தலைமைச் செயலகம் தொடரின் விமர்சனம்
இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் கிஷோர், ஷ்ரேயா ரெட்டி, பரத், ரம்யா நம்பீசன், ஆதித்யா மேனன், கனி குஸ்ருதி, நிரூப் நந்தகுமார், தர்ஷா குப்தா, சாரா, சித்தார்த் விபின், ஒ ஜி எம் , சந்தான பாரதி, கவிதா பாரதி உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் தொடர் தான் "தலைமைச் செயலகம்".
சரி வாங்க தொடரின் விமர்சனத்தை பார்ப்போம்:
தமிழக அரசியல் களத்தின் பின்னணியில் நடக்கும் கதையில், முதல்வர் அருணாசலம் (கிஷோர்) 15 ஆண்டுகளுக்கு முந்தைய ஊழல் குற்றச்சாட்டின் வழக்கு விசாரணையை எதிர்கொள்கிறார். சாட்சிகள் அனைத்தும் முதல்வருக்கு எதிராக உள்ள நிலையில், தீர்ப்பும் அவருக்கு எதிராக தான் வர வாய்ப்பிருப்பதாக அவரைச் சுற்றியுள்ளவர்கள் அறிகின்றனர்.
இந்தச் சூழலில் அவரைச் சுற்றியுள்ளவர்கள் முதல்வர் நாற்காலியை ஆக்கிரமிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கின்றனர். கிஷோரின் மூத்த மகளும் அமைச்சருமான ரம்யா நம்பீசன் அப்பாவை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று முயற்சிகள் செய்தாலும், முதல்வர் பதவிக்கு ஆசைப்படுகிறார். அதே போல இரண்டாவது மருமகனான நிரூப் நந்தகுமாரும் முதல்வர் பதவிக்கு ஆசைப்படுகிறார். இந்த சூழலில், கிஷோரின் நெருங்கிய தோழியும் கட்சி ஆலோசகருமான கொற்றவையும் (ஷ்ரேயா ரெட்டி) முதல்வரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று முயற்சிகள் செய்து வந்த நிலையில், அவரும் அப்பதவிக்கு குறி வைக்கிறார்.
இவர்கள் அனைவரும் முதல்வர் நாற்காலிக்கு ஆசைப்படுவதோடு அதற்காகத் தீவிரமாக இயங்க ஆரம்பிக்கிறார்கள். இதற்கிடையில், ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு ஒதுக்குப்புறமான சுரங்க கிராமத்தில், அரசியல் பிரமுகர்கள் உட்பட பல கொலைகளை செய்து தப்பி வந்த துர்காவை தேடி, சிபிஐ போலீஸ் அலைந்து வந்த நிலையில், சிபிஐ அதிகாரி நவாஸ் கான் (ஆதித்யா மேனன்), இந்த பழமையான கொலை வழக்கை ஆராய்கிறார். அதே வேளையில், பரபரப்பான சென்னையில், புறநகர்ப் பகுதியில் கிடைக்கும் துண்டிக்கப்பட்ட கை மற்றும் தலையினை குறித்து டிஜிபி மணிகண்டன் (பரத்) தீவிர விசாரணையைத் தொடங்குகிறார். பிறகு என்ன நடந்தது என்பதே கதை.....
அசத்தியிருக்கிறார் நடிகர் கிஷோர். போலீஸ் அதிகாரியாக நடித்த பரத், சிபிஐ அதிகாரியாக வரும் ஆதித்யா மேனன், ரம்யா நம்பேசன், கனி குஸ்ருதி, நிரூப் நந்தகுமார், தர்ஷா குப்தா, சாரா பிளாக், சித்தார்த் விபின், ஒய்ஜிஎம், சந்தான பாரதி, கவிதா பாரதி ஆகியோர் தனது பணியை நன்றாக செய்து இருக்கிறார்கள்.
கண்டெய்னர், ஹெலிகாப்டர் விபத்து, ஊழல் வழக்கு வேறு மாநிலத்தில் விசாரிக்கப்படுவது, வழக்கு தொடுப்பது மத்திய அரசைச் சேர்ந்தவர், முதல்வரை சிறைக்கு தள்ளி மாநில அரசைக் கைப்பற்ற துடிக்கும் மத்திய அரசு, வட இந்தியாவின் நிலை என பல நிகழ்கால நிகழ்வை கிண்டியிருக்கிறார் இயக்குனர்.
மொத்தத்தில் இந்த தொடர் அரசியல் அதிர்வு....
RATING: 3.8/5
கருத்துரையிடுக