MAX MOVIE REVIEW

மேக்ஸ் திரை விமர்சனம் 



தாணு தயாரிப்பில், கிச்சா சுதீப் நடிப்பில், விஜய் கார்த்திகேயன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் தான் 'மேக்ஸ்' 

சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்: 

இன்ஸ்பெக்டர் அர்ஜுன் (கிச்சா சுதீப்) இரண்டு மாத சஸ்பென்ஷனுக்கு பிறகு மீண்டும் பணியில் சேருகிறார், புதிய ஊரில், புதிய ஸ்டேஷனில். அவர் இன்ஸ்பெக்டராக சார்ஜ் எடுத்துக் கொள்வதற்கு முந்தைய நாள் இரவில், இருவர் குடித்துவிட்டு போலீசிடம் தகராறு செய்ய, அவர்களை அடித்து இழுத்து வந்து கைது செய்கிறார் அர்ஜுன். 

அவர் கைது செய்துவிட்டு வீட்டிற்கு போக, போலீஸ் ஸ்டேஷனில் இருந்தவர்கள் ஒரு வேலை என ஸ்டேஷனை பூட்டி விட்டு செல்ல, வந்து பார்க்கும் போது அந்த இரு கைதிகளும் ஒருவரை ஒருவர் தாக்கி போலிஸ் துப்பாக்கியால் சுட்டு இறந்துள்ளனர். இந்நிலையில் அங்கிருந்த CCTV-யும் வேலை செய்யாமல் இருக்கிறது. போலீசார் பதறுகிறார்கள்.  ஸ்டேஷனில் நடந்த சம்பவத்துக்கு காரணம் யார்? பிரச்சனைகளை எப்படி அர்ஜுன் சமாளிக்கிறார்? என்பதே கதை...

சுதீப் மாஸ் ஹீரோவாக கலக்கியிருக்கிறார். திரைக்கதை சோர்வடைய விடாமல் வேகமாக செல்கிறது. ஆக்க்ஷன் காட்சிகள் திரை அரங்கை அதிரவிடுகிறது. அஜனீஷ் இசை மற்றும் சேகர் கேமரா இரண்டும் ஒரு சிம்பிளான த்ரில்லரை, மிக பிரம்மாண்டமான த்ரில்லர் படமாக மாற்றுகிறது. பரபரப்பான திரைக்கதையை இன்னும் சுறுசுறுப்பை ஏற்றுகிறது கணேஷ் பாபுவின் படத்தொகுப்பு. 

சில லாஜிக் மீறல்கள் இருக்கிறது.... காவல் நிலையம் சரியான இடத்தில் வைத்திருக்கலாம். 

மொத்தத்தில் இந்த 'மேக்ஸ்' சர அடி...... 

RATING: 3.2/5


MAX MOVIE

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.