ஹிட்லர் விமர்சனம்
நடிகர் விஜய் ஆண்டனி கெளதம் வாசுதேவ் மேனன் , ரியா சுமன் , சரண் ராஜ் , விவேக் பிரசன்னா , ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்து வெளியாகியுள்ள படம் தான் 'ஹிட்லர்'
சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்:
தேனி மாவட்ட மலைகிராமம் ஒன்றில் ஆற்றை கடக்க முயலும் கூலித் தொழில் செய்யும் பெண்கள் ஆற்று வெள்ளத்தில் மூழ்கி இறக்கும் காட்சியில் தொடங்குகிறது படம். கதை அப்படியே நகர்ந்து சென்னைக்கு வருகிறது. தேர்தல் நெருங்கி வர ஐந்தாவது முறையாக ஆட்சிக்கு வர காத்திருக்கிறது தமிழ் திராவிட சமூதாயக் கட்சி.
இந்த கட்சியின் பொதுப்பணித்துறை அமைச்சராக இருக்கும் சரண் ராஜ் ஊழல் வழக்கில் சிக்கி மக்களின் ஆதரவை இழக்கிறார். எப்படியாவது மக்களுக்கு பணத்தைக் கொடுத்து தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் தொகுதிக்கு பிரித்துக் கொடுக்க எடுத்துச் செல்லப்படும் கோடிக்கணக்கான பணத்தை யாரோ திருடிவிட்டு செல்கிறார்கள்.
இத்துடன் அமைச்சரின் ஆட்களை கொலையும் செய்துவிடுகிறார்கள். இந்த கொலையை விசாரிக்கிறார் கெளதம் வாசுதேவ் மேனன். இன்னொரு பக்கம் சென்னைக்கு புதிதாக வேலை தேடி வந்து, லோக்கல் ரயிலில் நாயகியை பார்த்து அவர் மேல் காதலில் விழுகிறார் நாயகன் விஜய் ஆண்டனி. இரண்டு கதைகளும் மாறி மாறி செல்கிறது. அந்த திருடர்கள் யார்? பின்னணி என்ன என்பதே கதை.....
மடோனா செபாஸ்டியன் , ஐஸ்வர்யா ராஜேஷ், நாயகி ரியா சுமன் ஆகியோர் தனக்கு கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். ரெடின் கிங்ஸ்லி காமெடி காட்சி சுமார் தான். பின்னணி இசை நன்றாக உள்ளது. முரளியின் சண்டைக் காட்சிகள் சிறப்பாக அமைந்திருந்தது.
முதல் பாதி பார்த்த உடனே இரண்டாம் பாதியை சொல்லும் அளவில் கதை உள்ளது. சில காட்சிகளில் லாஜிக் இல்லை. கதையில் கூடுதல் கவனம் தேவை....
மொத்தத்தில் இந்த 'ஹிட்லர்' எதார்த்த திருடன்....
RATING: 3/5
கருத்துரையிடுக