'மார்கழி திங்கள்' திரைவிமர்சனம்
"என் இனிய தமிழ் மக்களே..... நான் உங்கள் பாரதி ராஜா என்னை இயக்குனராக ஏற்றுக்கொண்டது போலவே என் மகன் மனோஜை இயக்குனராக ஏற்றுக் கொள்ளுங்கள்" என்று பாரதிராஜா அவர்களின் வேண்டுகோளோடு தொடங்குகிறது மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் இளையராஜா இசையில் வெளிவந்துள்ள 'மார்கழி திங்கள்' திரைப்படம்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு ஊரில் உள்ள பள்ளியில் ஒரே வகுப்பில் படிப்பவர்கள் கவிதாவும், வினோத்தும். படிக்கும் இருவருக்கும் இடையே காதல் வருகிறது. பிறகு இருவரும் வெவ்வேறு கல்லூரியில் சேர்ந்து படிக்கிறார்கள்.
கல்லூரி படிப்பை முடித்த பின்பு தான் திருமணம் அதுவரை இருவரும் சந்தித்து பேசக் கூடாது என்று கண்டிஷன் போடுகிறார் கவிதாவின் தாத்தா. பிறகு அவர்களுக்கு என்னென்ன பிரச்சனைகள் வந்தது? காதலில் வெற்றி அடைந்தார்களா? என்பதே கதை......
உயிருக்கு உயிராக நேசிக்கும் ஒருவரின் நம்பிக்கைத் துரோகத்தின் விளைவை தான் படம் சொல்ல முயல்கிறது. அதற்கு வலுச் சேர்க்க விடலைப் பருவத்து காதலாகத் தொடங்கும் கதை, சாதி, ஆணவக் கொலை எனச் சுற்றி வருகிறது. பாரதி ராஜாவின் குரலில் சிறிது தளர்ச்சி தெரிந்தாலும் தாத்தாவாக நன்றாக நடித்துள்ளார். இது ஒரு காதல் படம் என்பதை அடிக்கடி நினைவு படுத்துவது இளையராஜாவின் இசைதான். கவிதாவாக நடிக்கும் ரக்ஷினி காதல் காட்சிகளில் மிக அழகாக நடித்துள்ளார்.
இந்த கதைக்கு ஏற்றது போல் படத்தொகுப்பிலும் ஒளிப்பதிவிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் மேலும் நன்றாக இருந்திருக்கும்.
மொத்தத்தில் இந்த 'மார்கழி திங்கள்' காதல் உணர்வு......
RATING: 3/5
கருத்துரையிடுக