MASK MOVIE REVIEW

மாஸ்க் விமர்சனம் 




விக்ரனன் அசோக் இயக்கத்தில் கவின், ஆண்ட்ரியா மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் 'மாஸ்க்' 

சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்:

சொந்தமாக டிடெக்டிவ் ஏஜென்சி வைத்திருப்பவர் வேலு. வாடிக்கையாளர்களின் பிரச்சினைகளை தீர்க்கும் அதே நேரத்தில் முடிந்தவரையில் அவர்களை தனது பொருளாதார தேவைகளுக்கு பயன்படுத்திக் கொண்டு பணம் ஒன்றே குறிக்கோளாக வாழ்கிறார். இன்னொரு பக்கம் துன்புறுத்தல்களுக்கு ஆளாகும் பெண் குழந்தைகளை  வைத்து தொண்டு நிறுவனம் நடத்தி அவர்களை வேறுவிதமாக பயன்படுத்தி வருகிறார் பூமி. இவர்கள் இருவரின் பாதைகளும் ஒரு மிகப்பெரிய கொள்ளை சம்பவத்தின் மூலம் குறுக்கிடுகின்றன. கொள்ளை போன பணத்தை எப்படியாவது மீட்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகின்றனர் இருவரும். கொள்ளையடிக்கப்பட்ட பணம் மீட்கப்பட்டதா? கொள்ளைக்கு காரணம் யார்? என்பதே மீதி கதை....

நாயகனாக நடித்திருக்கும் கவின், எதார்த்தமாக நடிக்க முயற்சி செய்திருக்கிறார். இவரது நடிப்பில் மற்றொரு நடிகரின் சாயல் தெரிகிறது. ஒரு சில இடங்களில் மட்டும் கவனிக்கும்படியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் ஆண்ட்ரியா, பார்வையிலேயே மிரட்டி இருக்கிறார். இவரது வில்லத்தனமான நடிப்பு படத்திற்கு பெரிய பலம்.

மற்றொரு நடிகை ஆக வரும் ருஹானி சர்மா அழகாக வந்து சென்று இருக்கிறார். அரசியல்வாதியாக நடித்திருக்கும் பவன் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்.சார்லி, ரமேஷ் திலக், கல்லூரி வினோத், அர்ச்சனா சந்தோக், ரெடின் கிங்ஸ்லீ ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது. 

நெல்சனின் குரலில் பயணிக்கத் தொடங்கும் படம் அவரது பட பாணியிலேயே செல்கிறது. கதாபாத்திரங்களின் பண்புகள், அவர்களின் சுயநலமான நோக்கங்கள் ஆகியவற்றை ஆடியன்ஸுக்கு புரியவைப்பதற்காக வைக்கப்பட்ட காட்சிகள் நிமிர்ந்து உட்கார வைக்கும் ரகம்.  ஜிவி பிரகாஷ் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். ஜி.வி. பிரகாஷ் பின்னணி இசையும் ஆர்.டி ராஜசேகரின் ஒளிப்பதிவும் கதையோடு பயணித்திருக்கிறது. ஆனால் 

காமெடியில் கூடுதல் கவனம் தேவை.... கதையை கொஞ்சம் லாஜிக்கோடு எடுத்திருந்தால் மேலும் நன்றாக இருந்திருக்கும்....  

மொத்தத்தில் இந்த 'மாஸ்க்' கணிக்கமுடியாத திருப்புமுனை.....

RATING: 3.9/5



கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.