AATTI MOVIE REVIEW

'ஆட்டி' திரைப்பட விமர்சனம் 



கிட்டு இயக்கத்தில் இசக்கி கார்வண்ணன் தயாரிப்பில் லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன், அபி நட்சத்திரா, பிரவீன் பழனிசாமி , காதல் சுகுமார் என பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் 'ஆட்டி'

சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்:

1970 களில் நடக்கும் ஒரு மலைகிராமத்தில் நடக்கும் கதையாக படம் தொடங்குகிறது. படிப்பில்லாத தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், ஓர் அஞ்சல் நிலையம், ஒரு காவல்நிலையம் என்றிருக்கும் அந்த ஊருக்கு மாற்றலாகி வருகிறார் காவல்துறை ஆய்வாளர் இசக்கி கார்வண்ணன். ஒரு வழக்குகூட வராத அந்த காவல்நிலையத்துக்கு இந்த ஆய்வாளர் வந்த நேரத்தில் ஒரு கொலைவழக்கு வருகிறது. 

அந்த ஊருக்கு பள்ளிக்கூடம் வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்று அங்கு ஆசிரியராக பிரவீன் பழனிசாமி கொலை செய்யப்படுகிறார். கொலை வழக்கை விசாரிக்க தொடங்கும் இசக்கி கார்வண்ணன், பெண்களுக்கு எதிராக குற்றம் செய்பவர்களை முகமூடி அணிந்த ஐந்து பேர் கொண்ட குழு கொடூரமாக கொலை செய்து வருவதை கண்டுபிடிக்கிறார். அவரைக் கொன்றது யார்? என்கிற விசாரணையில் விரிகிறது படம். 

காவல்துறை ஆய்வாளராக நடித்திருக்கும் இசக்கி கார்வண்ணன்,அந்த வேடத்துக்குரிய கம்பீரம் காட்ட முயன்றிருக்கிறார். என்கவுண்டர் சிறப்பு காவலராக சுட்டு தள்ளுகிறார்.   அபிநட்சத்திரா வேடமும் அவருடைய நடிப்பும் நன்று.சிறுவர்களுக்குப் பாடம் சொல்லித் தரும் நேரமும் ஆசிரியரிடம் சீறும் காட்சியும் சிறப்பு. படத்தில் பாடல்கள் இல்லை. 

பின்னணி இசை ஓகே தான்.  நகைச்சுவைக்கென இருக்கும் காதல் சுகுமார்,அஞ்சல்காரர் சௌந்தர்,பள்ளி ஆசிரியர் பிரவீன் பழனிசாமி,காவலராக வரும் செல்வகுமார் ஆகியோரும் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரங்களுக்குப் பொருந்தியிருக்கிறார்கள்.

முகமூடி அணிந்த பெண்களின் கொலைக் குழு பெண்களாக உதயா சுமதி, நிலா, சுமித்ரா தேவி, ஆஷிகா ஆகியோர் வெறுமனே பழிவாங்கும் குழுவாக இல்லாமல், காட்டின் சிறுதெய்வ வழிபாட்டுடன் தொடர்புடைய ஒரு மர்மமான வரலாற்றுப் பின்னணியைக் தாங்கி வருகிறார்கள். முகமூடிக்குப் பின்னால் இருந்து இவர்களின் கண்கள் காட்டும் ஆக்ரோஷமும், சண்டைக்காட்சிகளில் இவர்களின் வேகம் மற்றும் வாள்வீச்சும் தியேட்டரில் மாஸான த்ரில் உணர்வை ஏற்படுத்துகின்றன.

மொத்தத்தில் இந்த 'ஆட்டி'  தவறு செய்யும் ஆண்களை ஆட்டும்.

RATING: 3.4/5

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.