Dr. Mohan's On Wheels project launched

உலக நீரிழிவு தினத்தையொட்டி டாக்டர் மோகன்'ஸ் நீரிழிவு சிறப்பு மையம் சார்பில் நீரிழிவு பராமரிப்பு, மேம்பட்ட சிகிச்சை அளிக்க ஹெல்த்தி ஏஜிங் கிளினிக், டாக்டர். மோகன்'ஸ் ஆன் வீல்ஸ் திட்டம் துவக்கம் 



சென்னை: 

நீரிழிவு நோய்க்கு மேம்பட்ட சிகிச்சை அளிக்கவும், இந்தியாவில் உள்ள வயதான மக்களின் மருத்துவ தேவைகளைப் பூர்த்தி செய்யவும், ஹெல்த்தி ஏஜிங் கிளினிக் மற்றும் டாக்டர். மோகன்'ஸ் ஆன் வீல்ஸ் திட்டத்தை டாக்டர் மோகன்'ஸ் நீரிழிவு சிறப்பு மையம் அறிமுகம் செய்துள்ளது. 

இந்த 2 புதிய முன்முயற்சி திட்டங்கள் மூலம், இந்தியாவில் நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருப்பதற்கும், அதற்கான சிகிச்சை முறை, தடுப்பு பராமரிப்பு மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது குறித்து டாக்டர் மோகன்'ஸ் நீரிழிவு சிறப்பு மையம் கவனம் செலுத்த உள்ளது.

ஆண்டுதோறும் 'உலக நீரிழிவு தினம்' நவம்பர் 14-ந்தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதையொட்டி, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் வீடு தேடி சென்று சிறப்பான மருத்துவ சேவையை இந்த மையம் வழங்க உள்ளது. இதன்மூலம் வயதான நோயாளிகள் எங்கும் அலையாமல் தங்கள் வீடுகளிலேயே நீரிழிவு நோய்க்கான சிகிச்சை பெறலாம்.

ஹெல்த்தி ஏஜிங் கிளினிக், இந்தியாவில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது வயதானவர்கள், குறிப்பாக நீரிழிவு நோயாளிகளின் தனிப்பட்ட மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்வதற்காக துவக்கப்பட்டுள்ளது. வயதானவர்கள் நீரிழிவு நோயால் ஏற்படும் சவால்களை சமாளிப்பதற்கும், அதனால் ஏற்படும் பிரச்சினைகளை குறைப்பதற்கு சிறந்த மருத்துவ சிகிச்சை மற்றும் தனித்துவமிக்க கவனிப்பு ஆகியவற்றை வழங்குவதற்காக இந்த கிளினிக்கில் பல்துறை மருத்துவ நிபுணர்கள் குழு உள்ளது. 

இது குறித்து டாக்டர் மோகன்'ஸ் நீரிழிவு சிறப்பு மையத் தலைவர் டாக்டர் வி. மோகன் கூறுகையில்:

ஆரோக்கியமான முதுமை என்பது மிகுந்த மகிழ்ச்சியை தரக்கூடியதாகும். இது மனதும் உடலும் ஒருசேர ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே ஏற்படும். அந்த வகையில் தனிநபர்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் அவர்களுக்குத் தேவையான ஆதரவை வழங்குவதை உறுதிசெய்யும் விதமாக, சுகாதாரப் பாதுகாப்புக்கான அணுகுமுறையை வழங்குவதில் நாங்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் சேவையாற்றி வருகிறோம். அந்த வகையில், எங்களின் இந்த புதிய கிளினிக், வயதான நோயாளிகள் எதிர்கொள்ளும் மருத்துவ சவால்களை பூர்த்தி செய்து, அவர்களுக்கு சிறப்பான மருத்துவ சேவை செய்வதற்காக துவக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உடல் ஆரோக்கியம். மன உறுதி மற்றும் அறிவாற்றல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, எங்கள் நோயாளிகளின் நல்வாழ்வை மேம்படுத்தவும், வயதாகும்போது முழுமையான, நிறைவான வாழ்க்கையை வாழவும் நாங்கள் அவர்களுக்கு உதவ இருக்கிறோம் என்று தெரிவித்தார்.


டாக்டர் மோகன்'ஸ் நீரிழிவு சிறப்பு மையத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஆர்.எம். அஞ்சனா கூறுகையில்:

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் திறன் குறைதல், மனச்சோர்வு போன்ற பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர் என்பதை உணர்ந்து, இந்தியாவில் முதல் முறையாக எங்கள் நீரிழிவு மையத்தில் ஹெல்த்தி ஏஜிங் கிளினிக்கை துவக்குவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். மனச்சோர்வு மற்றும் மறதி சம்பந்தமான ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறியும் வகையில் எங்கள் கிளினிக் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தச் பிரச்சினைகளுக்கு தீர்வளிப்பதற்கும், தடுப்பதற்கும் அதிநவீன கருவிகள் மற்றும் சிறந்த சிகிச்சை முறைகள் இங்கு உள்ளன. இந்த சிறப்புப் பராமரிப்பின் மூலம், எங்கள் நோயாளிகளின் உடல் ஆரோக்கியம் மட்டுமன்றி, மன உறுதி, அறிவாற்றலையும் மேம்படுத்த முடியும் என்று தெரிவித்தார்.

