'நாயாடி' திரை விமர்சனம்

'நாயாடி' திரை விமர்சனம் 


ஆதர்ஷ் மதிகாந்தம், காதம்பரி, பஃபின், நிவாஸ், அரவிந்த் சாமி, ரவிச்சந்திரன், கீதா லட்சுமி, பிரபல யூடியூபர் ஃபேபி, அருண் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். நாயகனான ஆதர்ஷ் மதிகாந்தம் இயக்கத்தில்,  உருவாகியிருக்கும் திரைப்படம் தான் 'நாயாடி'. 

அடிமை வம்சமாக இருந்த ஒரு சமூகத்தினர், வேட்டையாடி பிழைப்பு நடத்தி வந்தனர். அவர்கள், கிராமத்தில் இருப்பவர்கள் தங்களுக்கு பயப்பட வேண்டும் என்பதற்காக சில சூனியம் வைப்பதை கற்றுக் கொள்கிறார்கள். அப்படியாக, கிராமத்தில் இருப்பவர்களை பயமுறுத்தவும் மிருகங்களை வேட்டையாடவும் ஆக்ரோஷமான தோற்றத்தோடு திரிந்து வந்தனர். காலப்போக்கில் இவர்களே சூனியக்காரி என்று வாழ்ந்து வந்தார்கள். இவர்களுக்கு சூனியம் வைப்பதுவே தொழிலாக இருந்து வந்தது. இவர்களைத் தான் நாயாடி என்று அழைத்திருக்கிறார்கள். சுமார் 800 வருடத்திற்கு பிறகு இக்கால வாழ்வியல் சூழலுக்கு வருகிறது கதை.... 

அடிமைகளாக இருந்த அம்மக்கள் மனிதர்களிடமிருந்தும் விலங்குகளிடமிருந்தும் தங்களை பாதுகாத்துக் கொள்ள பில்லி சூனியம் உள்ளிட்ட மாந்தீரிகங்களை கற்றுக்கொள்கின்றனர்.

இதனிடையே யூட்யூப் சேனல் நடத்தும் ஆதர்ஷ் மதிகாந்தம், காதம்பரி, ஃபேபி உள்ளிட்ட 6 பேர் கொண்ட நண்பர்கள் குழு அசைன்மெண்ட் வருகிறது. கேரளாவில் இடம் ஒன்றை வாங்கியுள்ள நபர் அங்கு நாயாடி மக்களின் அமானுஷ்யம் இருப்பதாக கூறுகிறார். இது தொடர்பாக மக்களை நம்ப வைக்கும் வகையில் வீடியோ எடுத்து தருமாறு கேட்கிறார். 

பணத்துக்கு ஆசைப்பட்டு அங்கு செல்லும் குழுவினருக்கு பலவித அமானுஷ்யங்கள் நடக்கிறது. இதிலிருந்து தப்பிக்க முயற்சிக்கையில்  3 பேர் கொல்லப்படுகின்றனர்.  அங்கு, முழு நீள கருப்பு உடையில் ஒரு உருவம் அவர்களை பின் தொடர்கிறது. அந்த அமானுஷ்யத்திடம் இருந்து யாரெல்லாம் தப்பித்தார்கள்.? இந்த காட்டிற்குள் இவர்களை திட்டம் போட்டு அழைத்து வந்ததன் நோக்கம் என்ன.? என்பதே படத்தின் மீதிக் கதை.... 

இதுவரை திரையில் சொல்லப்படாத நாயாடி மக்கள் பற்றிய கதையை கையில் எடுத்ததற்கு இயக்குநர் ஆதர்ஷ் சொன்னது சிறப்பு. 

கதையின் நீளத்தை குறைத்திருக்கலாம்... இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.... கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருந்தால் மேலும் நன்றாக இருந்திருக்கும். 

மொத்தத்தில் இந்த 'நாயாடி' கதையில் ஒரு முறை நுழையலாம்.....

RATING: 3/5

லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.