கிளெனிகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையில் ஹைபர்தெர்மிக் இன்ட்ராபெரிடோனியல் கீமோதெரபி மையம் திறப்பு!

கிளெனிகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையில்  ஹைபர்தெர்மிக் இன்ட்ராபெரிடோனியல் கீமோதெரபி மையம் திறப்பு!




சென்னை:

சென்னையில் முன்னணி கிளெனிகிள்ஸ் குளோபல் புற்றுநோய்களுக்கு பன்னோக்கு ஹெல்த் சிட்டி சிகிச்சை அளிக்க மையம் இன்ட்ராபெரிடோனியல் கீமோதெரபி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை கூடுதல் தலைமை செயலர், சென்னை பெருமாநகராட்சி கமிஷனர் டாக்டர் ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சிக்கு கிளெனிகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் அலோக் குல்லர், இம்மருத்துவமனையின் இயக்குனரும், புற்றுநோய் மையத்தின் தலைவரும், புற்றுநோயியல் அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் ராஜாசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 50 சதவீதத்துக்கும் அதிகமான கருப்பை புற்றுநோய், 30 முதல் 50 சதவீத வயிற்று புற்றுநோய் மற்றும் 20 சதவீத பெருங்குடல் புற்றுநோய் வயிற்று குழியின் பெரிட்டோனியல் என்னும் வயிற்று அறையின் மேற்பரப்பில் பரவுகிறது. இந்த வகை புற்று நோயால் தீவிரமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பல ஆண்டுகளாக கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது அவர்களின் உயிர்வாழும் விகிதத்தை 1 முதல் 2 ஆண்டுகள் அதிகரிக்க உதவுகிறது. சைட்டோரேடக்டிவ் அறுவை சிகிச்சை மற்றும் ஹைபர்தெர்மிக் இன்ட்ராபெரிடோனியல் கீமோதெரபி போன்ற தீவிரமான அறுவை சிகிச்சை போன்றவற்றின் காரணமாக, இந்த நோயாளிகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் 5 ஆண்டுகளுக்கு மேல் உயிர்வாழ்கின்றனர். 


தற்போது இந்த மருத்துவமனையில் துவக்கப்பட்டுள்ள இன்ட்ராபெரிடோனியல் கீமோதெரபி மையம் சிறப்பு வசதிகள் அறுவை சிகிச்சை புற்றுநோயியல் நிபுணர்கள், மருத்துவ நிபுணர்கள், கதிரியக்க வல்லுநர்கள், செவிலியர்கள் மற்றும் பிற பணியாளர்கள் உட்பட பலதரப்பட்ட சுகாதார நிபுணர்களின் சிறப்பான குழுவைக் கொண்டு செயல்பட உள்ளது. இந்த மையம் நோயாளிகளுக்கு சிறந்த ஆலோசனையை வழங்குவதோடு, ஊட்டச்சத்துமிக்க உணவுகள் மற்றும் வலி மேலாண்மை உள்ளிட்ட ஆதரவு சேவைகளை வழங்கும், மேலும் இந்த துறையின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கும் பங்களிக்க உள்ளது. 

இது குறித்து கூடுதல் தலைமை செயலர், சென்னை பெருமாநகராட்சி கமிஷனர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறுகையில்:

இன்ட்ராபெரிட்டோனியல் வயிற்றுப் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கு அதிக துல்லியமான மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்களோடு நவீன உள்கட்டமைப்பு வசதிகளும் தேவைப்படுகிறது. கிளெனிகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையில் திறக்கப்பட்டுள்ள இந்த ஹைபர்தெர்மிக் இன்ட்ராபெரிடோனியல் கீமோதெரபி மையம் மேம்பட்ட மற்றும் உயர்தர புற்றுநோய் பராமரிப்பு மற்றும் சிகிச்சையை வழங்குவதில் மாநிலத்தின் சுகாதார உள்கட்டமைப்புக்கு மேலும் ஒரு சிறப்பாகும் என்று தெரிவித்தார். 


இது குறித்து இம்மருத்துவமனையின் இயக்குனரும், புற்றுநோய் மையத்தின் தலைவரும், புற்றுநோயியல் அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் ராஜாசுந்தரம் கூறுகையில்:

வழக்கமான கீமோதெரபி சிகிச்சையானது ரத்த ஓட்டத்தில் முழுவதும் பரவும்போது, ஹைபர்தெர்மிக் இன்ட்ராபெரிடோனியல் கீமோதெரபி சிகிச்சையானது நேரடியாக அடிவயிற்றில் புற்றுநோய் செல்களுக்கு கீமோதெரபியை வழங்குகிறது. இந்த சிகிச்சையில் செல்கள் அதிக அளவு கீமோதெரபிக்கு உட்படுத்தப்படுவதால், இந்த செயல்முறை மருந்தின் செயல்திறனை அதிகரிக்கிறது. இந்த சிகிச்சை துவங்குவதற்கு முன், நோயாளிக்கு முழுமையான சைட்டோரேடக்டிவ் அறுவை சிகிச்சை செய்யப்படும். அப்போது வயிற்று குழியின் திசுக்கள் பாதிப்பும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்படுகின்றன. இது போன்ற தீவிர வயிற்று புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 100 நோயாளிகளுக்கு மேல் எங்கள் மருத்துவமனையில் வெற்றிகரமான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். 

சைட்டோரிடக்டிவ் அறுவை சிகிச்சையில் ரெக்டோசிக்மாய்டு, வயிற்றின் ஆன்ட்ரம் மற்றும் பித்தப்பை போன்ற உறுப்புகளை பிரிப்பது அடங்கும் சைட்டோரிடக்டிவ் அறுவை சிகிச்சை செயல்முறையை தொடர்ந்து அளிக்கப்படும் சூடேற்றப்பட்ட கிருமி நீக்கம் செய்யப்பட்ட கீமோதெரபி கரைசலானது மீதமுள்ள புற்றுநோய் செல்களை ஊடுருவி அழிக்க ஹைபர்தெர்மிக் இன்ட்ராபெரிடோனியல் கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த கரைசல் தோராயமாக 41-42 டிகிரி செல்சியஸ் [105 மற்றும் 109 பாரன்ஹீட்டுக்கு இடையில்] சுமார் 90 நிமிடங்களுக்கு சூடேற்றப்படுகிறது. இந்த சிகிச்சைக்கு பின் அந்த கரைசல் அடிவயிற்றில் இருந்து நீக்கப்பட்டு சிகிச்சை நிறைவு பெறும்.

இது குறித்து இம்மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் அலோக் குல்லர் கூறுகையில்:

வயிற்றுப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அதிநவீன சிகிச்சையை வழங்கும் நோக்கில் நாங்கள் இங்கு இந்த மையத்தை திறந்துள்ளோம். டாக்டர். ராஜாசுந்தரம் மற்றும் அவரது நிபுணர்கள் குழு, வயிறு சம்பந்தமான அனைத்து புற்றுநோய்களுக்கும் சிறப்பான சிகிச்சையை அளித்து வருகிறது என்று தெரிவித்தார்.


லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.