'மார்க் ஆண்டனி' படம் எப்படி இருக்கு?!

'மார்க் ஆண்டனி' படம் எப்படி இருக்கு?! 



ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் மற்றும் எஸ்.ஜே. சூர்யா இணைந்து நடித்து வெளிவந்துள்ள திரைப்படம் தான் “மார்க் ஆண்டனி”.

கதையில் மார்க்- விஷால் , ஜாக்கி பாண்டியன்- S.J சூர்யா 

பல வருட முயற்சிக்கு பின் 1975ல் Phone மூலம் டைம் டிராவல் செய்து பேசக்கூடிய கருவியை கண்டுபிடிக்கிறார் சிரஞ்சீவி (செல்வராகவன்). இந்த கருவியை பயன்படுத்தி தன்னுடைய வாழ்க்கையில் நடந்த விஷயங்கள் மாற்றுகிறார். அப்படி அவர் செய்யும் முயற்சியில் அவருடைய உயிர் பறிபோகிறது. பிறகு 20 ஆண்டுகளுக்கு பின் 1995ல் இந்த டைம் டிராவல் Phone மார்க்கிடம் கிடைக்கிறது.  

தன்னுடைய அப்பாதான் அம்மாவை கொன்றார் என்றும் அவர் மிகவும் மோசமானவர் என்றும் வாழ்ந்து வரும் மார்க், ஜாக்கி பாண்டியனை அப்பாவாக நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறான். அந்த மிஷின் மூலம் தன்னுடைய அப்பா மிகவும் நல்லவர் என்றும் ஜாக்கி பாண்டியன் தான் அவரை கொன்று அவரை பற்றி சமுதாயத்தில் தவறான பிம்பத்தை உருவாக்கி இருக்கிறான் என்பதையும் தெரிந்து கொள்கிறான். பிறகு அவன் எடுத்த முடிவு என்ன?  டைம் டிராவல் மூலம் என்ன நடந்தது? என்பதே மீதி கதை……

விஷால், எஸ். ஜே. சூர்யா ஆகிய இருவரை சுற்றி தான் முழு கதையும் நகர்கிறது.  மொத்த சீனையே தன் பக்கம் இழுத்து திரையரங்கேயே ஆர்ப்பரிக்க வைத்து விடுகிறார் S.J சூர்யா. இரண்டாம் பாதியில் வரும், சில்க் ஸ்மிதா காட்சி, மகன் எஸ்.ஜே. சூர்யாவிற்கும், தந்தை எஸ்.ஜே. சூர்யாவிற்கும் இடையிலான காட்சி சிறப்பு.

பழைய பாடல்களை அருமையாக ரீமிக்ஸ் செய்து திரையரங்கில் ரசிகர்களை ஆட்டம் போட வைத்து விட்டார் ஜி. வி. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தன்னுடைய விறுவிறுப்பான திரைக்கதையால் படத்தை எந்த தோய்வும் இல்லாமல் கொண்டு சென்று இருக்கிறார் என்றே சொல்லலாம். 

மொத்தத்தில் 'மார்க் ஆண்டனி' மாஸ்......

RATING: 4/5

 

லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.