துள்ளது.
ZEE5 இந்தியாவின் தலைமை வணிக அதிகாரி மனிஷா கல்ரா படம் குறித்து கூறுகையில்,
ZEE5 தளத்தில் எங்கள் பார்வையாளர்களுக்கு தொடர்ந்து தரமான பொழுதுபோக்கை வழங்குவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம், மேலும் எங்களின் தமிழ் வெளியீடுகள் இந்தியா முழுவதும் கவனத்தை ஈர்த்து வருகிறது. வெவ்வேறு ஜானர்கள், புதுப்புது திறமைகள், உயர்தரத்திலான தயாரிப்பு மற்றும் தெளிவான வடிவங்கள் கொண்ட கதைகளை நாங்கள் பார்வையாளர்களுக்கு காட்சிப்படுத்துகிறோம். அந்த வகையில் எங்களின் அடுத்த வெளியீடாக அயோத்தி படத்தின் உலக டிஜிட்டல் பிரீமியரை அறிவிப்பது மகிழ்ச்சி. மதங்களை தாண்டிய மனிதநேயத்தை போற்றும் இக்கதை ஒற்றுமையையும் அன்பையும் பேசுகிறது.எங்கள் பார்வையாளர்களை மகிழ்விக்கும் அதே வேளையில் அவர்களை ஒன்றாக இணைக்கும் மேலும் இதுபோன்ற கதைகளை வழங்க நாங்கள் ஆவலாக உள்ளோம்.
நடிகர் எம்.சசிகுமார் கூறுகையில்,
“மனித நேயம் பேசும் ஒரு அழகான காவியமான "அயோத்தி" படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமை அடைகிறேன். இப்படம் மனித உணர்வுகளின் சரியான கலவையைக் கொண்டுள்ளதோடு 'வாழ்க்கை' என்ற இந்தப் பயணத்தில் உங்கள் நம்பிக்கையை அதிகரிக்கும். திரையரங்கில் பாராட்டுக்களைப் பெற்ற இப்படம், இன்னும் பெரிய அளவிலான பார்வையாளர்களைச் சென்றடைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். 190+ நாடுகளில் பார்வையாளர்களைக் கொண்டிருக்கும் ZEE5 தளத்தில் இப்படம் வெளியிடப்படுவது மிகப்பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. அயோத்தி படம் மூலம் ரசிகர்கள் ஒரு அழகான அனுபவத்தைப் பெறுவார்கள்.
ப்ரீத்தி அஸ்ரானி கூறுகையில்,
“ஷிவானி கதாப்பாத்திரத்திற்கு நடப்பது உண்மையிலேயே ஒரு சர்ரியல் அனுபவம். அயோத்தியின் கதை மிக அற்புதமானது. ஓடிடி வெளியீட்டின் மூலம், எங்கள் படம் அதிகமான பார்வையாளர்களைச் சென்றடையும் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்தக்கதை உங்கள் மனதில் மாற்றம் தரும். இது உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நீங்கள் பார்க்கக்கூடிய அற்புதமான திரைப்படமாக இருக்கும்.
ZEE5 பற்றி:
ZEE5 என்பது இந்தியாவின் முன்னணி ஓடிடி தளம் மற்றும் மில்லியன் கணக்கான பார்வையாளர்களுக்கு பன்மொழியில் கதைசொல்லும் ஒரு தளமாகும். ZEE5 ஆனது Global Content Powerhouse, ZEE Entertainment Enterprises Limited (ZEEL) நிறுவனத்தில் இருந்து உருவானது. அனைவருக்கும் பிடித்தமான ஒரு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாக, நுகர்வோருக்கு இந்த தளம் இருந்து வருகிறது; இது 3,500 படங்களுக்கு மேல் உள்ளடக்கிய ஒரு விரிவான தளம் மற்றும் பலவிதமான கதைகள் கொண்ட ஒரு பெரும் திரை நூலகத்தை இது பார்வையாளர்களுக்கு வழங்குகிறது; 1,750 டிவி நிகழ்ச்சிகள், 700 ஒரிஜினல் மற்றும் 5 லட்சம் மணிநேர உள்ளடக்கங்கள். 12 மொழிகளில் (ஆங்கிலம், இந்தி, பெங்காலி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, ஒரியா, போஜ்புரி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி) சிறந்த ஒரிஜினல் படங்கள், இந்திய மற்றும் சர்வதேச திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இசை, குழந்தைகள் நிகழ்ச்சிகள், Edtech, Cineplays, செய்திகள், Live TV, மற்றும் ஆரோக்கியம், வாழ்கை முறை சார்ந்த உள்ளடக்கங்கள் இதில் உள்ளன. உலகளாவிய தொழில்நுட்ப அமைப்பாளர்களின் கூட்டாண்மையிலிருந்து உருவான ஒரு வலுவான மற்றும் ஆழமான தொழில்நுட்ப அடுக்கு இது. பல சாதனங்கள் மற்றும் பல சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு ஏற்றவாறு 12 மொழிகளில் தடையற்ற மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட உள்ளடக்கத்தைப் பார்க்கும் அனுபவத்தை ZEE5 வழங்குகிறது.
கருத்துரையிடுக