Lapper Bandhu Movie Review

லப்பர் பந்து விமர்சனம்




அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளன படம் தான் 'லப்பர் பந்து'.

சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்:

கிரிக்கெட் மீது ஈடுபாடு கொண்ட சிறுவனாக இருக்கும் அன்பு (ஹரிஷ் கல்யாண்) பள்ளியை கட் அடித்துவிட்டு கிரிக்கெட் ஆட செல்கிறார். ஜாலி ஃப்ரெண்ட்ஸ் டீம் என்ற அணியில் இருக்கும் வெங்கடேஷ் (டிஎஸ்கே), தாழ்த்தப்பட்ட சாதியை காரணம் காட்டி அன்புவை அணியில் வேண்டா வெறுப்பாக சேர்த்துக் கொள்கிறார். 

அதே போட்டியில் எதிரணியில் பெரும் பில்டப் உடன் அந்த பகுதியின் சச்சின் போல கொண்டாடப்படும் கெத்து பூமாலை (அட்டகத்தி தினேஷ்) பேட்டிங்கில் வெளுத்து வாங்குகிறார். பேட்டிங்கில் அவருடைய பலவீனத்தை சரியாக அன்பு கணித்தாலும், அவருக்கு பவுலிங் வாய்ப்பு கிடைக்காமல் போகவே அங்கிருந்து விரக்தியுடன் கிளம்பி விடுகிறார். 

பல ஆண்டுகளுக்குப் பிறகு ரப்பர் பந்து ரூ.35-க்கு விற்கப்படும் தற்போதைய காலகட்டத்தில் இளைஞனாக இருக்கும் அன்பு, யாரென்று தெரியாமலேயே கெத்து பூமாலையின் மகளை காதலிக்கிறார். 

ஒரு போட்டியில் தற்செயலாக கெத்து - அன்பு இருவரும் மோதும்போது இருவருக்குள்ளும் ஈகோ பிரச்சினை வெடிக்கிறது. இந்த ஈகோ பிரச்சினை இருவரது தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல சிக்கல்களைக் கொண்டுவருகிறது. இருவரும் அந்த சிக்கல்களிலிருந்து மீண்டது எப்படி? என்பதே மீதிக்கதை....

ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் ஆகியவர்களின் பிடிவாதமான நடிப்பை படத்தில் மிகப் பெரிய பிளஸ் ஆக அமைந்திருக்கிறது.

நாயகியாக ஹரிஷ் கல்யாணின்  நடிப்பு சிறப்பு. ஷான் ரோல்டன் இசையில் பாடல்களை காட்டிலும், பின்னணி இசை மிக சிறப்பாக அமைந்திருக்கிறது.

நகைச்சுவையில் மட்டும் கூடுதல் கவனம் தேவை....

மொத்தத்தில் இந்த 'லப்பர் பந்து' சிக்ஸ் சில் பறக்கும்....

RATING: 3.9/5

லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.