'கராத்தே கிட்: லெஜெண்ட்ஸ்' திரைவிமர்சனம்
ஜோனதன் என்ட்விஸ்டல் இயக்கத்தில் ஜாக்கி ஜான், ரால்பே மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் 'கராத்தே கிட்: லெஜெண்ட்ஸ்'
சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்:
மாஸ்டர் ஹான் நடத்தும் குங்ஃபூ பள்ளியில் பயிலும் மாணவர் லீ ஃபாங். லீயின் அம்மாவுக்கு அமெரிக்காவில் வேலை கிடைக்க, மேம்பட்ட வாழ்க்கை தரத்திற்காக அமெரிக்கா வருகிறார்கள், தாயும் மகனும். புதிய பள்ளி, புதிய மனிதர்கள் என திகைக்கும் லீக்கு அறிமுகமாகிறார் மியா. பீட்ஸா ஷாப் ஒன்று நடத்தி வரும் மியாவின் தந்தை விக்டருக்கும் பரிட்சயமாகிறார் லீ. கடன் பிரச்சனையில் சிக்கும் விக்டர், முன்னாள் பாய் ஃப்ரெண்ட் கார்னர் கொடுக்கும் டார்ச்சரில் மியா என இருவரின் பிரச்சனைகளையும் பார்க்கிறார் லீ.
கடந்த காலத்தில் நிகழ்ந்த இழப்பு ஒன்றால், இனி சண்டை செய்ய மாட்டேன் என அம்மாவிடம் சத்தியம் செய்து கொடுத்த லீ, Five Boroughs Tournament என்ற சண்டை போட்டியில் கலந்து கொள்ள நேர்கிறது. இதை தெரிந்த தனது அம்மா என்ன செய்தார்? போட்டியில் லீ வென்றாரா? என்பதே கதை...
கதையின் நாயகனாக பென் வாங், லீ என்ற கதாபாத்திரத்தில் அசத்தியுள்ளார், ஜாக்கி ஜான், ரால்பே கெஸ்ட் ரோல் போல் தான் வந்து செல்கின்றனர். நடிகர்களில் பெரிதாக கவர்வது ஜாக்கிசான்தான். சீரியஸாக பேசும் அதே தருணத்தில் அவர் செய்யும் சின்ன காமெடி நம்மை அத்தனை மகிழ்ச்சி ஆக்குகிறது. சண்டை காட்சிகள் ரசிக்க வைக்கிறது. படம் தொடங்கியதும் தெரியவில்லை, முடிவதும் தெரியவில்லை, பரபரப்பாக செல்கிறது. ஆனால்
கதையில் கூடுதல் கவனம் தேவை..... ஜாக்கிஜானை பல காட்சிகளில் காட்டி இன்னும் முக்கிய கதாபாத்திரம் கொடுத்திருக்கலாம்....
மொத்தத்தில் இந்த 'கராத்தே கிட்: லெஜெண்ட்ஸ்' ஒரு முறை பார்க்கலாம்....
RATING 2.9/5
கருத்துரையிடுக