'சூது கவ்வும் 2' விமர்சனம்
இயக்குனர் எஸ்.ஜே. அர்ஜுன் இயக்கத்தில் நடிகர்கள் மிர்ச்சி சிவா, கருணாகரன், எம்.எஸ். பாஸ்கர், ராதாரவி ஆகியோர் நடித்துள்ள படம் தான் 'சூது கவ்வும் 2'
சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்:
சூது கவ்வும் முதல் பாகத்தின் இறுதியில் அரசியலில் என்ட்ரி கொடுக்கும் கருணாகரன், இரண்டாம் பாகத்தில் நிதி அமைச்சராக 3 முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி செய்து வருகிறார். ஊழல் செய்து மட்டுமே நிதி அமைச்சராக இருக்கும் கருணாகரன் ஒரு கட்டத்தில் மாட்டிக்கொள்கிறார். முதல் பாகத்தில் எப்படி விஜய் சேதுபதி கடத்தல் தொழில் செய்து வந்தாரோ, அதே போல் இரண்டாம் பாகத்தில் தனக்கென்று சில கொள்கை, கோட்பாடுகளை கொண்டு கடத்தல் தொழில் செய்து வருகிறார் மிர்ச்சி சிவா. அரசியல் சிக்கலில் மாட்டிக் கொள்ளும் கருணாகரனை, மிர்ச்சி சிவா கடத்துகிறார். பிறகு என்ன நடந்தது? என்பதே கதை.
மிர்ச்சி சிவா என அனைவரது நடிப்பும் அரசியல் நகைச்சுவை கலந்து கதை செல்கிறது. போதையில்லை என்றால் பாம்பு தெரிவது, பணம் வழங்குவதற்கு கேம்ஆப், வெள்ளை நிற சித்திரவதை அறை, கண்ணுக்குத் தெரியாத காதலிக்கு குண்டு பாய்ந்ததாக மருத்துவமனை செல்வது என சில ஐடியாக்கள் ரசிக்க வைக்கின்றன. எட்வின் லூயிஸ் விஸ்வநாத்தின் பின்னணி இசை பரவாயில்லை. தில்லையின் ஒளிப்பதிவு கதையோடு பயணிக்கிறது.
பாடலிலும், கதையிலும் இன்னும் கூடுதல் கவனம் தேவை.....
மொத்தத்தில் இந்த 'சூது கவ்வும் 2' போதை சிரிப்பு......
RATING: 2.9/5
கருத்துரையிடுக