'தண்டட்டி' காதலின் உணர்வு

'தண்டட்டி' காதலின் உணர்வு


நடிகர்கள் : 

பசுபதி, ரோகினி, விவேக் பிரசன்னா, முகேஷ், தீபா சங்கர், பூவிதா, ஜானகி, செம்மலர் அன்னம் மற்றும் பலர் 

இசை : கே.எஸ்.சுந்தரமூர்த்தி
ஒளிப்பதிவு : மகேஷ் முத்துசுவாமி
இயக்கம் : ராம் சங்கையா
தயாரிப்பு : பிரின்ஸ் பிக்சர்ஸ் – எஸ்.லக்‌ஷ்மன் குமார்

முதல் காட்சியிலேயே ஓய்வு பெறப் போகும் போலீஸ் கான்ஸ்டபிளாக பசுபதியை அறிமுகம் செய்து வைக்கிறார்கள். எதையும் வித்தியாசமாக செய்து உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகும் நபராக சுப்ரமணியை காட்டியிருக்கிறார்கள்.

தேனி மாவட்டம், கிடாரிப்பட்டி கிராமத்தை சேர்ந்த 57 வயது மூதாட்டியான ரோகிணி காணாமல் போகிறார். மூதாட்டி தங்கபொண்ணுக்கு (ரோகிணி) 4 மகள்கள், ஒரு மகன். தனது அப்பத்தாவை கண்டுபிடித்து தருமாறு கிஷோர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, அவருடன் சேர்ந்து காவலர் பசுபதி ரோகிணியை தேடி கண்டுபிடிக்கிறார். கண்டுபிடிக்கப்பட்ட ரோகிணி சில மணி நேரங்களில் இறந்து விட, அவரது உடலை கிடாரிப்பட்டிக்கு காவலர் பசுபதி எடுத்துச் செல்கிறார். இறந்த தாயின் காதில் இருக்கும் தண்டட்டியை கைப்பற்ற அவரது பிள்ளைகள் திட்டம் போட, திடீரென்று தண்டட்டி காணாமல் போய்விடுகிறது. 

காணாமல் போன தண்டட்டியை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவலர் பசுபதி இறங்க, அதனால் பல்வேறு பிரச்சனைகள் உருவாகிறது. அந்த பிரச்சனைகளை சமாளித்து, தண்டட்டியை பசுபதி எப்படி கண்டுபிடிக்கிறார்? அதை திருடியது யார்? ரோகிணி காணாமல் போனது ஏன்?  என்பதை நகைச்சுவையோடும், காதலோடும் சொல்வது தான் ‘தண்டட்டி’ படத்தின் மீதிக்கதை.....

இரண்டாம் பாதி முழுவதும் தண்டட்டியை கண்டுபிடிப்பதை பற்றியே கதை நகர்கிறது. அந்த தண்டட்டிக்கு பின்னால் இருக்கும் கதையை இயக்குநர் முன்பே கூறிவிட்டதால் நம்மையும் பரபரப்பு தொற்றிக்கொள்கிறது. நிலைமை சீரியஸாக இருந்தாலும் இரண்டாம் பாதியில் வரும் காமெடி ஓரளவுக்கு கை கொடுத்திருக்கிறது.



துக்க வீடு மற்றும் அங்கு நடக்கும் சடங்குகள், அங்கிருக்கும் மக்களின் மனநிலை மற்றும் உறவினர்களுக்கு இடையே நடக்கும் மோதல்கள் ஆகியவற்றை எதார்த்தமாக காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர் ராம் சங்கையா, ஒப்பாரி பாட்டிகளை படம் முழுவதும் காட்டியிருப்பதோடு, அவர்களை வைத்துக்கொண்டே ஒரு பாடல் காட்சியையும் படமாக்கியிருப்பது ரசிக்க வைக்கிறது. அதிலும், பசுபதியை கலாய்த்து தள்ளும் கோளாறு பாட்டியால் ஒட்டு மொத்த திரையரங்கமே சிரிப்பால் அதிர்கிறது. மகேஷ் முத்துசுவாமியின் ஒளிப்பதிவு கிராமத்து சடங்குகளையும், கிராமத்து மக்களையும் இயல்பாக படமாக்கியிருக்கிறது.

ரோகிணியின் மகள்களாக நடித்திருக்கும் தீபா சங்கர், பூவிதா, ஜானகி, செம்மலர் அன்னம் ஆகியோருக்கு வழக்கமான கிராமத்து கதாபாத்திரம் தான் என்றாலும், அதை நிறைவாக செய்திருக்கிறார்கள்.

மூதாட்டியின் மகன் விவேக் பிரசன்னா கம்பீரமாக தெரியவில்லை.... கிளைமேக்ஸ் காட்சியில் பாட்டியின் வயது ஹீரோவை விட அதிகமாக காட்டிருப்பது சிந்திக்க வைக்கிறது......

மொத்தத்தில் இந்த  'தண்டட்டி' காதலின் உணர்வு..... 


RATING: 3.8/5

thandatti movie

லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.