இது குறித்து பேசிய டாக்டர் மோகன்'ஸ் நீரிழிவு சிறப்பு மையத்தின் ஆலோசகர் டாக்டர். எஸ். உத்ரா கூறுகையில்:

சிந்திக்கும் திறன் குறைதல் மற்றும் மறதி போன்றவற்றை முன்கூட்டியே கண்டறிவது மிகவும் முக்கியமானது, மேலும் இந்த அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிய இங்கு அதிநவீன கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. எங்களின் வயதான நோயாளிகளுக்கு, தனிப்பயனாக்கப்பட்ட சிகிச்சை திட்டங்கள் மற்றும் அவர்களுக்கான ஆதரவு என்பது மிகவும் முக்கியமானது, மேலும் இந்த கிளினிக் மூலம் மேலும் கூடுதலாக கவனித்து அவர்களுக்கு சிறப்பான சிகிச்சையை அளிக்க இருக்கிறோம் என்று தெரிவித்தார்.

நோயாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று மருத்துவ சேவை வழங்கும் விதமாக இந்த மையத்தின் சார்பில் 'டாக்டர். மோகன்'ஸ் ஆன் வீல்ஸ்'என்னும் திட்டமும் துவக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று அங்கு அவர்களுக்கான மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகள் வழங்கப்படும். நோயாளிகள் மருத்துவமனைக்கு செல்லாமல் நீரிழிவு நோயை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க இதன் மூலம் அவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இது குறித்து டாக்டர் மோகன் விரிவாக கூறுகையில்:

நீரிழிவு சிகிச்சையை அனைவரிடத்திலும் கொண்டு செல்லும் வகையில் இந்த திட்டத்தை நாங்கள் துவக்கி உள்ளோம். வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்கு மருத்துவமனைக்கு வர முடியாதவர்களுக்கு உதவிடும் வகையில் நாங்கள் 'டாக்டர். மோகன்'ஸ் ஆன் வீல்ஸ்' திட்டத்தை துவக்கி உள்ளோம். இதன் மூலம் அவர்களின் இடங்களுக்கே சென்று சிகிச்சை அளித்து அவர்களின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த இருக்கிறோம் என்று தெரிவித்தார். 

இந்த புதுமையான சேவை குறித்து டாக்டர் ஆர்.எம். அஞ்சனா கூறுகையில், மருத்துவ சேவையை அணுகுவது என்பது பெரும்பாலான மக்களுக்கு ஒரு சவாலாக உள்ளது. அந்த இடைவெளியை குறைக்கும் விதமாக எங்களின் இந்த புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நோயாளிகள் இருக்கும் இடத்திற்கே சென்று அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதன் மூலம் அவர்களுக்கு முன்னுரிமை அளித்து தனிப்பயனாக்கப்பட்ட சிகிச்சையை வழங்க முடியும். இந்த முன்முயற்சியானது சுகாதார ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்கும், சிறந்த நீரிழிவு சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு உதவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். 

ஹெல்த்தி ஏஜிங் கிளினிக் மற்றும் டாக்டர் மோகன்ஸ் ஆன் வீல்ஸ் ஆகியவை நீரிழிவு நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளித்து அவர்கள் ஆரோக்கியமாக வாழ டாக்டர் மோகன்'ஸ் நீரிழிவு சிறப்பு மையம் மேற்கொண்டு வரும் அர்ப்பணிப்புமிக்க மருத்துவ சேவைகளை பிரதிபலிக்கும் வகையில் துவக்கப்பட்டு உள்ளது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதற்கான சிகிச்சையை எளிதாக பெறும் வகையில் உலக நீரிழிவு தினம் 2024ஐயொட்டி இந்த புதிய திட்டங்களை இந்த மையம் அறிமுகம் செய்துள்ளது. இதன் முக்கிய நோக்கம் மேம்படுத்தப்பட்ட சிகிச்சையை அனைவருக்கும் வழங்குவதும், சுகாதார ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதும் ஆகும். சிறந்த மருத்துவ சேவை மற்றும் மனிதநேயமிக்க நோயாளிகள் கவனிப்பு ஆகியவற்றின் மூலம் டாக்டர் மோகன்'ஸ் நீரிழிவு சிறப்பு மையம் நீரிழிவு மேலாண்மை மற்றும் சமூக ஆரோக்கியத்தில் புதிய சாதனைகளை படைத்து வருகிறது.

லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.