குரு மாங்குடி துரைராஜ ஐயர் அவர்களுக்கு கலை வடிவில் அஞ்சலி

பாவார்ப்பணம் குரு மாங்குடி துரைராஜ ஐயர் அவர்களுக்கு கலை வடிவில் அஞ்சலி




சென்னை:

குரு மாங்குடி துரைராஜ ஐயர் சித்தயடைந்த தினத்தை அவரது சிஷ்யை குரு ரேவதி ராமசந்திரன் கடந்த 25 வருட காலமாக கலை வடிவமாக  பாவார்ப்பணம் என்ற பெயரில் அஞ்சலி செலுத்தி வருகிறார்.

இதில் இளம் கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்தும் , மூத்த கலைஞர்களை கெளரவித்தும் வருகிறார்கள்.

இந்த வருடம் ஆகஸ்ட் 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் சென்னை மயிலாப்பூர் ரசிக ரஞ்ஜனி சபாவில் இரண்டு நாள் விழாவாக கொண்டாடபட்டது.

முதல் நாளான 28 ஆம் தேதி குரு ரேவதி ராமசந்திரனின் மகள் மற்றும் சிஷ்யையான மனஸ்வினி நாட்டிய கோர்வை செய்து லால்குடி கிருஷ்ணன் அவர்கள் இசையமைப்பில் ப்ளுதி என்ற தலைப்பில் மிக நேர்த்தியான நாட்டிய நாடகம் ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை கொண்டது. 

தொடர்நது கலாசாதனாலயா மாணவிகளின் ஆயர் குல திலகம் நாட்டிய நாடகம் கண்ணணின் பெருமையை வெளிகாட்டும் விதமாமாக அமைந்தது.

நிகழ்ச்சியில் முன்னனி கலைஞர் திருமதி. பத்மா சுப்பிரமணியன் , நல்லி திரு. குப்புசாமி செட்டியார், பாரதி வித்யாபவன் திரு இராமசாமி,  க்ளீவ்லேன்ட் திரு. சுந்திரம், நாடக நடிகர். காத்தாடி ராமமூர்த்தி மற்றும் பல நடன கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

விழா நிகழ்ச்சியை கலாசாதனாலயா  மாணவிகளும் பெற்றோர்களும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.