GOAT REVIEW: கோட் விமர்சனம்
நடிகர் விஜய் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், சினேகா, மீனாட்சி செளத்ரி, யோகிபாபு உள்ளிட்ட பெரிய நட்சத்திரங்கள் பலர் நடித்து வெளியாகியுள்ள படம் தான் 'கோட்'. யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசை அமைத்திருக்கிறார்.
சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்:
தீவிரவாத ஒழிப்புத் துறையில் அதிகாரியாக இருக்கும் காந்தி (விஜய்) பல தீவிரவாத சதிகளை முறியடிக்கும் சிறப்பு ஏஜெண்டாக இருக்கிறார். அப்படி கென்யாவில் தீவிரவாத செயல்களைச் செய்பவர்களை தன் குழுவுடன் (பிரபு தேவா, பிரஷாந்த், அஜ்மல்) அழிக்கிறார்.
அதே நேரம், அமைதியான குடும்பத் தலைவனாக மனைவி (ஸ்னேகா), மகனுடன் வாழ்ந்து வருகிறார். எதிர்பாராத நிகழ்வு போல், தாய்லாந்தில் இன்னொரு தீவிரவாத திட்டத்தை முறியடிக்கக் குடும்பத்துடன் செல்கிறார் விஜய். அங்கு பார்த்தால் வேறு பிரச்சனை வருகிறது. எப்படி சமாளித்தார்? என்ன நடந்தது? என்பதே 'கோட்' கதை.
வயதான விஜய், இளவயது விஜய் என இதுவரை தமிழில் செய்யாத முயற்சியாகவே டீஏஜிங் தொழில்நுட்பத்தை அசத்தலாக பயன்படுத்தியிருக்கிறார்கள். விஜய் நடிப்பு சிறப்பு. சண்டை காட்சிகள் சத்தம் அரங்கத்தை அதிர வைத்துவிட்டது. யுவன் இசை சூப்பர்.
நகைச்சுவை காட்சியிலும் சஸ்பென்ஸ் காட்சியிலும் கூடுதல் கவனம் தேவை....
மொத்தத்தில் இந்த 'கோட்' குடும்ப அக்கறையுள்ள அதிகாரி....
RATING: 3.7/5
கருத்துரையிடுக